ஹூண்டாய் க்ரெட்டாவின் புதிய மாடல் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்...

ஹூண்டாய் நிறுவனம் அதன் அப்கிரேட் செய்யப்பட்ட க்ரெட்டா எஸ்யூவி-யை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த கார் எப்போது விற்பனைக்கு வரும், என்னென்ன புதிய அப்டேட்டுகளைப் பெற்றிருக்கின்றது போன்ற அனைத்து தகவலையும் இந்த பதிவில் கணலாம்.

ஹூண்டாய் க்ரெட்டாவின் புதிய மாடல் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்...

நொய்டாவில் நடைபெற்று வரும் 2020ம் ஆண்டிற்கான ஆட்டோ எக்ஸ்போவில் புதிய ஹூண்டாய் க்ரெட்டா காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கார் வரும் வாரங்களில் எப்போது வேண்டுமானாலும் விற்பனைக்குக் கொண்டுவரப்படலாம். இதற்கான புக்கிங் விரைவில் தொடர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த காருக்கான விலை மற்றும் விற்பனைக்கான அறிமுக தேதி உள்ளிட்ட அனைத்து தகவலும் விரைவில் வெளியிடப்பட இருக்கின்றது.

ஹூண்டாய் க்ரெட்டாவின் புதிய மாடல் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்...

புதிய க்ரெட்டாவை ஹூண்டாய் நிறுவனம் முழுவதுமாக மாற்றியமைத்திருக்கின்றது. குறிப்பாக கூற வேண்டுமானால் ஐஎக்ஸ்25 மாடலை தழுவி க்ரெட்டாவில் ஒரு சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த காரை கடந்த ஆண்டு நடைபெற்ற பெய்ஜிங் ஆட்டோ எக்ஸ்போவில் இந்நிறுவனம் அறிமுகம் செய்திருந்தது.

ஹூண்டாய் க்ரெட்டாவின் புதிய மாடல் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்...

காரின் சிறப்பம்சம் பற்றிய தகவலை அதன் முகப்பு பகுதியில் இருந்து பார்க்கலாம். க்ரெட்டாவின் முகப்பு பகுதியில் பெரியளவிலான ஹூண்டாய் சிக்னேச்சர் பொருந்திய பெரியளவிலான க்ரில் வழங்கப்பட்டுள்ளது.

ஹூண்டாய் க்ரெட்டாவின் புதிய மாடல் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்...

இந்த கிரில் முடியும் இரு முனைகளுக்கும் அருகில்தான் ஹெட்லேம்புகள் நிறுவப்பட்டுள்ளன. அந்த ஹெட்லேம்பை சுற்றிலும் டிஆர்எல்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதே இடத்தில்தான் பனி மற்றும் பகல்நேர மின் விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன.

கூடவே, இவற்றின் அருகில் எஞ்ஜினுக்கு காற்றை எடுத்துச் செல்லும் ஏர் இன்டேக்கர்களும் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை தனித்துவமாக காட்டும் வகையில் கிரே நிறத்திலான பேனல் பொருத்தப்பட்டுள்ளது.

ஹூண்டாய் க்ரெட்டாவின் புதிய மாடல் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்...

இதேபோன்று, இந்த காரின் பக்கவாட்டு பகுதியிலும் லேசான அப்டேட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. நீளமான சில்வர் நிறத்திலான பெரிய அக்சென்ட் கொடுக்கப்பட்டிருப்பது மிக முக்கியமான மாற்றமாக இருக்கின்றது. இது முன்பக்க விண்ட் ஷீல்ட் பகுதியில் தொடங்கி காரின் பின்பக்க சி பில்லர் வரையில் நீள்கின்றது.

இத்துடன், கட்டுமஸ்தான உடல் தோற்றத்தை வழங்குகின்ற வகையிலான லைன்கள் பக்கவாட்டு மற்றும் வீல் ஆர்ச்சு பகுதியில் வழங்கப்பட்டுள்ளது.

ஹூண்டாய் க்ரெட்டாவின் புதிய மாடல் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்...

இதைத்தொடர்ந்து, பின்பக்கத்திலும் மிகப்பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக டெயில் லைட்டுகளுக்கு மறு உருவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, முகப்பு பகுதி ஏர் இன்டேக்கரில் கொடுக்கப்பட்டிருந்ததைப் போன்றே பின் பக்கத்திலும் கிரே ஃபினிஷ்ட் பேனல் நிறுவப்பட்டுள்ளது.

இதுபோன்ற மாற்றங்களால் ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி அடுத்த தலைமுறைக்கு இணையானதாக மாறியுள்ளது.

ஹூண்டாய் க்ரெட்டாவின் புதிய மாடல் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்...

இத்துடன், அப்கிரேட்டுகள் முடிந்துவிட்டது என நினைத்துவிடாதீர்கள். இந்த காரில் பிஎஸ்-6 தரத்திற்கு இணையான எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது கியா நிறுவனத்தின் செல்டோஸ் எஸ்யூவி காரைப் போன்ற பல தேர்வுகளில் கிடைக்க இருக்கின்றது.

1.5 லிட்டர் பெட்ரோல் தேர்வில் கிடைக்கும் க்ரெட்டா 115 பிஎச்பி மற்றும் 142 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது.

ஹூண்டாய் க்ரெட்டாவின் புதிய மாடல் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்...

இதேபோன்று, 1.5 லிட்டர் டீசல் தேர்வில் காணப்படும் க்ரெட்டா 115 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். மேலும், 1.4 லிட்டர் டி-ஜிடிஐ டர்போ பெட்ரோல் தேர்விலும் புதிய க்ரெட்டா கிடைக்கின்றது. இது, அதிகபட்சமாக 140 பிஎச்பி மற்றும் 242 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறனைப் பெற்றுள்ளது.

ஹூண்டாய் க்ரெட்டாவின் புதிய மாடல் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்...

இதுமட்டுமின்றி கியா செல்டோஸைப் போலவே நான்கு விதமான டிரான்ஸ்மிஷன் தேர்விலும் இந்த கார் கிடைக்க இருக்கின்றது. இதில், ஆறு ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸானது க்ரெட்டாவின் அனைத்து வேரியண்டுகளிலும் கிடைக்கும். ஆனால், சிவிடி தேர்வு மட்டும் 1.5 லிட்டர் பெட்ரோல் வேரியண்டிற்கும், 7 டிசிடி தேர்வு 1.4 லிட்டர் பெட்ரோல் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் 1.5 லிட்டர் டீசல் வேரியண்டிலும் கிடைக்கும்.

ஹூண்டாய் க்ரெட்டாவின் புதிய மாடல் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்...

வெளி மற்றும் எஞ்ஜின் தேர்வில் எப்படி புதிய க்ரெட்டா பிரம்மிப்பை ஏற்படுத்துகின்றதோ அதேபோன்று இன்டீரியரிலும் பல்வேறு சொகுசு வசதிகளை உள்ளடக்கியிருக்கின்றது.

ஹூண்டாய் க்ரெட்டாவின் புதிய மாடல் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்...

குறிப்பாக பல்வேறு தரவுகளை வழங்கும் வகையில் தொடுதிரையுடன் கூடிய ஆப்பிள் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதிகொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஏர் ப்யூரிஃபயர், 360 டிகிரி கேமிரா க்ரூஸ் கன்ட்ரோல், பனோரமிக் சன்ரூஃப் உள்ளிட்ட அம்சங்கள் இந்த கார்லி காணப்படுகின்றது.

Most Read Articles
English summary
Auto Expo 2020: New Hyundai Creta Unveiled - Expected Launch Date, Specs, Features, Images & More. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X