புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவி சீனாவில் வெளியீடு... இந்திய அறிமுகம் எப்போது?

புதுப்பொலிவுடன் கூடிய புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவி சீனாவில் நடந்து வரும் குவாங்ஸோ ஆட்டோ ஷோவில் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த புதிய மாடலின் படங்கள், விபரங்கள் மற்றும் இந்திய வருகை விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவி சீனாவில் வெளியீடு... இந்திய அறிமுகம் எப்போது?

2021 மாடலாக வர இருக்கும் புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியில் ஏராளமான மாற்றங்களுடன் கூடிய ஃபேஸ்லிஃப்ட் மாடலாக வெளியிடப்பட்டுள்ளது. ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள் மற்றும் முகப்பு க்ரில் அமைப்பு இணைந்தாற்போல் டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவி சீனாவில் வெளியீடு... இந்திய அறிமுகம் எப்போது?

க்ரில் அமைப்பிலும் மாற்றம் செய்யப்பட்டு புதுப்பொலிவு கொடுக்கப்பட்டுள்ளது. பம்பர் அமைப்பும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. புதிய பகல்நேர விளக்குகள் அமைப்பு, பம்பரின் கீழ்பாகத்தில் பனி விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன ஏர் டேம் அமைப்பு மிக நீளமானதாக காட்சி தருகிறது.

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவி சீனாவில் வெளியீடு... இந்திய அறிமுகம் எப்போது?

புதிய அலாய் வீல்கள், காரை சுற்றிலும் பிளாக் க்ளாடிங் சட்டம் கொடுக்கப்பட்டு இருக்கறது. பின்புறத்தில் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை. அதாவது, காரின் ஒட்டுமொத்த தோற்றத்தில் பெரிய மாற்றங்கள் இல்லாமல் சிறிய மாற்றங்களுடன் புதுப்பொலிவு கொடுக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவி சீனாவில் வெளியீடு... இந்திய அறிமுகம் எப்போது?

அதேநேரத்தில், காரின் நீளம் 28 மிமீ வரையிலும், அகலம் 17 மிமீ வரையிலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. வீல் பேஸ் 2,636 மிமீ ஆக தொடர்கிறது. வீல் பேஸ் நீளத்தில் மாற்றங்கள் இல்லை.

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவி சீனாவில் வெளியீடு... இந்திய அறிமுகம் எப்போது?

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியில் புதிய 12.3 அங்குல ஃப்ரீ-ப்ளோட்டிங் வடிவிலான தொடுதிரை அமைப்புடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த சாதனம் ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும். கனெக்டெட் கார் தொழில்நுட்பமும் உள்ளது. ஜீப் நிறுவனத்தின் UConnect-5 ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இந்த சாதனம் இயங்குகிறது.

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவி சீனாவில் வெளியீடு... இந்திய அறிமுகம் எப்போது?

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியில் 10.25 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, பிரிமீயம் சவுண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர் உள்ளிட்ட வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவி சீனாவில் வெளியீடு... இந்திய அறிமுகம் எப்போது?

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் ஆஃப்ரோடு வேரியண்ட்டாக விற்பனை செய்யப்படும் ட்ரெயில்ஹாக் வேரியண்ட்டும் காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கிறது. கருப்பு வண்ண பூச்சுடன் க்ரில் அமைப்பு, பானட்டில் கருப்பு - சிவப்பு அலங்கார பாடி டீக்கெல், வேறு வாகனம் மூலமாக இழுப்பதற்கான ஊக்கு அமைப்பு ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. ட்ரெயில்ஹாக் வேரியண்ட்டின் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் கூடுதலாக இருப்பதும் முக்கிய விஷயமாக இருக்கிறது.

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவி சீனாவில் வெளியீடு... இந்திய அறிமுகம் எப்போது?

புதிய ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் தொடர்ந்து தக்க வைக்கப்பட்டுள்ளன. பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 160 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 173 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவி சீனாவில் வெளியீடு... இந்திய அறிமுகம் எப்போது?

இந்த கார்களில் வழங்கப்படும் பெட்ரோல், டீசல் எஞ்சின் தேர்வுகளுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படுகிறது. பெட்ரோல் மாடலில் 7 ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் தேர்வும், டீசல் மாடலில் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வும் வழங்கப்படும். இந்த எஸ்யூவியில் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வும் வழங்கப்படும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவி சீனாவில் வெளியீடு... இந்திய அறிமுகம் எப்போது?

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவி அடுத்த ஆண்டு இந்தியாவி்ல விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. எம்ஜி ஹெக்டர், டாடா ஹாரியர், ஸ்கோடா கரோக், ஃபோக்ஸ்வேகன் டி ராக், ஹூண்டாய் டூஸான் ஆகிய எஸ்யூவி மாடல்களுடன் போட்டி போடுகிறது.

Most Read Articles
மேலும்... #ஜீப் #jeep
English summary
Jeep has officially unveiled the much-awaited Compass facelift at the 2020 Guangzhou Auto Show in China. The company showcased both standard and the Trailhawk variant of the updated Jeep Compass at the expo.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X