ஆகஸ்ட்டில் வருகிறது டொயோட்டா லேண்ட் க்ருஸரின் அடுத்த தலைமுறை கார்

டொயோட்டா நிறுவனத்தின் தொலைத்தூர பயணத்திற்கான மாடலான லேண்ட் க்ரூஸரின் அடுத்த தலைமுறை கார் வருகிற ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லேண்ட் க்ரூஸர் மாடலின் இந்த புதிய தலைமுறை காரை பற்றி இந்த செய்தியில் இனி பார்ப்போம்.

ஆகஸ்ட்டில் வருகிறது டொயோட்டா லேண்ட் க்ருஸரின் அடுத்த தலைமுறை கார்

டொயோட்டா நிறுவனம் இந்த புதிய எஸ்யூவி வெர்சன் காரில் ஹைப்ரீட் செட்அப்-ஐ உள்ளடக்கிய 3.5 லிட்டர் வி6 பெட்ரோல் என்ஜினை வழங்கியுள்ளது. இந்த என்ஜினானது அதனுடன் தொடர்ச்சியாக இணைக்கப்பட்டுள்ள எலக்ட்ரிக் மோட்டாருடன் செயல்படக்கூடியது.

ஆகஸ்ட்டில் வருகிறது டொயோட்டா லேண்ட் க்ருஸரின் அடுத்த தலைமுறை கார்

இந்த என்ஜின் அமைப்பின் மூலமாக 295 பிஎச்பி ஆற்றல் மற்றும் 356 என்எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக பெற முடியும். இந்த என்ஜினுடன் தற்போதைய மாடலில் உள்ள 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷனிற்கு பதிலாக 10-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட்டில் வருகிறது டொயோட்டா லேண்ட் க்ருஸரின் அடுத்த தலைமுறை கார்

லேண்ட் க்ரூஸர் மாடலுக்கு ஹைப்ரீட் என்ஜினை தவிர்த்து மற்றொரு 4.8 லிட்டர் வி8 என்ஜின் தேர்வும் வழங்கப்படவுள்ளது. இந்தியாவில் புதியதாக அறிமுகமாகவுள்ள இந்த என்ஜினை லேண்ட் க்ரூஸரின் தற்போதைய ஐரோப்பிய மாடலில் ஏற்கனவே டொயோட்டா நிறுவனம் வழங்கிவிட்டது.

ஆகஸ்ட்டில் வருகிறது டொயோட்டா லேண்ட் க்ருஸரின் அடுத்த தலைமுறை கார்

இந்த என்ஜின் மூலம் அதிகப்பட்சமாக 313 பிஎச்பி பவரையும், 460 என்எம் டார்க் திறனையும் பெற முடியும். அமெரிக்காவில் விற்பனையாகி வரும் லேண்ட் க்ரூஸர் காரில் 5.7 லிட்டர் வி8 என்ஜின் பொருத்தப்பட்டு வருகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 381 பிஎச்பி பவரையும் 544 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

ஆகஸ்ட்டில் வருகிறது டொயோட்டா லேண்ட் க்ருஸரின் அடுத்த தலைமுறை கார்

டொயோட்டா நிறுவனத்தின் சமீபத்திய சில மாடர்ன் கார்கள் தயாரிக்கப்பட்ட புதிய டிஎன்ஜிஏ மாடுலர் ப்ளாட்ஃபாரத்தில் தான் லேண்ட் க்ரூஸரின் இந்த புதிய தலைமுறை காரும் தயாரிக்கப்பட்டு வருகிறது. லேண்ட் க்ரூஸரின் வழக்கமான ஏணி வடிவிலான சேசிஸை அப்படியே பெற்றுள்ள இந்த புதிய தலைமுறை கார் புதிய ஃப்ளாட்ஃபாரத்தில் உருவாக்கப்பட்டுள்ளதால் எடையை மிகவும் குறைவாக பெற்றுள்ளது.

ஆகஸ்ட்டில் வருகிறது டொயோட்டா லேண்ட் க்ருஸரின் அடுத்த தலைமுறை கார்

இதனால் காருக்கு வழங்கப்படும் என்ஜினின் ஆற்றல் அளவும் கணிசமாக எண்ணிக்கையில் குறைக்கப்பட்டுள்ளது. இந்த 2020 வெர்சன் கார் லேண்ட் க்ரூஸரின் பரிணாம வளர்ச்சியாக இருக்கும். இருப்பினும் இந்த புதிய கார் லேண்ட் க்ரூஸர் மாடலுக்கே உண்டான அந்த பாக்ஸி தோற்றத்தை அடையாளமாக கொண்டுள்ளது.

ஆகஸ்ட்டில் வருகிறது டொயோட்டா லேண்ட் க்ருஸரின் அடுத்த தலைமுறை கார்

ஆனால் புதிய மாற்றமாக முன்புறத்தில் மேடும் குழியுமான டிசைனில் புதிய க்ரில் பொருத்தப்பட்டுள்ளது. உட்புறத்தில் இருக்கைகள் இரண்டு அல்லது மூன்று என சந்தைக்கேற்ற வரிசையில் கொடுக்கப்படவுள்ளன. பாதுகாப்பு அம்சங்களாக இந்த காரில் டொயோட்டா நிறுவனத்தின் பாதுகாப்பு உணர்வுக்கான உதவி உபகரணங்கள் அடங்கிய பேக்கேஜ் வழங்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட்டில் வருகிறது டொயோட்டா லேண்ட் க்ருஸரின் அடுத்த தலைமுறை கார்

இதனால் லேண்ட் க்ரூஸரின் 2020 தலைமுறை கார் பாதசாரிகளின் குறுக்கீட்டை கண்டறிந்து விபத்தை தடுக்கும் தொழிற்நுட்பத்தை பெற்றுள்ளது. இந்த தொழிற்நுட்பம் விரைவாக ஓட்டுனர் செயல்படாவிட்டாலும் தன்னிச்சையாக காரை இயக்கி விபத்தை தடுக்கும்.

ஆகஸ்ட்டில் வருகிறது டொயோட்டா லேண்ட் க்ருஸரின் அடுத்த தலைமுறை கார்

டொயோட்டா நிறுவனத்தில் இருந்து முதன்முதலாக லேண்ட் க்ரூஸர் என்ற மாடல் 1951ல் வெளிவந்தது. தற்போது விற்பனையில் இருக்கும் லேண்ட் க்ரூஸர் மாடல் கடந்த 12 ஆண்டுகளாக சந்தைப்படுத்தப்பட்டு வருகிறது.

Most Read Articles

மேலும்... #டொயோட்டா #toyota
English summary
New gen Toyota land cruiser will launch on 2020 august.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X