Just In
- 5 hrs ago
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- 5 hrs ago
இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! அட... அறிமுகம் எப்போ தாங்க?
- 7 hrs ago
சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன!! ஆனா பெரிய அளவில் இல்லைங்க...
- 7 hrs ago
விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Movies
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்தியாவிற்கு பெருமிதம்! பாதுகாப்பான கார்களின் டாப்-10 பட்டியலில் இணைந்த மற்றொரு மஹிந்திரா தயாரிப்பு
இந்தியாவின் பாதுகாப்பான டாப்-10 கார்களின் பட்டியலை, புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி மாற்றியமைத்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

குளோபல் என்சிஏபி நடத்திய மோதல் சோதனைகளில், மஹிந்திரா நிறுவனத்தின் தார் எஸ்யூவி 4 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்று அசத்தியுள்ளது. பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் என இருவருக்குமான பாதுகாப்பிலும், மஹிந்திரா தார் எஸ்யூவி 4 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்று, இந்தியாவிற்கு பெருமை தேடி தந்துள்ளது.

அத்துடன் இந்தியாவின் பாதுகாப்பான டாப்-10 கார்களின் பட்டியலையும், இதன் மூலம் மஹிந்திரா தார் எஸ்யூவி மாற்றியமைத்துள்ளது. 4 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங் உடன் இந்த பட்டியலில், மஹிந்திரா தார் எஸ்யூவி தற்போது 4வது இடத்தில் உள்ளது. எக்ஸ்யூவி300 காம்பேக்ட் எஸ்யூவி மற்றும் மராஸ்ஸோ எம்பிவி ஆகிய கார்களுக்கு பிறகு, இந்தியாவின் பாதுகாப்பான டாப்-10 கார்களின் பட்டியலில் இடம்பிடிக்கும் மூன்றாவது மஹிந்திரா தயாரிப்பு என்ற பெருமையை 2020 தார் எஸ்யூவி பெறுகிறது.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

இதுவே இந்தியாவின் பாதுகாப்பான டாப்-5 கார்கள் என எடுத்து கொண்டால், எக்ஸ்யூவி300 காம்பேக்ட் எஸ்யூவி மற்றும் தார் எஸ்யூவி என மஹிந்திரா நிறுவனம் 2 கார்களை கொண்டுள்ளது. அத்துடன் இந்தியாவின் பாதுகாப்பான ஆஃப்ரோடு கார் எனவும் 2020 மஹிந்திரா தார் எஸ்யூவியை தற்போது அதிகாரப்பூர்வமாக நம்மால் அழைக்க முடியும்.

குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளின் அடிப்படையில், இந்தியாவின் பாதுகாப்பான டாப்-10 கார்களின் பட்டியலில் மஹிந்திரா எக்ஸ்யூவி300 காம்பேக்ட் எஸ்யூவி முதலிடத்தில் தொடர்கிறது. இரண்டாவது இடத்தில் டாடா அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக்கும், மூன்றாவது இடத்தில் டாடா நெக்ஸான் காம்பேக்ட் எஸ்யூவியும் உள்ளன.

நான்காவது இடத்தை தற்போது மஹிந்திரா தார் எஸ்யூவி சொந்தமாக்கி கொண்டுள்ளது. 5வது இடத்தை டாடா நெக்ஸான் காம்பேக்ட் எஸ்யூவி பிடித்துள்ளது. டாடா நிறுவனம் முதலில் நெக்ஸான் காம்பேக்ட் எஸ்யூவியை குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளுக்கு அனுப்பியபோது, பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 4 நட்சத்திரங்களையும், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 3 நட்சத்திரங்களையும் மட்டுமே பெற்றது.

ஆனால் டாடா நிறுவனம் இதில் திருப்தியடையவில்லை. எனவே நெக்ஸான் காம்பேக்ட் எஸ்யூவியின் பாதுகாப்பை இன்னும் மேம்படுத்தி, மீண்டும் குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளுக்கு அனுப்பியது. இம்முறை டாடா நெக்ஸான் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் முழுமையாக 5 நட்சத்திரங்களையும், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 3 நட்சத்திரங்களையும் பெற்று அசத்தியது.

6வது இடத்தில் டாடா நிறுவனத்தின் டிகோர்/டியாகோ கார்கள் உள்ளன. 7வது இடத்தில் ஃபோக்ஸ்வேகன் போலோவும், 8வது இடத்தில் மஹிந்திரா மராஸ்ஸோவும் உள்ளன. 9வது இடத்தை டொயோட்டா எட்டியோஸ் காரும், 10வது இடத்தை மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா காரும் பிடித்துள்ளன. குளோபல் என்சிஏபி அமைப்பு கடந்த 6 ஆண்டுகளில் (2014-2020) 40க்கும் மேற்பட்ட கார்களை மோதல் சோதனைக்கு உட்படுத்தியுள்ளது. இதன் அடிப்படையில் டாப்-10 கார்களை நாங்கள் வழங்கியுள்ளோம். முழுமையான பட்டியலை நீங்கள் கீழே காணலாம்.

தற்போது டாப்-10 பட்டியலில் புதிதாக இணைந்துள்ள மஹிந்திரா தார் கடந்த அக்டோபர் 2ம் தேதிதான் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. பழைய தார் எஸ்யூவியை மஹிந்திரா நிறுவனம் முற்றிலும் மேம்படுத்தி புதிய தலைமுறை மாடலாக விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய மாடலுக்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் உச்சகட்ட வரவேற்பு கிடைத்துள்ளது. எனவே தற்போது இந்த எஸ்யூவியின் காத்திருப்பு காலம் 9 மாதங்களாக நீண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.