புதிய தலைமுறை மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் காரின் முதல் டீசர் வெளியீடு!

கோடீஸ்வர வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆவலை ஏற்படுத்தி இருக்கும், புதிய தலைமுறை மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் காரின் முதல் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது. 

புதிய தலைமுறை மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் காரின் முதல் டீசர் வெளியீடு!

மெர்சிடிஸ் பென்ஸ் கார் நிறுவனத்தின் மிகவும் உயரிய வகை சொகுசு செடான் கார் மாடலாக நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. உலக அளவில் அதிகம் விற்பனையாகும் உயரிய வகை சொகுசு செடான் கார் மாடலாகவும் இருந்து வருகிறது.

புதிய தலைமுறை மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் காரின் முதல் டீசர் வெளியீடு!

டிசைன், வசதிகள், இடவசதி, தொழில்நுட்பம் என அனைத்திலும் கோடீஸ்வரர்களின் எதிர்பார்ப்புகளை இந்த கார் கச்சிதமாக பூர்த்தி செய்து வருகிறது. இந்த நிலையில், வாடிக்கையாளர்களை எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்தில் புதிய தலைமுறை மாடலாக உருவாக்கப்பட்டுள்ளது.

MOST READ : பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!

புதிய தலைமுறை மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் காரின் முதல் டீசர் வெளியீடு!

தற்போது வரும் புதிய தலைமுறை மெர்சிடிஸ் பென்ஸ் கார் W223 என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த நிலையில், விரைவில் சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் இந்த கார் மீதான ஆவலை வாடிக்கையாளர் மத்தியில் அதிகரிக்கும் விதமாக, டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

புதிய தலைமுறை மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் காரின் முதல் டீசர் வெளியீடு!

இந்த காரின் முகப்பில் பிரம்மாண்ட க்ரில் அமைப்பு, எல்இடி ஹெட்லைட்டுகள், புதிய பம்பர் இடம்பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது. டீசர் படம் இல்லாமல், கடந்த மாதம் கசிந்த படங்களில் இந்த காரின் டிசைன் மாற்றங்கள் குறித்த மேலும் சில தகவல்கள் தெரிய வந்துள்ளது. முக்கோண வடிவிலான புதிய டெயில் லைட்டுகள், இரட்டை குழல் புகைப்போக்கி உள்ளிட்ட முக்கிய அம்சங்களாக இருக்கும்.

MOST READ: 80s, 90s கார்களை தேடி பார்த்து திருடிய கொள்ளையன்... சொன்னாரு பாருங்க ஒரு காரணம்... போலீஸே மிரண்டாங்க

புதிய தலைமுறை மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் காரின் முதல் டீசர் வெளியீடு!

உட்புறத்தில் புதிய டேஷ்போர்டு அமைப்பு மற்றும் அதில் இரட்டை திரைகள் இடம்பெற்றிருக்கும் என்பது உறுதியாக தெரிகிறது. தற்போது வரும் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் மாடல்களில் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை இரண்டு திரை அமைப்புகளுடன் கொடுக்கப்படுகிறது.

புதிய தலைமுறை மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் காரின் முதல் டீசர் வெளியீடு!

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் கார் பெட்ரோல், டீசல், மைல்டு ஹைப்ரிட் மாடல் மற்றும் பிளக் இன் ஹைப்ரிட் ஆகிய எரிபொருள் வகை மற்றும் தொழில்நுட்பம் கொண்ட மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MOST READ: ஸ்டைலான ப்ளாக் எடிசனை பெற்ற ஃபோக்ஸ்வேகன் டி-ராக்... காரை பற்றிய முழுவிபரம் உள்ளே...

புதிய தலைமுறை மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் காரின் முதல் டீசர் வெளியீடு!

வரும் செப்டம்பர் மாதம் முதல் உற்பத்தி துவங்கப்படும். ஜெர்மனியிலுள்ள சின்டெல்ஃபிங்கன் பகுதியில் உள்ள மெர்சிடிஸ் பென்ஸ் கார் ஆலையில்தான் புதிய தலைமுறை மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் கார் உற்பத்தி செய்யப்படும்

புதிய தலைமுறை மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் காரின் முதல் டீசர் வெளியீடு!

புதிய தலைமுறை மெர்சிடிஸ் பென்ஸ் கார் அடுத்த ஆண்டு பிற்பாதியில் இந்தியாவில் விற்பனைக்கு எதிர்பார்க்கலாம். பிஎம்டபிள்யூ 7 சீரிஸ், ஆடி ஏ8, போர்ஷே பனமெரா உள்ளிட்ட கார்களுக்கு கடும் நெருக்கடியை கொடுக்கும்.

Most Read Articles

English summary
Mercedes-Benz has released the next-generation S-Class teaser ahead of its world premiere.
Story first published: Tuesday, May 26, 2020, 11:24 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X