புதிய ஹூண்டாய் எலைட் ஐ20 ஸ்கெட்ச் படங்கள் வெளியீடு... விரைவில் விற்பனைக்கு வருகிறது!

புதிய தலைமுறை ஹூண்டாய் எலைட் ஐ20 காரின் ஸ்கெட்ச் படங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த புதிய ஸ்கெட்ச் படங்கள் மற்றும் தகவல்களை தொடர்ந்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய ஹூண்டாய் எலைட் ஐ20 ஸ்கெட்ச் படங்கள் வெளியீடு... விரைவில் விற்பனைக்கு வருகிறது!

இந்தியாவின் பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் சிறந்த தேர்வுகளில் ஒன்றாக ஹூண்டாய் எலைட் ஐ20 கார் இருந்து வருகிறது. இந்த நிலையில், சந்தைப் போட்டி அதிகரித்துள்ளதால், எலைட் ஐ20 காரில் அதிக தொழில்நுட்பங்கள், வடிவமைப்பு மாற்றங்களுடன் மேம்படுத்தி இருக்கிறது ஹூண்டாய் மோட்டார் நிறுவனம்.

புதிய ஹூண்டாய் எலைட் ஐ20 ஸ்கெட்ச் படங்கள் வெளியீடு... விரைவில் விற்பனைக்கு வருகிறது!

வாடிக்கையாளர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த புதிய ஹூண்டாய் எலைட் ஐ20 கார் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. அதாவது, தீபாவளிக்கு முன்னதாக விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஹூண்டாய் எலைட் ஐ20 ஸ்கெட்ச் படங்கள் வெளியீடு... விரைவில் விற்பனைக்கு வருகிறது!

இந்த நிலையில், இந்த காரின் வருகையை அறிவிக்கும் விதமாகவும், வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாகவும், புதிய ஸ்கெட்ச் படங்களை ஹூண்டாய் மோட்டார்ஸ் வெளியிட்டு இருக்கிறது. இப்படித்தான் புதிய ஹூண்டாய் எலைட் ஐ20 கார் இருக்கும் என்பதை காட்டும் விதமாக இந்த படங்கள் அமைந்துள்ளன.

புதிய ஹூண்டாய் எலைட் ஐ20 ஸ்கெட்ச் படங்கள் வெளியீடு... விரைவில் விற்பனைக்கு வருகிறது!

புதிய ஹூண்டாய் எலைட் ஐ20 காரில் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள் உள்ளன. டியூவல் டோன் வண்ணத் தேர்வுகளிலும், கூர்மையான டிசைன் அம்சங்களுடன் இந்த கார் வர இருக்கிறது.

புதிய ஹூண்டாய் எலைட் ஐ20 ஸ்கெட்ச் படங்கள் வெளியீடு... விரைவில் விற்பனைக்கு வருகிறது!

உட்புறமும் முற்றிலும் புதிய டேஷ்போர்டு டிசைன், நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் வர இருக்கிறது. இந்த காரில் 10.25 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், புளூலிங்க் கனெக்டெட் கார் தொழில்நுட்பம், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதிகள் இடம்பெரும்.

புதிய ஹூண்டாய் எலைட் ஐ20 ஸ்கெட்ச் படங்கள் வெளியீடு... விரைவில் விற்பனைக்கு வருகிறது!

ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், க்ரூஸ் கன்ட்ரோல் , வயர்லெஸ் சார்ஜர், போஸ் சவுண்ட் சிஸ்டம், சன்ரூஃப், எலெக்ட்ரிக் சன்ரூஃப், ரியர் வியூ கேமரா, இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஏர்பேக்குகள் உள்ளிட்ட ஏராளமான வசதிகளை இந்த கார் பெற்றிருக்கும்.

புதிய ஹூண்டாய் எலைட் ஐ20 ஸ்கெட்ச் படங்கள் வெளியீடு... விரைவில் விற்பனைக்கு வருகிறது!

ஹூண்டாய் வெனியூ காரில் பயன்படுத்தப்படும் அதே எஞ்சின் தேர்வுகள் இந்த காரிலும் எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஐ20 காரில் 83 பிஎச்பி பவரையும், 114 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வும் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸும் வழங்கபபடுகிறது.

புதிய ஹூண்டாய் எலைட் ஐ20 ஸ்கெட்ச் படங்கள் வெளியீடு... விரைவில் விற்பனைக்கு வருகிறது!

இதன் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் 120 பிஎச்பி பவரையும், 172 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இதில், 6 ஸ்பீடு ஐஎம்டி கியர்பாக்ஸ் அல்லது 7 ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் தேர்வும் கொடுக்கப்டும். இதன் டீசல் மாடலில் 1.5 லிட்டர் எஞ்சின் 110 பிஎச்பி பவரையும், 240 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும். 6 ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் எதிர்பார்க்கலாம்.

புதிய ஹூண்டாய் எலைட் ஐ20 ஸ்கெட்ச் படங்கள் வெளியீடு... விரைவில் விற்பனைக்கு வருகிறது!

புதிய ஹூண்டாய் எலைட் ஐ20 கார் ரூ.6.50 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் வாய்ப்புள்ளது. டாடா அல்ட்ராஸ், மாருதி பலேனோ, ஹோண்டா ஜாஸ், ஃபோக்ஸ்வேகன் போலோ கார்களுடன் போட்டி போடும்.

Most Read Articles

English summary
Hyundai has officially unveiled the first set of teaser images of the upcoming all-new i20 premium hatchback. The all-new Hyundai i20 is expected to go on sale in the Indian market sometime in November. The all-new premium hatchback features a completely revamped design to both it's exterior and interior, while also coming packed with a host of features and equipment as well.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X