புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா இந்திய வருகை விபரம் வெளியானது!

புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா கார் எப்போது இந்தியாவில் விற்பனைக்கு கொணடு வரப்பட உள்ளது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த விரிவானத் தகவல்களை தொடர்ந்து படிக்கலாம்.

புதிய ஸ்கோடா ஆக்டேவியா இந்திய வருகை விபரம் வெளியானது!

இந்தியாவில் விற்பனையாகும் எக்ஸிகியூட்டிவ் ரக செடான் கார்களில் ஸ்கோடா ஆக்டேவியா சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. மிக நேர்த்தியான டிசைன், செயல்திறன் மிக்க எஞ்சின் தேர்வுகளுடன் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல மதிப்பை பெற்றிருக்கிறது.

புதிய ஸ்கோடா ஆக்டேவியா இந்திய வருகை விபரம் வெளியானது!

இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்தில், நான்காம் தலைமுறை மாடலாக ஸ்கோடா ஆக்டேவியா கார் உருவாக்கப்பட்டது. கடந்த ஆண்டு வெளிநாடுகளில் இந்த மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, இந்தியாவிலும் இந்த புதிய மாடல் அறிமுகம் செய்வதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

புதிய ஸ்கோடா ஆக்டேவியா இந்திய வருகை விபரம் வெளியானது!

ஆனால், தற்போது கொரோனா பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளதால், நான்காம் தலைமுறை மாடல் ஆக்டேவியா காரின் இந்திய வருகை சற்று தள்ளிப் போயுள்ளது. பைனான்ஸியல் எக்ஸ்பிரஸ் தளம் வெளியிட்டுள்ள செய்தியின்படி, அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது தெரிய வந்துள்ளது.

புதிய ஸ்கோடா ஆக்டேவியா இந்திய வருகை விபரம் வெளியானது!

கடந்த ஏப்ரலில் பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வந்த நிலையில், ஸ்கோடா ஆக்டேவியா காரின் மூன்றாம் தலைமுறை மாடல் விற்பனை நிறுத்தப்பட்டது. புதிய மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சின் தேர்வுகளுடன் நான்காம் தலைமுறை மாடலாக வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

புதிய ஸ்கோடா ஆக்டேவியா இந்திய வருகை விபரம் வெளியானது!

இந்த சூழலில்தான் தற்போது புதிய ஆக்டேவியா காரின் அறிமுகத்தை அடுத்த ஆண்டுக்கு ஸ்கோடா ஆட்டோ தள்ளி வைத்துள்ளது தெரிய வந்துள்ளது. முக்கிய பாகங்களாக தருவிக்கப்பட்டு இந்தியாவில் அசெம்பிள் செய்து விற்பனை செய்யப்படும்.

புதிய ஸ்கோடா ஆக்டேவியா இந்திய வருகை விபரம் வெளியானது!

வெளிநாடுகளில் பல எஞ்சின் மற்றும் கியர்பாக்ஸ் தேர்வுகளில் ஸ்கோடா ஆக்டேவியா கார் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் புதிய ஸ்கோடா ஆக்டேவியா காரில் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ எவோ டர்போசா்ரஜ்டு பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.0 லிட்டர் டிஎஸ்ஐ டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படும். பின்னர், 2.0 லிட்டர் டிடிஐ எவோ டீசல் எஞ்சின் தேர்விலும் எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஸ்கோடா ஆக்டேவியா இந்திய வருகை விபரம் வெளியானது!

இந்த காரில் எதிர்பார்க்கப்படும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 150 பிஎஸ் பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 190 பிஎஸ் பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 7 ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் எதிர்பார்க்கலாம்.

புதிய ஸ்கோடா ஆக்டேவியா இந்திய வருகை விபரம் வெளியானது!

புதிய ஸ்கோடா ஆக்டேவியா காரில் மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லைட்டுகள், 10.25 அங்குல திரையுடன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், 10 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், நேரடி இன்டர்நெட் வசதியை அளிக்கும் இ-சிம்கார்டு உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கும். 4.2 அங்குல ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே வசதியும், 12 ஸ்பீக்கர்களுடன் கூடிய கேன்டன் சவுண்ட் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர் உள்ளிட்ட வசதிகளுடன் வருகிறது.

புதிய ஸ்கோடா ஆக்டேவியா இந்திய வருகை விபரம் வெளியானது!

புதிய ஸ்கோடா ஆக்டேவியா கார் ரூ.17 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கலாம். ஹூண்டாய் எலான்ட்ரா, ஹோண்டா சிவிக் கார்களுடன் போட்டி போடும்.

Most Read Articles
மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
According to report, new gen Skoda Octavia will arrive in Indian shores by early next year.
Story first published: Monday, June 22, 2020, 10:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X