2020 ஹோண்டா சிட்டியின் ஆரம்ப விலை இனி ரூ.11 லட்சம்... வேரியண்ட் விபரங்கள் வெளிவந்தன...

ஹோண்டா நிறுவனம், சிட்டி செடான் மாடலின் ஐந்தாம் தலைமுறை காரை வருகிற மார்ச் 16ஆம் தேதி இந்திய சந்தைக்கு கொண்டுவர தீவிரமாக பணியாற்றி வருகிறது. இந்நிலையில் ஹோண்டா சிட்டி மாடலில் வழங்கப்படவுள்ள வேரியண்ட்கள் மற்றும் என்ஜின் தேர்வுகள் குறித்து தற்போது வெளியாகியுள்ள தகவலை இந்த செய்தியில் காண்போம்.

2020 ஹோண்டா சிட்டியின் ஆரம்ப விலை இனி ரூ.11 லட்சம்... வேரியண்ட் விபரங்கள் வெளிவந்தன...

தற்போதைய சிட்டி மாடல் போல் அல்லாமல் இந்த ஐந்தாம் தலைமுறை சிட்டி செடான் காருக்கு V, VX மற்றும் ZX என்ற மூன்று விதமான வேரியண்ட்களை மட்டும் தான் ஹோண்டா நிறுவனம் வழங்கவுள்ளது. தற்போதைய சிட்டி செடான் காருக்கு SV, V, VX மற்றும் ZX என்ற நான்கு வேரியண்ட் தேர்வுகள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

2020 ஹோண்டா சிட்டியின் ஆரம்ப விலை இனி ரூ.11 லட்சம்... வேரியண்ட் விபரங்கள் வெளிவந்தன...

என்ஜின் தேர்வாக இந்த புதிய தலைமுறை சிட்டி கார் தற்போதைய மாடலின் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜினை தான் தொடரவுள்ளது. இந்த பெட்ரோல் என்ஜின் பிஎஸ்6 அப்டேட்டால் அதிகப்பட்சமாக 121 பிஎச்பி பவரை வெளிப்படுத்தவுள்ளது. இது தற்போதைய பிஎஸ்4 என்ஜினை விட 2 பிஎச்பி அதிகமாகும்.

2020 ஹோண்டா சிட்டியின் ஆரம்ப விலை இனி ரூ.11 லட்சம்... வேரியண்ட் விபரங்கள் வெளிவந்தன...

என்ஜின் காருக்கு வழங்கவுள்ள டார்க் திறன் அளவில் எந்த மாற்றமும் இல்லை. இந்த என்ஜினுடன் 6-ஸ்பீடு சிவிடி மற்றும் மேனுவல் என இரண்டு விதமான ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்படவுள்ளன. தற்போதைய சிட்டி செடான் காரில் 5-ஸ்பீடு மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் மட்டும் தான் இணைக்கப்படுகிறது.

2020 ஹோண்டா சிட்டியின் ஆரம்ப விலை இனி ரூ.11 லட்சம்... வேரியண்ட் விபரங்கள் வெளிவந்தன...

பெட்ரோல் என்ஜின் அப்டேட்டை தவிர்த்து தற்போது இணையத்தில் கசிந்துள்ள தகவல்களில் 2020 சிட்டி காரின் டீசல் வேரியண்ட்டை பற்றி எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. இருப்பினும் நமக்கு தெரிந்தவரை புதிய சிட்டி மாடலின் டீசல் வேரியண்ட்டில் தற்போதைய 1.5 லிட்டர் டீசல் என்ஜின் தான் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2020 ஹோண்டா சிட்டியின் ஆரம்ப விலை இனி ரூ.11 லட்சம்... வேரியண்ட் விபரங்கள் வெளிவந்தன...

இந்த டீசல் என்ஜின் பிஎஸ்4 தரத்தில் அதிகப்பட்சமாக 100 பிஎச்பி பவர்/ 200 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது. இந்த என்ஜினுடன் ட்ரான்ஸ்மிஷன் தேர்வாக 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொடுக்கப்படுகிறது. இதனுடன் ஹோண்டா அமேஸ் மாடலை போல் 2020 சிட்டி மாடலின் பிஎஸ்6 டீசல் என்ஜினுக்கு மற்றொரு ட்ரான்ஸ்மிஷன் தேர்வாக சிவிடி கியர்பாக்ஸ் வழங்கப்பட்டாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை.

2020 ஹோண்டா சிட்டியின் ஆரம்ப விலை இனி ரூ.11 லட்சம்... வேரியண்ட் விபரங்கள் வெளிவந்தன...

மேலும் இந்த 2020 ஹோண்டா மாடலை பற்றி வெளியாகியுள்ள தகவல்களில் சிட்டி செடான் காரின் ஐந்தாம் தலைமுறை மாடலின் பரிமாண அளவுகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. இதன்படி பார்த்தோமேயானால், புதிய சிட்டி கார் தற்சமயம் விற்பனையாகும் சிட்டி மாடலை விட அதிக நீளத்தையும், அதிக உயரத்தையும் கொண்டுள்ளது.

2020 ஹோண்டா சிட்டியின் ஆரம்ப விலை இனி ரூ.11 லட்சம்... வேரியண்ட் விபரங்கள் வெளிவந்தன...

தற்போதைய பிஎஸ்4 இந்திய மாடல் மட்டுமில்லாமல், ஏற்கனவே தாய்லாந்தில் சந்தைப்படுத்தப்பட்டிருக்கும் ஐந்தாம் தலைமுறை சிட்டி மாடலை காட்டிலும் அனைத்தும் பரிமாண அளவுகளிலும் 2020 சிட்டி செடான் கார் பெரியது. 2020 ஹோண்டா சிட்டி மாடலின் நீளம் 129மிமீ கூடுதலாக 4569மிமீ ஆகவும், அகலம் 53மிமீ அதிகரிக்கப்பட்டு 1748மிமீ ஆகவும், உயரம் கூடுதலாக 6மிமீ அதிகரிக்கப்பட்டு 1489மிமீ ஆகவும் உள்ளது.

2020 ஹோண்டா சிட்டியின் ஆரம்ப விலை இனி ரூ.11 லட்சம்... வேரியண்ட் விபரங்கள் வெளிவந்தன...

காரின் வீல்பேஸ் அளவில் எந்த மாற்றமும் இல்லை. அதே 2600மிமீ தொடர்கிறது. புதிய சிட்டி பிஎஸ்6 செடான் மாடலில் ஏகப்பட்ட சிறப்பம்சங்களை ஹோண்டா நிறுவனம் வழங்கியுள்ளது. அவையாவன, 6 காற்றுப்பைகள், இபிடியுடன் ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம், சன்ரூஃப், ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் இணைக்கக்கூடிய தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளிட்டவையாகும்.

2020 ஹோண்டா சிட்டியின் ஆரம்ப விலை இனி ரூ.11 லட்சம்... வேரியண்ட் விபரங்கள் வெளிவந்தன...

இவற்றுடன் எல்இடி ஹெட்லேம்ப்ஸ், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், காற்றோட்டமான இருக்கை அமைப்பு மற்றும் ஹூண்டாய் வென்யூ, கியா செல்டோஸ் மற்றும் எம்ஜி ஹெக்டர் மாடல்களில் உள்ள கனெக்டட் கார் தொழிற்நுட்பம் போன்ற வசதிகளும் ஐந்தாம் தலைமுறை சிட்டி செடான் மாடலில் உள்ளன.

2020 ஹோண்டா சிட்டியின் ஆரம்ப விலை இனி ரூ.11 லட்சம்... வேரியண்ட் விபரங்கள் வெளிவந்தன...

புதிய ஹோண்டா சிட்டியின் 3 வேரியண்ட்களும் ரூ.11 லட்சத்தில் இருந்து ரூ.16 லட்சம் வரையிலான விலைகளில் விற்பனை செய்யப்படவுள்ளன. தற்சமயம் சந்தைப்படுத்தப்பட்டுள்ள ஹோண்டா சிட்டி காரானது ரூ.9.91 லட்சத்தில் இருந்து ரூ.14.31 லட்சம் வரையில் எக்ஸ்ஷோரூம் விலைகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

2020 ஹோண்டா சிட்டியின் ஆரம்ப விலை இனி ரூ.11 லட்சம்... வேரியண்ட் விபரங்கள் வெளிவந்தன...

தற்போதைய பிஎஸ்4 மாடலை போல் விரைவில் சந்தைக்கு வரவுள்ள பிஎஸ்6 சிட்டி மாடலும் ஹூண்டாய் வெர்னா, மாருதி சியாஸ், ஃபோக்ஸ்வேகன் வெண்டோ, ஸ்கோடா ராபிட் மற்றும் டொயோட்டா யாரிஸ் உள்ளிட்ட தனது பிரிவில் உள்ள செடான் கார்களுடன் போட்டியிடவுள்ளது.

Source: Cardekho

Most Read Articles

மேலும்... #ஹோண்டா #honda
English summary
Honda City 2020 To Be Offered In Three Variants. More Powerful & Bigger Than Before
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X