இம்மாதத்தில் வெளியாகிறது புதிய தலைமுறை வால்வோ எஸ்60 செடான் கார்!! ஆளை மயக்கும் தோற்றத்துடன்...

புதிய தலைமுறை வால்வோ எஸ்60 செடான் கார் இந்த 2020 நவம்பர் மாத இறுதியில் இந்தியாவில் வெளியிடப்படவுள்ளது. இந்த வால்வோ செடான் காரை பற்றிய விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

இம்மாதத்தில் வெளியாகிறது புதிய தலைமுறை வால்வோ எஸ்60 செடான் கார்!! ஆளை மயக்கும் தோற்றத்துடன்...

வால்வோவின் புதிய காராக எஸ்60 செடான் இந்த நவம்பர் மாதம் 27ஆம் தேதி இந்தியாவில் வெளியிடப்படவுள்ளது. தற்போதைய அசாதாரண சூழ்நிலையினால் இந்த காரின் படத்தையும் காரை பற்றிய விபரங்களையும் இணையத்தில் நிகழ்ச்சி ஒன்றின் மூலமாக வெளியிட வால்வோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இம்மாதத்தில் வெளியாகிறது புதிய தலைமுறை வால்வோ எஸ்60 செடான் கார்!! ஆளை மயக்கும் தோற்றத்துடன்...

இந்தியாவில் இந்த செடான் கார் இந்த 2020ஆம் வருடத்தில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுவிடும் என எதிர்க்கப்பட்ட நிலையில், கொரோனா வைரஸினால் இதன் அறிமுகம் அடுத்த 2021ஆம் ஆண்டின் முதல் பாதிக்கு தள்ளிப்போகியுள்ளது.

இம்மாதத்தில் வெளியாகிறது புதிய தலைமுறை வால்வோ எஸ்60 செடான் கார்!! ஆளை மயக்கும் தோற்றத்துடன்...

இந்தியாவில் அடுத்த 3 ஆண்டுகளில் 4 புதிய மின்மயமாக்கப்பட்ட கார்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக கடந்த ஆண்டில் வால்வோ நிறுவனம் அறிவித்திருந்தது. இதனால் புதிய எஸ்60, ப்ளக்-இன் ஹைப்ரீட் வெர்சன் காராக இருக்கலாம்.

இம்மாதத்தில் வெளியாகிறது புதிய தலைமுறை வால்வோ எஸ்60 செடான் கார்!! ஆளை மயக்கும் தோற்றத்துடன்...

வழக்கமான எரிபொருள் வாகனங்களில் இருந்து வால்வோ நிறுவனத்தின் கவனம் முழுவதும் மெதுவாக ப்ளக்-இன் ஹைப்ரீட் மற்றும் முழு இவி கார்களின் பக்கம் செல்கிறது. இதனால் இனி இந்தியாவில் அறிமுகமாகும் பெரும்பான்மையான வால்வோ கார்கள் மின்மயமாக்கப்பட்டதாகவே இருக்கும்.

இம்மாதத்தில் வெளியாகிறது புதிய தலைமுறை வால்வோ எஸ்60 செடான் கார்!! ஆளை மயக்கும் தோற்றத்துடன்...

சர்வதேச சந்தைகளில் ஏற்கனவே அறிமுகமாகிவிட்ட வால்வோ எஸ்60, தடிமனான கேரக்டர் லைன்களுடன் மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் அகலமான க்ரில் அமைப்பை கொண்டுள்ள எஸ்60-இன் ஹெட்லைட்கள் தோரின் சுத்தியல் வடிவிலான எல்இடி பகல்நேர-விளக்குகளுடன் கூர்மையான வடிவத்தில் உள்ளன.

இம்மாதத்தில் வெளியாகிறது புதிய தலைமுறை வால்வோ எஸ்60 செடான் கார்!! ஆளை மயக்கும் தோற்றத்துடன்...

ஸ்போர்டியான தோற்றத்தில் பம்பர், 19 இன்ச்சில் அலாய் சக்கரங்கள் மற்றும் வால்வோ எஸ்90-இன் ஸ்டைலில் C-வடிவிலான எல்இடி டெயில்லைட்களுடன் பின்பக்கம் உள்ளிட்டவை புதிய எஸ்60 செடான் காரின் வெளிபுறத்தில் வழங்கப்படுகின்ற சிறப்பம்சங்களாகும். பின்பக்கத்தில் வால்வோ முத்திரை பருத்த பம்பரின் மையத்தில் வழங்கப்பட்டுள்ளது.

இம்மாதத்தில் வெளியாகிறது புதிய தலைமுறை வால்வோ எஸ்60 செடான் கார்!! ஆளை மயக்கும் தோற்றத்துடன்...

இந்த காரின் பெட்ரோல் மாடலில் 2.0 லிட்டர், இன்-லைன் 4-சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் உடன் பொருத்தப்படுகின்ற இந்த பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 310 பிஎச்பி மற்றும் 400 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

இம்மாதத்தில் வெளியாகிறது புதிய தலைமுறை வால்வோ எஸ்60 செடான் கார்!! ஆளை மயக்கும் தோற்றத்துடன்...

இந்த வால்வோ காரின் ப்ளக்-இன் ஹைப்ரீட் வெர்சனிலும் இதே பெட்ரோல் என்ஜின்தான் பின்பக்கத்தில் எலக்ட்ரிக் மோட்டார் உடன் வழங்கப்படுகிறது. ஆனால் இதன் ஹைப்ரீட் வேரியண்ட்டை அதிகப்பட்சமாக 413 பிஎச்பி மற்றும் 670 என்எம் டார்க் திறனில் இயக்க முடியும். வெறும் எலக்ட்ரிக் மோடிலேயே காரை 45 கிமீ தூரத்திற்கு இயக்கி செல்ல முடியும்.

Most Read Articles

மேலும்... #வால்வோ #volvo
English summary
New Gen Volvo S60 Sedan to be unveiled coming Nov 27.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X