புதிய ஹோண்டா சிட்டி காரின் எந்த வேரியண்ட்டை வாங்கலாம்? - வாங்க பார்க்கலாம்!

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. வடிவமைப்பிலும், வசதிகளிலும் இந்த கார் வேற வெவலுக்கு மாறி இருக்கிறது. இந்த நிலையில், இந்த காரில் இடம்பெற்றிருக்கும் வசதிகள் விபரங்களை வேரியண்ட் வாரியாக தொகுத்து வழங்கி இருக்கிறோம்.

புதிய ஹோண்டா சிட்டி காரின் எந்த வேரியண்ட் மதிப்புமிக்கது

புதிய ஹோண்டா சிட்டி கார் பெட்ரோல், டீசல் மாடல்களில் விற்பனைக்கு வந்துள்ளது. பெட்ரோல் மாடலில் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் தேர்வும், டீசல் மாடலானது மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் மட்டுமே தேர்வுக்கு கொடுக்கப்படுகிறது. இந்த காரின் பெட்ரோல், டீசல் மாடல்கள் V, VX மற்றும் ZX என மூன்று வேரியண்ட்டுகளில் கிடைக்கும். இந்த வேரியண்ட்டுகளில் கொடுக்கப்பட்டுள்ள வசதிகள் விபரத்தை தொடர்ந்து பார்க்கலாம்.

புதிய ஹோண்டா சிட்டி காரின் எந்த வேரியண்ட் மதிப்புமிக்கது

V வேரியண்ட்

பெட்ரோல் மேனுவல்: ரூ.10.89 லட்சம்

பெட்ரோல் சிவிடி: ரூ.12.20 லட்சம்

டீசல் மேனுவல்: ரூ.12.40 லட்சம்

புதிய ஹோண்டா சிட்டி காரின் விலை குறைவான வேரியண்ட்டாக நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள், 15 அங்குல அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த வேரியண்ட்டில் 8.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும். 4 ஸ்பீக்கர்களுடன் கூடிய ஆடியோ சிஸ்டம், அலெக்ஸா வாய்ஸ் கமாண்ட் வசதியும் இந்த பேஸ் வேரியண்ட்டில் உள்ளது.

புதிய ஹோண்டா சிட்டி காரின் எந்த வேரியண்ட் மதிப்புமிக்கது

புஷ் பட்டன் ஸ்டார்ட், கீ லெஸ் என்ட்ரி, க்ரூஸ் கன்ட்ரோல் வசதி, ரியர் ஏசி வென்ட்டுகள், ஓட்டுனர் இருக்கை உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யும் வசதி, டில்ட் மற்றும் டெலிஸ்கோப்பிக் வசதியுடன் ஸ்டீயரிங் வீல், ஸ்மார்ட் கீ சிஸ்டம் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

புதிய ஹோண்டா சிட்டி காரின் எந்த வேரியண்ட் மதிப்புமிக்கது

அனைத்து இருக்கைகளுக்கும் 3 பாயிண்ட் சீ பெல்ட், ரியர் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் கேமரா, 4 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் வசதிகள் இடம்பெற்றுள்ளன. மேனுவல் சிவிடி வேரியண்ட்டில் மட்டும் ரிமோட் எஞ்சின் ஸ்டார்ட் மற்றும் பேடில் ஷிஃப்ட் மூலமாக மேனுவல் முறையில் கியர் மாற்றும் வசதிகள் இடம்பெற்றுள்ளன.

புதிய ஹோண்டா சிட்டி காரின் எந்த வேரியண்ட் மதிப்புமிக்கது

VX வேரியண்ட்

பெட்ரோல் மேனுவல்: ரூ.12.26 லட்சம்

பெட்ரோல் சிவிடி: ரூ.13.56 லட்சம்

டீசல் மேனுவல்: ரூ.13.76 லட்சம்

சிட்டி காரின் பேஸ் வேரியண்ட்டில் பார்த்த வசதிகளுடன் கூடுதலாக பல வசதிகள் இந்த வேரியண்ட்டில் உள்ளன. ஒன் டச் கட்டுப்பாட்டு வசதியுடன் எலெக்ட்ரிக் சன்ரூஃப், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட், 16 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள், 8 ஸ்பீக்கர்களுடன் சர்ரவுன்ட் சவுண்ட் சிஸ்டம், லெதர் உறையுடன் ஸ்டீயரிங் வீல் மற்றும் கியர் நாப், ரீடிங் லைட்டுகள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ஜி மீட்டர், 6 ஏர்பேக்குகள் ஆகியவை உள்ளன.

புதிய ஹோண்டா சிட்டி காரின் எந்த வேரியண்ட் மதிப்புமிக்கது

ZX வேரியண்ட்

பெட்ரோல் மேனுவல்: ரூ.13.15 லட்சம்

பெட்ரோல் சிவிடி: ரூ.14.45 லட்சம்

டீசல் மேனுவல்: ரூ.14.64 லட்சம்

புதிய சிட்டி காரின் விலை உயர்ந்த வேரியண்ட் இதுதான். மேற்கண்ட வி மற்றும் விஎக்ஸ் வேரியண்ட்டுகளில் இருக்கும் வசதிகளுடன் கூடுதலாக எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி டர்ன் இண்டிகேட்டர்கள், முன்புறத்தில் எல்இடி பனி விளக்குகள், லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி, ஆட்டோ அப்-டவுன் வசதியுடன் பவர் விண்டோஸ், ரியர் முறையில் பவர் விண்டோ மற்றும் சன்ரூஃபை கட்டுப்படுத்தும் வசதி, ஆட்டோ ஃபோல்டிங் விங் மிரர்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

புதிய ஹோண்டா சிட்டி காரின் எந்த வேரியண்ட் மதிப்புமிக்கது

எஞ்சின் விபரம்

புதிய ஹோண்டா சிட்டி காரில் இருக்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 119 பிஎச்பி பவரையும், 145 என்எம் டார்க் திறனையும் வழங்கும். மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். டீசல் மாடலில் இருக்கும் 1.5 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 99 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வழங்கும். மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கும்.

புதிய ஹோண்டா சிட்டி காரின் எந்த வேரியண்ட் மதிப்புமிக்கது

எது சிறந்த தேர்வு?

சிட்டி காரின் வி பேஸ் வேரியண்ட்டில் தேவைப்படும் வசதிகளை ஹோண்டா கொடுத்துவிட்டது. தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், அலெக்ஸா வாய்ஸ் கமாண்ட் உள்ளிட்டவை பேஸ் வேரியண்ட்டிலேயே கிடைக்கிறது. எனினும், விஎக்ஸ் நடுத்தர வகை வேரியண்ட் வசதிகள் நிறைவை தருகிறது. எல்இடி ஹெட்லைட்டுகள் உள்ளிட்ட பிரிமீயம் அம்சங்கள் டாப் வேரியண்ட்டில் உள்ளன. ஆனால், பெரும்பான்மையான வாடிக்கையாளர்களுக்கு பட்ஜெட், வசதிகள் அடிப்படையில் விஎக்ஸ் நடுத்தர வேரியண்ட் மதிப்புமிக்கதாக அமையும்.

புதிய ஹோண்டா சிட்டி காரின் எந்த வேரியண்ட் மதிப்புமிக்கது

போட்டியாளர்களுக்கு நெருக்கடி

இந்தியாவின் மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் புதிய ஹோண்டா சிட்டி கார் மிகவும் பிரிமீயமான மாடலாக நிலைநிறுத்தப்பட்டு உள்ளது. வடிவமைப்பு, வசதிகளில் வேற லெவலுக்கு இந்த கார் மாறி இருக்கிறது. மாருதி சியாஸ், ஹூண்டாய் வெர்னா மற்றும் ஸ்கோடா ரேபிட் கார்களுக்கு கடும் போட்டியை கொடுக்கும்.

Most Read Articles

English summary
Here is the variant wise features of the new generation Honda City car.
Story first published: Thursday, July 16, 2020, 11:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X