க்ராஷ் டெஸ்ட் ரேட்டிங்கில் அசத்திய புதிய ஹோண்டா சிட்டி கார்!

ஏசியன் என்சிஏபி அமைப்பு நடத்திய க்ராஷ் டெஸ்ட்டில் புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி கார் சிறப்பான தர மதிப்பீட்டை பெற்று அசத்தி இருக்கிறது.

க்ராஷ் டெஸ்ட் ரேட்டிங்கில் அசத்திய புதிய ஹோண்டா சிட்டி கார்!

மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் ஹோண்டா சிட்டி காருக்கு தனி மதிப்பும், மரியாதையும் உள்ளது. இதனை தக்க வைப்பதற்காக கால மாற்றத்துக்கு ஏற்றவாறு ஹோண்டா சிட்டி கார் தலைமுறை மாற்றம் கண்டு வருகிறது. அந்த வகையில், தற்போது ஹோண்டா சிட்டி கார் முற்றிலும் புதிய தலைமுறை மாடலாக மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

க்ராஷ் டெஸ்ட் ரேட்டிங்கில் அசத்திய புதிய ஹோண்டா சிட்டி கார்!

சில ஆசிய நாடுகளில் விற்பனைக்கு வந்துவிட்ட இந்த கார் மிக விரைவில் இந்தியாவிலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. கொரோனா வைரஸ் பிரச்னையால் இந்த கார் இந்தியாவில் அறிமுகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

க்ராஷ் டெஸ்ட் ரேட்டிங்கில் அசத்திய புதிய ஹோண்டா சிட்டி கார்!

இந்த நிலையில், ஏசியன் என்சிஏபி அமைப்பு புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி காரை க்ராஷ் டெஸ்ட் எனப்படும் மோதல் சோதனைக்கு உட்படுத்தி பாதுகாப்பு தரத்தை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. தாய்லாந்து நாட்டில் விற்பனையில் உள்ள மாடல்தான் சோதனைக்கு பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

க்ராஷ் டெஸ்ட் ரேட்டிங்கில் அசத்திய புதிய ஹோண்டா சிட்டி கார்!

இதில், புதிய ஹோண்டா சிட்டி கார் அதிகபட்சமான 5க்கு 5 என்ற அதிகபட்ச மதிப்பீட்டை பெற்று அசத்தி இருக்கிறது. முன்புற மற்றும் பக்கவாட்டு மோதல் சோதனைகளுக்காக அதிகபட்சமாக நிர்ணயிக்கப்பட்ட 100 புள்லிகளுக்கு 86.54 புள்ளிகளை பெற்று அசத்தி உள்ளது.

க்ராஷ் டெஸ்ட் ரேட்டிங்கில் அசத்திய புதிய ஹோண்டா சிட்டி கார்!

பெரியவர்களுக்கான பாதுகாப்பு மதிப்பீட்டில் 44.83 புள்ளிகளையம், சிறியவர்களுக்கான பாதுகாப்புக்கான தர மதிப்பீட்டில் 22.85 புள்ளிகளையும், பாதுகாப்பு தொழில்நுட்ப வசதிகளுக்கான மதிப்பீட்டில் 18.89 புள்ளிகளையும் பெற்று இருக்கிறது.

MOST READ: ஆர்சி, டிரைவிங் லைசென்ஸ் புதுப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிப்பு!

க்ராஷ் டெஸ்ட் ரேட்டிங்கில் அசத்திய புதிய ஹோண்டா சிட்டி கார்!

சோதனைக்கு பயன்படுத்தப்பட்ட தாய்லாந்து நாட்டுக்கான அம்சங்களுடன் விற்பனை செய்யப்படும் ஹோண்டா சிட்டி காரில் முன்புறத்தில் ஜி ஃபோர்ஸ் கன்ட்ரோல் கட்டமைப்பு, 6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், இபிடி தொழில்நுட்பம், வெஹிக்கிள் ஸ்டெபிளிட்டி அசிஸ்ட், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், எமெர்ஜென்சி ஸ்டாப் சிக்னல், மல்டி வியூ ரிவர்ஸ் கேமரா ஆகியவை இடம்பெற்றிருந்தன.

MOST READ: டாடா கார்களை புக்கிங் செய்தால் 'ஹோம் டெலிவிரி'!

இந்தியாவில் விற்பனைக்கு வரும் புதிய ஹோண்டா சிட்டி கார் தோற்றத்தில் தாய்லாந்து மாடலை போலவே இருக்கும். ஆனால், நீளத்தில் சற்றே கூடுதலாகவும், அதிக க்ரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டதாகவும் இருக்கும்.

MOST READ: மின்சார காராக மாறிய அம்பாஸ்டர்.. ஒரு கிமீ பயணிக்க 1 ரூபாயே போதும்.. பைக்கைவிட குறைவான பயண செலவு...

க்ராஷ் டெஸ்ட் ரேட்டிங்கில் அசத்திய புதிய ஹோண்டா சிட்டி கார்!

இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கும் மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படும். பெட்ரோல் மாடலில் மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகள் எதிர்பார்க்கலாம். மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் பெட்ரோல் மாடலில் வழங்கப்படும் வாய்ப்புள்ளது.

புதிய ஹோண்டா சிட்டி காரில் எல்இடி ஹெட்லைட்டுகள், 16 அங்குல அலாய் வீல்கள், சன்ரூஃப், எல்இடி டெயில் லைட்டுகள், தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம், கனெக்ட்டெட் கார் தொழில்நுட்பம் ஆகியவை எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

English summary
New Gen Honda City has secured 5 star safety rating from ASEAN NCAP crash test.
Story first published: Tuesday, March 31, 2020, 12:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X