ஹூண்டாய் எலைட் ஐ20 பிஎஸ்6 மாடலின் வேரியண்ட் வாரியாக வசதிகள்!

ஹூண்டாய் எலைட் ஐ20 பிஎஸ்6 மாடலானது பெட்ரோல் எஞ்சின் தேர்வில் மட்டும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் வழங்கப்படும் வேரியண்ட்டுகள் மற்றும் அதில் இடம்பெற்றிருக்கும் வசதிகள் விபரங்களை விரிவாகப் பார்க்கலாம்.

ஹூண்டாய் எலைட் ஐ20 பிஎஸ்6 மாடலின் வேரியண்ட் வாரியாக வசதிகள்!

ஹூண்டாய் எலைட் ஐ20 காரின் பிஎஸ்6 பெட்ரோல் மாடலானது மேக்னா ப்ள்ஸ, ஸ்போர்ட்ஸ் ப்ளஸ், ஸ்போர்ட்ஸ் ப்ளஸ் டியூவல் டோன் மற்றும் அஸ்ட்டா ஆப்ஷனல் ஆகிய வேரியண்ட்டுகளில் கிடைக்கும். இந்த வேரியண்ட்டுகளில் இடம்பெற்றிருக்கும் வசதிகள் விபரங்களை தொடர்ந்து காணலாம்.

ஹூண்டாய் எலைட் ஐ20 பிஎஸ்6 மாடலின் வேரியண்ட் வாரியாக வசதிகள்!

மேக்னா ப்ளஸ்

விலை: ரூ.6.50 லட்சம்

ஹூண்டாய் எலைட் ஐ20 பிஎஸ்6 மாடலின் விலை குறைவான வேரியண்ட்டாக நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது மேக்னா ப்ளஸ் வேரியண்ட். இந்த வேரியண்ட்டில் 14 அங்குல ஸ்டீல் வீல்கள், ஹாலஜன் விளக்குகளுடன் ஹெட்லைட் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

ஹூண்டாய் எலைட் ஐ20 பிஎஸ்6 மாடலின் வேரியண்ட் வாரியாக வசதிகள்!

இரட்டை வண்ண இன்டீரியர், அட்ஜெட்டபிள் ஹெட்ரெஸ்ட், 4 ஸ்பீக்கர்களுடன் 2 டின் ஆடியோ சிஸ்டம், புளூடூத் மற்றும் யுஎஸ்பி கனெக்ட்டிவிட்டி வசதி, பவர் விண்டோஸ், ரியர் ஏசி வென்ட்டுகள், கூல்டு க்ளவ் பாக்ஸ், 12 வோல்ட் பவர் சாக்கெட் ஆகிய வசதிகள் இடம்பெற்றுள்ளன. எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட் ரியர் வியூ மிரர்கள், வேனிட்டி மிரர், சன் க்ளாஸ் ஹோல்டர் ஆகியவையும் உள்ளன.

இரண்டு ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரியர் பார்க்கிங் சென்சார்கள், பனி விளக்குகள், சென்ட்ரல் லாக்கிங், டிரைவர் மற்றும் பயணிகளுக்கான சீட்பெல்ட் ரிமைன்டர் ஆகிய பாதுகாப்பு வசதிகள் உள்ளன.

ஹூண்டாய் எலைட் ஐ20 பிஎஸ்6 மாடலின் வேரியண்ட் வாரியாக வசதிகள்!

ஸ்போர்ட்ஸ் ப்ளஸ்

விலை: 7.37 லட்சம்

மேக்னா ப்ளஸ் வேரியண்ட்டில் இடம்பெற்றிருக்கும் வசதிகளுடன் கூடுதலாக ரியர் பார்க்கிங் கேமரா, ரியர் டீஃபாகர், 15 அங்குல அலாய் வீல்கள், எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதியுடன் ரியர் வியூ மிரர்கள் மற்றும் அதில் இன்டிகேட்டர்கள், ரியர் பார்சல் டிரே, 7.0 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகள், அர்கமிஸ் ஆடியோ சிஸ்டம், வாய்ஸ் ரெகனிஷன் வசதி, டில்ட் மற்றும் டெலிஸ்கோப்பிக் ஸ்டீயரிங் வீல் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

ஹூண்டாய் எலைட் ஐ20 பிஎஸ்6 மாடலின் வேரியண்ட் வாரியாக வசதிகள்!

ஸ்போர்ட்ஸ் ப்ளஸ் டியூவல் டோன்

விலை: ரூ7.66 லட்சம்

இந்த மாடலில் கூடுதலாக இரட்டை வண்ண பெயிண்ட், வயர்லெஸ் சார்ஜர், 16 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள், உட்புறத்திற்கு விசேஷ சிவப்பு வண்ண அலங்கார வேலைப்பாடுகள், அட்ஜெஸ்ட்டபிள் வசதியுடன் ரியர் ஹெட்ரெஸ்ட்டுகள் வழங்கப்படுகின்றன.

ஹூண்டாய் எலைட் ஐ20 பிஎஸ்6 மாடலின் வேரியண்ட் வாரியாக வசதிகள்!

அஸ்ட்டா ஆப்ஷனல்

விலை: ரூ.8.31 லட்சம்

ஹூண்டாய் எலைட் ஐ20 பிஎஸ்6 மாடலின் மிகவும் விலை உயர்ந்த வேரியண்ட்டாக வந்துள்ளது. இந்த வேரியண்ட்டில் 6 ஏர்பேக்குகள், ஆட்டோமேட்டிக் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், கார்னரிங் ஹெட்லைட் வசதி, புஷ் பட்டன் ஸ்டார்ட் - ஸ்டாப் வசதி, கீ லெஸ் என்ட்ரி, 16 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள், ரியர் சென்டர் ஆர்ம் ரெஸ்ட், கனெக்டெட் கார் தொழில்நுட்பம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி, ரியர் வைப்பர் மற்றும் வாஷர் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.

ஹூண்டாய் எலைட் ஐ20 பிஎஸ்6 மாடலின் வேரியண்ட் வாரியாக வசதிகள்!

எஞ்சின் விபரம்

ஹூண்டாய் எலைட் ஐ20 காரின் பிஎஸ்6 பெட்ரோல் மாடலில் 1.2 லிட்டர் எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 83 பிஎச்பி பவரையும், 114 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. பிஎஸ்4 பெட்ரோல் மாடலில் வழங்கப்பட்டு வந்த சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வும் விலக்கப்பட்டுவிட்டது.

ஹூண்டாய் எலைட் ஐ20 பிஎஸ்6 மாடலின் வேரியண்ட் வாரியாக வசதிகள்!

வண்ணத் தேர்வுகள்

புதிய ஹூண்டாய் எலைட் ஐ20 பிஎஸ்6 மாடலானது போலோர் ஒயிட், தைபூன் சில்வர், ஸ்டார் டஸ்ட் மற்றும் ஃபியரி ரெட் ஆகிய ஒற்றை வண்ணத் தேர்வுகளிலும், போலார் ஒயிட் மற்றும் கருப்பு வண்ண கூரையுடன் இரட்டை வண்ணத் தேர்விலும் கிடைக்கும்.

ஹூண்டாய் எலைட் ஐ20 பிஎஸ்6 மாடலின் வேரியண்ட் வாரியாக வசதிகள்!

மதிப்பு மிக்க மாடல்

இதுவரை வழங்கப்பட்டு வந்த பல்வேறு வேரியண்ட்டுகள் மற்றும் டீசல் எஞ்சின் தேர்வுகள் விலக்கப்பட்டுள்ளன. அதேநேரத்தில், எலைட் ஐ20 பிஎஸ்6 மாடலின் மேக்னா ப்ளஸ் என்ற பேஸ் வேரியண்ட்டிலேயே போதுமான வசதிகளை கொடுத்து அசத்தி இருக்கிறது ஹூண்டாய் மோட்டார்ஸ். ரூ.6.50 லட்சம் விலையில் கிடைக்கும் இந்த வேரியண்ட்டிலேயே ஏராளமான வசதிகள் கொடுக்கப்படுவது வாடிக்கையாளர்களுக்கு மதிப்பு மிக்க தேர்வாக அமையும்.

Most Read Articles
English summary
Here are the variant-wise price and features details of the BS6 Hyundai Elite i20 car.
Story first published: Thursday, March 26, 2020, 12:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X