விற்பனையில் க்ரெட்டா, செல்டோஸ் இடையே போட்டா போட்டி... யார் நம்பர்-1 தெரியுமா?

விற்பனையில் கியா செல்டோஸ் எஸ்யூவியை வீழ்த்தி நம்பர்-1 இடத்தை தக்க வைத்துள்ளது புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி. கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

பங்காளி யுத்தம்... விற்பனையில் செல்டோஸை சாய்த்த புதிய ஹூண்டாய் க்ரெட்டா

எஸ்யூவி மார்க்கெட்டில் நம்பர்-1 சாய்ஸாக ஹூண்டாய் க்ரெட்டா இருந்து வருகிறது. டிசைன், வசதிகள், எஞ்சின் தேர்வுகள், பட்ஜெட் என அனைத்திலும் நிறைவை தருவதால் வாடிக்கையாளர்களிடம் அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் முற்றிலும் புதிய தலைமுறை மாடலாக ஹூண்டாய் க்ரெட்டா விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

பங்காளி யுத்தம்... விற்பனையில் செல்டோஸை சாய்த்த புதிய ஹூண்டாய் க்ரெட்டா

இந்த நிலையில், அறிமுகம் செய்யப்ட்ட சில நாட்களிலேயே கொரோனா பிரச்னையால் லாக் டவுன் அறிவிப்பு வெளியானது. இருப்பினும், க்ரெட்டா காருக்கு சிறந்த புக்கிங் கிடைத்து வருகிறது. இதுவரை 40,000 பேர் முன்பதிவு செய்துள்ளதாக ஹூண்டாய் அறிவித்துள்ளது.

பங்காளி யுத்தம்... விற்பனையில் செல்டோஸை சாய்த்த புதிய ஹூண்டாய் க்ரெட்டா

மேலும், கடந்த மாதம் சிறப்பான விற்பனையை பதிவு செய்து அசத்தி இருக்கிறது. மிக இக்கட்டான இந்த தருண்த்தில் 7,207 க்ரெட்டா எஸ்யூவிகள் விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது. பல நிறுவனங்கள் விற்பனையை மீட்டெடுக்க போராடி வரும் நிலையில், க்ரெட்டா எஸ்யூவியின் விற்பனை அந்நிறுவனத்திற்கு உற்சாகத்தையும், வர்த்தகத்தில் பெரும் பலமாகவும் மாறி இருக்கிறது.

பங்காளி யுத்தம்... விற்பனையில் செல்டோஸை சாய்த்த புதிய ஹூண்டாய் க்ரெட்டா

இதனிடையே, கியா செல்டோஸ் எஸ்யூவிக்கும் ஹூண்டாய் க்ரெட்டாவுக்கும் கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் மிக சொற்பமான எண்ணிக்கை வித்தியாசத்தில்தான் க்ரெட்டா முன்னிலை பெற்றிருக்கிறது. ஆம், கடந்த மாதம் 7,114 செல்டோஸ் எஸ்யூவி கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

பங்காளி யுத்தம்... விற்பனையில் செல்டோஸை சாய்த்த புதிய ஹூண்டாய் க்ரெட்டா

கியா செல்டோஸ் காரும், ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியும் ஒரே பிளாட்ஃபார்மில்தான் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. மேலும், ஒரே எஞ்சின்கள்தான் இரண்டு கார்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. டிசைன், தொழில்நுட்ப வசதிகள், விலை என அனைத்திலும் இந்த கார்கள் பங்காளிகளாக இருந்தாலும், விற்பனையில் போட்டா போட்டி நிலவுகிறது.

பங்காளி யுத்தம்... விற்பனையில் செல்டோஸை சாய்த்த புதிய ஹூண்டாய் க்ரெட்டா

இரண்டு மாடல்களிலும் எல்இடி ஹெட்லைட்டுகள், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், சன்ரூஃப் உள்ளிட்ட ஏராளமான சிறப்பு அம்சங்களுடன், பாதுகாப்பு தொழில்நுட்ப வசதிகளுடன் உள்ளன. ஒன்றுக்கு ஒன்று டிசைனிலும், வசதிகளிலும் சளைத்ததல்ல.

பங்காளி யுத்தம்... விற்பனையில் செல்டோஸை சாய்த்த புதிய ஹூண்டாய் க்ரெட்டா

விலையிலும் பெரிய வித்தியாசம் எல்லாம் கிடையாது. புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி கார் ரூ.9.99 லட்சம் முதல் ரூ.17.20 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையிலும், கியா செல்டோஸ் எஸ்யூவி ரூ.9.89 லட்சம் முதல் ரூ.17.34 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இரண்டு கார்களுக்கும் தனித்தனி வாடிக்கையாளர் வட்டத்துடன் விற்பனையில் அதிரடி காட்டி வருகின்றன.

Most Read Articles

English summary
The Kia Seltos was beaten by Hyundai Creta by sales in June, 2020.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X