இன்னும் சில நாட்களில் அறிமுகமாகிறது ஹோண்டாவின் புதிய டபிள்யூஆர்-வி எஸ்யூவி கார்...

இந்த ஆண்டு துவக்கத்தில் இந்திய சந்தைகாக ஹோண்டா நிறுவனத்தில் இருந்து வெளியிடப்பட்ட 2020 டபிள்யூஆர்-வி எஸ்யூவி மாடல் சில டீலர்ஷிப்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

இன்னும் சில நாட்களில் அறிமுகமாகிறது ஹோண்டாவின் புதிய டபிள்யூஆர்-வி எஸ்யூவி கார்...

வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் கவனிக்கத்தக்க வகையில் மாற்றங்களுடன் பிஎஸ்6 என்ஜினை பெற்றுள்ள புதிய டபிள்யூஆர்-வி மாடலுக்கான முன்பதிவுகள் இணையத்தில் ரூ.21,000 என்ற முன் தொகையுடன் ஹோண்டா நிறுவனத்தால் நடத்தப்பட்டு வருகின்றன.

இன்னும் சில நாட்களில் அறிமுகமாகிறது ஹோண்டாவின் புதிய டபிள்யூஆர்-வி எஸ்யூவி கார்...

இதனால் இந்த எஸ்யூவி கார் விரைவில் சந்தையில் விற்பனையை துவங்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனா வைரஸ் இதன் அறிமுகத்தை தாமதப்படுத்திவிட்டது. ஆனால் தற்போது ஊரடங்கில் தளர்வு கொண்டுவரப்பட்டுள்ளதால் டபிள்யூஆர்-வி கார் டீலர்ஷிப்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் துவங்கியுள்ளன.

இன்னும் சில நாட்களில் அறிமுகமாகிறது ஹோண்டாவின் புதிய டபிள்யூஆர்-வி எஸ்யூவி கார்...

இதனை உறுதிப்படுத்தும் வகையில் டீலர்ஷிப் ஷோரூமில் ஹோண்டாவின் இந்த 2020 மாடல் நின்று இருக்கும் படங்களை ஜிக்வீல்ஸ் செய்தி தளம் வெளியிட்டுள்ளது. இதனால் இந்த எஸ்யூவி காரின் அறிமுகத்தை வரும் நாட்களில் எதிர்பார்க்கலாம்.

இன்னும் சில நாட்களில் அறிமுகமாகிறது ஹோண்டாவின் புதிய டபிள்யூஆர்-வி எஸ்யூவி கார்...

புதிய டபிள்யூஆர்-வி மாடலில் கொண்டுவரப்பட்டுள்ள முக்கியமான காஸ்மெட்டிக் மாற்றங்கள் காரின் முன் பகுதியில் தான் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த வகையில் புதிய எல்இடி ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்க்ள் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட எல்இடி டிஆர்எல்களை இந்த கார் பெற்றுள்ளது.

இன்னும் சில நாட்களில் அறிமுகமாகிறது ஹோண்டாவின் புதிய டபிள்யூஆர்-வி எஸ்யூவி கார்...

இவை மட்டுமின்றி 16-இன்ச்சில் புதிய டிசைனில் அலாய் சக்கரங்கள், எல்இடி டெயில்லைட்களுடன் முன்புற க்ரில் அமைப்பையும் ஹோண்டா நிறுவனம் மாற்றியமைத்துள்ளது. ஆனால் உட்புறம், கேபினின் உள்ளமைவை தவிர்த்து பெரிய அளவில் எந்த மாற்றத்தையும் ஏற்கவில்லை.

இன்னும் சில நாட்களில் அறிமுகமாகிறது ஹோண்டாவின் புதிய டபிள்யூஆர்-வி எஸ்யூவி கார்...

இதனால் தற்சமயம் விற்பனையாகி கொண்டிருக்கும் டபிள்யூஆர்-வி மாடலில் உள்ள ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் இணைக்கக்கூடிய பெரிய தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், கீலெஸ் எண்ட்ரீ, சன்ரூஃப். ரியர்வியூ கேமிரா, ரியர் பார்க்கிங் சென்சார்கள், க்ரூஸ் கண்ட்ரோல், இபிடியுடன் ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் மற்றும் இரட்டை காற்றுப்பைகள் உள்ளிட்ட அம்சங்கள் அப்படியே தொடர்ந்துள்ளன.

இன்னும் சில நாட்களில் அறிமுகமாகிறது ஹோண்டாவின் புதிய டபிள்யூஆர்-வி எஸ்யூவி கார்...

புதிய ஹோண்டா டபிள்யூஆர்-வி மாடல் அறிமுகமான பிறகு எஸ்வி மற்றும் விஎக்ஸ் என்ற இரு விதமான வேரியண்ட்களில் சந்தையில் கிடைக்கும் என தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த இரு வேரியண்ட்களுக்கும் பிஎஸ்6 பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் தேர்வுகள் வழங்கப்படவுள்ளன.

இன்னும் சில நாட்களில் அறிமுகமாகிறது ஹோண்டாவின் புதிய டபிள்யூஆர்-வி எஸ்யூவி கார்...

இதில் பெட்ரோல் வேரியண்ட்டில் 90 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடிய 1.2 லிட்டர் என்ஜின் அமைப்பும், டீசல் வேரியண்ட்டில் 100 பிஎச்பி பவரை அதிகப்பட்சமாக வழங்கக்கூடிய 1.5 லிட்டர் என்ஜினும் பொருத்தப்படவுள்ளன. இதில் பெட்ரோல் என்ஜின் வழக்கமான 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸை தொடர, டீசல் என்ஜினிற்கு 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ட்ரான்ஸ்மிஷன் அமைப்பாக கொடுக்கப்படவுள்ளது.

இன்னும் சில நாட்களில் அறிமுகமாகிறது ஹோண்டாவின் புதிய டபிள்யூஆர்-வி எஸ்யூவி கார்...

2020 டபிள்யூஆர்-வி எஸ்யூவி காரின் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.9 லட்சம் அளவில் நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரப்பூர்வ விலையை ஹோண்டா நிறுவனம் இதன் அறிமுகத்தின்போது வெளியிடும். இந்த 2020 ஹோண்டா மாடலுக்கு முக்கிய போட்டி கார்களாக ஹூண்டாய் வென்யூ, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், டாடா நெக்ஸான் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 போன்றவை உள்ளன.

Most Read Articles

மேலும்... #ஹோண்டா #honda
English summary
New Honda WR-V at Dealerships
Story first published: Tuesday, June 16, 2020, 8:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X