Just In
- 1 hr ago
முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு பணியில் புதிய கார்கள்... ஒவ்வொன்றின் விலையும் இத்தனை கோடி ரூபாயா?
- 8 hrs ago
பாதுகாப்பு படை வீரர்களுக்காக களமிறங்கிய ராயல் என்பீல்டு பைக் ஆம்புலன்ஸ்கள்... உருவாக்கியது யார்னு தெரியுமா?
- 9 hrs ago
இந்தியாவில் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த தீவிரம்காட்டும் சுஸுகி!! டெல்லியில் மீண்டும் சோதனை
- 11 hrs ago
பிரேக் பிடிக்காததால் லாரியை 3 கிலோ மீட்டர் தூரம் ரிவர்ஸ் கியரில் ஓட்டிய டிரைவர்... கடைசில என்ன ஆச்சு தெரியுமா?
Don't Miss!
- News
மே.வங்கம்:மமதா தளபதி பிகே வியூகம் தவிடுபொடி? அன்று சிங்கிள்..இன்று டிரிபிள் டிஜிட் இடங்களில் பாஜக?
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 19.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்கவோ கொடுக்கவோ கூடாது…
- Finance
7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்த மோடி அரசு முடிவு..!
- Movies
கண்களால் வசியம் செய்யும் ஜான்வி கபூர்… மஸ்காரா போட்டு மயக்குறியே என வர்ணிக்கும் ரசிகர்கள் !
- Sports
சென்னையின் எப்சி -ஈஸ்ட் பெங்கால் அணிகள் பலப்பரிட்சை... வெற்றி யாருக்கு.. காத்திருக்கும் பரபர ஆட்டம்
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த புதிய ஹோண்டா சிட்டி கார் அறிமுக தேதி விபரம்!
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி காரின் அறிமுக தேதி விபரம் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் சிறந்த தேர்வுகளில் ஒன்று ஹோண்டா சிட்டி கார். இந்த ரகத்தில் வாடிக்கையாளர்களின் அதிக நன்மதிப்பையும், மிக நீண்ட காலமாக விற்பனையிலும் சாதித்த மாடலாக இருந்து வருகிறது. இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்தில், ஐந்தாம் தலைமுறை மாடலாக உருவாக்கப்பட்டு இருக்கிறது.

அண்மையில் இந்தியாவில் இந்த கார் வெளியிடப்பட்ட நிலையில், இந்த காருக்கு முன்பதிவும் துவங்கி நடந்து வருகிறது. இந்த நிலையில், வரும் 15ந் தேதி புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி கார் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

தற்போதைய சிட்டி காரைவிட புதிய தலைமுறை சிட்டி கார் வடிவமைப்பில் முற்றிலும் மாறுபட்டிருப்பதுடன், வடிவத்திலும் பெரிய கார் மாடலாக மாறி இருக்கிறது. புதிய ஹோண்டா சிட்டி கார் 4,549 மிமீ நீளமும், 1,748 மிமீ அகலமும், 1,489 மிமீ உயரமும் கொண்டுள்ளது. இதன் வீல் பேஸ் நீளம் 2,600 மிமீ ஆக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனால், உட்புறத்தில் மிகச் சிறப்பான இடவசதியை அளிக்கும்.

புதிய ஹோண்டா சிட்டி கார் பிஎஸ்6 தரமுடைய பெட்ரோல், டீசல் எஞ்சின் தேர்வுகளில் வருகிறது. பெட்ரோல் மாடலில் இருக்கும் 1.5 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 119 பிஎஸ் பவரையும், 145 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

டீசல் மாடலில் இருக்கும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 98 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்சினுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படும்.

புதிய ஹோண்டா சிட்டி காரின் பெட்ரோல் மாடல் மேனுவல் கியர்பாக்ஸ் மாடல் லிட்டருக்கு 17.8 கிமீ மைலேஜையும், சிவிடி கியர்பாக்ஸ் மாடல் லிட்டருக்கு 18.4 கிமீ மைலேஜையும் வழங்கும். டீசல் மாடல் லிட்டருக்கு 24.1 கிமீ மைலேஜையும் வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஹோண்டா சிட்டி காரில் முழுமையான எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி டெயில் லைட்டுகள் இடம்பெற இருக்கின்றன. 6.9 அங்குல டிஎஃப்டி திரையுடன் கூடிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், 8.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை வழங்கப்பட உள்ளன. இதன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஹோண்டா கனெக்டெட் கார் தொழில்நுட்பத்துடன் வருகிறது.

ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்டுகள், புஷ் பட்டன் ஸ்டார்ட், எலெக்ட்ரிக் சன்ரூஃப், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், அமேஸான் அலெக்ஸா வாய்ஸ் கமாண்ட் வசதிகள் என போட்டியாளர்களை விஞ்சும் அம்சங்களுடன் வர இருக்கிறது.

புதிய ஹோண்டா சிட்டி கார் ரூ.10 லட்சம் முதல் ரூ.11 லட்சம் இடையிலான ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி சியாஸ், ஹூண்டாய் வெர்னா, ஸ்கோடா ரேபிட் கார்களுக்கு மிகப்பெரிய நெருக்கடியை புதிய ஹோண்டா சிட்டி கார் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.