டாடாவின் மின்சார காருக்கு போட்டி... மலிவு விலை எலெக்ட்ரிக் காருடன் கோதாவில் இறங்க ஹூண்டாய் திட்டம்!

டாடா நெக்ஸான் காருக்கு போட்டியாக இருக்கும் வகையில் ஹூண்டாய் நிறுவனம் குறைந்த விலை கார்களை தயாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

டாடா நெக்ஸான் மின்சார காருக்கு போட்டி இதுதான்... மலிவு விலை எலெக்ட்ரிக் காருடன் கோதாவில் இறங்க ஹூண்டாய் தயார்!

இந்தியாவின் புகழ்வாய்ந்த நான்கு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஹூண்டாய் நிறுவனமும் ஒன்று. இந்நிறுவனம், கடந்த ஆண்டு ஜூலை மாதம் கோனா எனும் அதன் முதல் மின்சார காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனம் அறிமுகம் செய்யும் முதல் மின்சார கார் இதுவாகும். அதுமட்டுமின்றி, இந்தியாவில் எஸ்யூவி ரகத்தில் விற்பனைக்கு வந்த முதல் காரும் இதுவே ஆகும்.

டாடா நெக்ஸான் மின்சார காருக்கு போட்டி இதுதான்... மலிவு விலை எலெக்ட்ரிக் காருடன் கோதாவில் இறங்க ஹூண்டாய் தயார்!

ஹூண்டாயின் தயாரிப்பு என்பதாலும் போட்டிக்கு வேறு மின் வாகனங்கள் இல்லாத காரணத்தாலும் கோனா மின்சார காருக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால், இது சற்றே விலை அதிகமான மாடல் என்பதால் பட்ஜெட் வாகன விரும்பிகளின் எட்டாக் கனியாக உள்ளது. அது, இந்திய மதிப்பில் ரூ. 25.30 லட்சம் என்ற விலையில் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது.

டாடா நெக்ஸான் மின்சார காருக்கு போட்டி இதுதான்... மலிவு விலை எலெக்ட்ரிக் காருடன் கோதாவில் இறங்க ஹூண்டாய் தயார்!

மேற்கண்டது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே. ஆன் ரோடில் அது சற்று கூடுதலான மதிப்பிலேயே கிடைக்கும். இதை உணர்ந்த ஹூண்டாய், குறைந்த விலை மின்சாரக் காரை இந்தியாவில் விற்பனைக்கு களமிறக்க இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தது.

டாடா நெக்ஸான் மின்சார காருக்கு போட்டி இதுதான்... மலிவு விலை எலெக்ட்ரிக் காருடன் கோதாவில் இறங்க ஹூண்டாய் தயார்!

இதுகுறித்து, அந்நிறுவனத்தின் இந்தியாவிற்கான எம்டி சியோன் சியோப் கிம் கூறியதாவது, "இந்திய மின்சார வாகனச் சந்தையில் மிகப்பெரிய இடத்தைப் பிடிக்கும் விதமாக புதிய குறைந்த விலை எலெக்ட்ரிக் உற்பத்திக்கு திட்டமிடப்பட்டுள்ளது" என கூறினார்.

இந்த அறிவிப்பு விரைவில் நிறைவேற இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளன.

டாடா நெக்ஸான் மின்சார காருக்கு போட்டி இதுதான்... மலிவு விலை எலெக்ட்ரிக் காருடன் கோதாவில் இறங்க ஹூண்டாய் தயார்!

தற்போது இந்தியாவில் குறைந்த விலை மின்சார காராக டாடா நிறுவனத்தின் நெக்ஸான் எஸ்யூவி இருக்கின்றது. இந்த காருக்கு போட்டியளிக்கும் வகையில் மிக குறைந்த விலைக் காரையே ஹூண்டாய் விரைவில் களமிறக்க இருக்கின்றது. இது 2022ம் ஆண்டிற்குள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் உறுதிச் செய்துள்ளன.

டாடா நெக்ஸான் மின்சார காருக்கு போட்டி இதுதான்... மலிவு விலை எலெக்ட்ரிக் காருடன் கோதாவில் இறங்க ஹூண்டாய் தயார்!

இதற்கான மின்வாகனங்களை இந்தியாவிலேயே வைத்து கட்டமைக்க ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் மட்டுமே அதனை மலிவு விலையில் விற்க முடியும். அதுமட்டுமின்றி, இந்தியாவில் தயாரிக்கப்படும் அந்த மின் வாகனங்கள் அனைத்தும் இந்தியர்களுக்காக மட்டுமே பிரத்யேகமாக விற்பனைச் செய்ய முடிவு செய்திருப்பதாகவும் ஹூண்டாய் அண்மையில் அறிவித்தது.

டாடா நெக்ஸான் மின்சார காருக்கு போட்டி இதுதான்... மலிவு விலை எலெக்ட்ரிக் காருடன் கோதாவில் இறங்க ஹூண்டாய் தயார்!

விலை சற்று குறைவானதாக இருந்தாலும் அக்கார் எந்தவித அம்சக் குறைவையும் பெறாது என்பதை கிம் தெளிவாக கூறியிருக்கிறார். அந்தவகையில், அந்த கார் 200 முதல் 300 கிமீ வரை ரேஞ்ஜை வழங்கும் பேட்டரியைப் பெறலாம் என சில நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

டாடா நெக்ஸான் மின்சார காருக்கு போட்டி இதுதான்... மலிவு விலை எலெக்ட்ரிக் காருடன் கோதாவில் இறங்க ஹூண்டாய் தயார்!

எனவே, அக்கார் டாடாவின் நெக்ஸான் எலெக்ட்ரிக் காருக்கு மட்டுமின்றி விரைவில் விற்பனைக்கு வரவிருக்கும் மஹிந்திரா இஎக்ஸ்யூவி300 காருக்கும் போட்டியாக இருக்கும் என தெரிகின்றது. இக்கார் இந்தியாவில் 2021ம் ஆண்டு களமிறக்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டாடா நெக்ஸான் மின்சார காருக்கு போட்டி இதுதான்... மலிவு விலை எலெக்ட்ரிக் காருடன் கோதாவில் இறங்க ஹூண்டாய் தயார்!

ஹூண்டாய் நிறுவனத்தின் இந்த நிலைப்பாட்டின்படி, மூன்று புதிய மாடல் மின்வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹூண்டாய் நிறுவனமும் தகவல் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தகுந்தது. இந்த புதிய அறிமுகத்திற்காக புரடெக்ஷன் 45 என்ற எஸ்யூவி கான்செப்ட், புரபெசி செடான் மற்றும் இன்னும் அறிவிப்பே செய்யப்படாத ஓர் மாடல் உள்ளிட்டவை தயார்நிலையில் இருக்கின்றன.

டாடா நெக்ஸான் மின்சார காருக்கு போட்டி இதுதான்... மலிவு விலை எலெக்ட்ரிக் காருடன் கோதாவில் இறங்க ஹூண்டாய் தயார்!

இதில், 45 எஸ்யூவி மாடல் ஏற்கனவே உற்பத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைத்தொடர்ந்தே மற்ற மாடல்களும் விரைவில் உற்பத்தி பணிக்கு உயர்த்தப்பட இருக்கின்றன. அதாவது, 2021 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளுக்குள் புரடெக்ஷன் முன்மாதிரி மாடல்களாக உருவாக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.

டாடா நெக்ஸான் மின்சார காருக்கு போட்டி இதுதான்... மலிவு விலை எலெக்ட்ரிக் காருடன் கோதாவில் இறங்க ஹூண்டாய் தயார்!

இதற்கான பணியில்தான் தற்போது ஹூண்டாய் நிறுவனம் புதிய உத்வேகத்துடன் செயல்பட்டுக்கொண்டுள்ளது. எனவே, இந்தியர்கள் ஹூண்டாயின் மலிவு விலைக் கார்களை எண்ணி ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதேசமயம், ஹூண்டாய் இந்த அறிவிப்பை அடுத்து பிற போட்டி நிறுவனங்கள் எப்படி டஃப் கொடுப்பது என்ற முயற்சியில் இறங்கியிருக்கின்றன.

குறிப்பு: புகைப்படங்கள் உதாரணத்திற்காக வழங்கப்பட்டவை...

Most Read Articles
English summary
New Hyundai Electric SUV Confirmed For India Rival Tata Nexon EV Details. Read in Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X