ஹைப்ரீட் வெர்சனில் வரும் 2021 ஹூண்டாய் டக்ஸன்!! காரின் புதிய வீடியோ வெளியீடு

ஹூண்டாய் மோட்டார்ஸின் முற்றிலும் புதிய 2021 டக்ஸன் ஹைப்ரீட் காரை பற்றிய விபரங்கள் வீடியோ ஒன்றின் மூலமாக வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஹைப்ரீட் வெர்சனில் வரும் 2021 ஹூண்டாய் டக்ஸன்!! காரின் புதிய வீடியோ வெளியீடு

க்ராஸ்ஓவர் தோற்றம் கொண்ட காரான ஹூண்டாய் டக்ஸன் 2004ல் இருந்து சர்வதேச சந்தைகளில் விற்பனையில் உள்ளது. இந்தியா உள்பட சில நாடுகளை தவிர்த்து டக்ஸன் மாடல் பெரும்பான்மையான நாடுகளில் பிரபலமான ஹூண்டாய் காராக இருந்து வருகிறது.

ஹைப்ரீட் வெர்சனில் வரும் 2021 ஹூண்டாய் டக்ஸன்!! காரின் புதிய வீடியோ வெளியீடு

இதனால் மற்ற மாடல்களை காட்டிலும் டக்ஸனின் அடுத்த தலைமுறை வெர்சனின் மீது அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. 2021 ஹூண்டாய் டக்ஸன் புதிய ப்ளாட்ஃபாரத்தின் முன்னிலையில் உருவாக்கப்பட்டுள்ளதால் காரின் மொத்தம் பரிணாம அளவுகளும் அதிகரித்துள்ளன.

ஹைப்ரீட் வெர்சனில் வரும் 2021 ஹூண்டாய் டக்ஸன்!! காரின் புதிய வீடியோ வெளியீடு

குறிப்பாக முதன்முறையாக டக்ஸன் 2021ஆம் ஆண்டிற்காக நீண்ட வீல்பேஸில் வழங்கப்படவுள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், 2021 டக்ஸன் முன்பக்கத்தில் பகல்நேரத்திலும் ஒளிரக்கூடிய விளக்குகளுடன் நேர்த்தியான தோற்றத்தில் க்ரில் அமைப்பை கொண்டுள்ளது.

கார் இயக்கத்தில் இல்லாதபோது இந்த டிஆர்எல்-கள் க்ரில்லின் ஒரு பகுதியாகவே இருக்கும். ஹெட்லேம்ப்கள் முன் பம்பரின் அடிப்பகுதியில் வழங்கப்பட்டுள்ளன. இவை தவிர்த்து 19 இன்ச் சக்கரங்கள், முக்கியமான க்ரோம் ஸ்ட்ரிப், சிறிய ஓவர்ஹேங்க்ஸ், T-வடிவிலான எல்இடி டெயில்லேம்ப்கள் மற்றும் மறைவான பின்பக்க வைபர் போன்ற பாகங்களையும் காரின் வெளிபுறத்தில் பார்க்க முடிகிறது.

ஹைப்ரீட் வெர்சனில் வரும் 2021 ஹூண்டாய் டக்ஸன்!! காரின் புதிய வீடியோ வெளியீடு

அதேநேரம் கேரக்டர் லைன்களும் காரை சுற்றிலும் தென்படுகின்றன. சக்கரங்களுக்கு மேற்புறத்தில் வளைவுகள் நன்கு அகலமானதாகவே கொடுக்கப்பட்டுள்ளன. பின்பக்கத்தில் டெயில்லேம்ப்களை லைட்டிங் பார் இணைக்கிறது. இதுவே காருக்கு அகலமான தோற்றத்தையும் வழங்குகிறது.

ஹைப்ரீட் வெர்சனில் வரும் 2021 ஹூண்டாய் டக்ஸன்!! காரின் புதிய வீடியோ வெளியீடு

உட்புறத்தில் பொத்தான்கள் குறைவாகவே வழங்கப்பட்டுள்ளன. இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதியுடன் 10.25 இன்ச் தொடுத்திரை உடன் உள்ளது. ஓட்டுனருக்கு தேவையான தகவல்களை வழங்கும் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் திரையும் 10.25 இன்ச்சில் கொடுக்கப்பட்டுள்ளது.

ஹைப்ரீட் வெர்சனில் வரும் 2021 ஹூண்டாய் டக்ஸன்!! காரின் புதிய வீடியோ வெளியீடு

இவை தவிர்த்து ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், போதுமான இடைவெளிகளுடன் இருக்கைகள், வயர் இல்லா சார்ஜர், பனோராமிக் சன்ரூஃப், கேபினை சுற்றிலும் விளக்குகள், 360-கோண கேமிரா, டிஜிட்டல் தரத்தில் சாவி, பின் இருக்கை பயணிகளுக்கும் ஏசி உள்ளிட்டவற்றையும் சிறப்பம்சங்களாக உட்புறத்தில் 2021 டக்ஸன் பெற்றுள்ளது.

ஹைப்ரீட் வெர்சனில் வரும் 2021 ஹூண்டாய் டக்ஸன்!! காரின் புதிய வீடியோ வெளியீடு

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு இந்த 2021 மாடல் 1.6 லிட்டர், 4-சிலிண்டர் பெட்ரோல், 2.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் என்ற மூன்று விதமான என்ஜின் தேர்வுகளில் விற்பனையை துவங்கவுள்ளது. இதில் 1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 180 எச்பி மற்றும் 265 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

ஹைப்ரீட் வெர்சனில் வரும் 2021 ஹூண்டாய் டக்ஸன்!! காரின் புதிய வீடியோ வெளியீடு

அதுவே 2.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மூலமாக 190 எச்பி மற்றும் 247 என்எம் டார்க் திறனையும், 2.0 லிட்டர் டீசல் என்ஜின் மூலமாக 186 எச்பி மற்றும் 417 என்எம் டார்க் திறனையும் அதிகப்பட்சமாக பெற முடியும். இவற்றுடன் ஹைப்ரீட் வேரியண்ட்டில் 2021 டக்ஸன் அறிமுகமாகவுள்ளது. இதன் ஹைப்ரீட் வேரியண்ட்டில் 1.6 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின், எலக்ட்ரிக் மோட்டார் உடன் வழங்கப்படும்.

ஹைப்ரீட் வெர்சனில் வரும் 2021 ஹூண்டாய் டக்ஸன்!! காரின் புதிய வீடியோ வெளியீடு

இந்த செட்அப்பின் மூலமாக 230 எச்பி மற்றும் 350 என்எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக பெறலாம். இவற்றுடன் 7-ஸ்பீடு டிசிடி, 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் மற்றும் அனைத்து-சக்கர-ட்ரைவ் அமைப்பும் தேர்வுகளாக வழங்கப்படவுள்ளது. சில மாதங்களுக்கு முன்புதான் இந்திய சந்தையில் டக்ஸன் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வெளியானதால், டக்ஸன் ஹைப்ரீட் மாடலையும் எதிர்காலத்தில் எதிர்பார்க்கலாம்.

Most Read Articles

English summary
All-New 2021 Hyundai Tucson Hybrid Detailed In New Video
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X