பிரபலமான மும்பை சாலையில் கம்பீரமாக உலாவந்த 2021 ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட்!! காரின் நிறம்தான் கண்ணைக்கவருது

எந்தவொரு மறைப்பும் இல்லாமல் 2021 ஜீப் காம்பஸ் கார் ஒன்று இரவில் சோதனையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான ஸ்பை படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

பிரபலமான மும்பை சாலையில் கம்பீரமாக உலாவந்த 2021 ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட்!! காரின் நிறம்தான் கண்ணைக்கவருது

முதன்முதலாக 2017ல் அறிமுகப்படுத்தப்பட்ட ஜீப் காம்பஸ் காரின் புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் வருகிற ஜனவரி 7ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அதற்கு முன்னதாக தற்போது இதன் ஸ்பை படங்கள் ஷிஃப்டிங் கியர் இணையத்தள பக்கத்தில் வெளியாகியுள்ளன.

பிரபலமான மும்பை சாலையில் கம்பீரமாக உலாவந்த 2021 ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட்!! காரின் நிறம்தான் கண்ணைக்கவருது

மும்பையில் பிரபலமான சாலையில் இரவில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த சோதனையில் 2021 காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் எந்தவொரு மறைப்பாலும் மறைக்கப்படாததுதான் இதில் சிறப்பம்சமே.

பிரபலமான மும்பை சாலையில் கம்பீரமாக உலாவந்த 2021 ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட்!! காரின் நிறம்தான் கண்ணைக்கவருது

இதில் சோதனை கார் டாடா நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்தி இருந்த ஹெரியர் கமோ எடிசனின் பச்சை நிறத்தில் காட்சியளிக்கிறது. காம்பஸின் ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் முன்னதாக 2020ஆம் ஆண்டின் துவக்கத்தில் குவாங்சோ ஆட்டோ கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.

பிரபலமான மும்பை சாலையில் கம்பீரமாக உலாவந்த 2021 ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட்!! காரின் நிறம்தான் கண்ணைக்கவருது

அது சீன வெர்சனாகும், அதனுடன் ஒப்பிடுகையில் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகவுள்ள காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் தோற்றத்தில் சற்று வித்தியாசப்படும். இந்த ஃபேஸ்லிஃப்ட் கார் இந்தியாவில் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டு வருவதால் காரை பற்றிய பெரும்பாலான விபரங்களை ஏற்கனவே நமது தளத்தில் பதிவிட்டுள்ளோம்.

பிரபலமான மும்பை சாலையில் கம்பீரமாக உலாவந்த 2021 ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட்!! காரின் நிறம்தான் கண்ணைக்கவருது

ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடாக புதிய பம்பர், 7 ஸ்லாட் உடன் அடையாள க்ரில், புதிய காற்று ஏற்பான்கள் மற்றும் திருத்தியமைக்கப்பட்ட மூடுபனி விளக்குகளுடன் காரின் முன்பக்கம் முற்றிலுமாக திருத்தியமைக்கப்பட்டுள்ளது. இவற்றுடன் எல்இடி டிஆர்எல்களுடன் எல்இடி ஹெட்லேம்ப்களை பெற்றுள்ள இந்த 2021 மாடலில் அலாய் சக்கரங்களின் டிசைனும் மாற்றப்படவுள்ளது.

பிரபலமான மும்பை சாலையில் கம்பீரமாக உலாவந்த 2021 ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட்!! காரின் நிறம்தான் கண்ணைக்கவருது

இவை தவிர்த்து வெளிப்புறத்தில் பெரிய அளவில் எந்த மாற்றமும் வழங்கப்படவில்லை. ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடாக உட்புறத்திலும் 2021 காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் எஃப்சிஏ-வின் யுகனெக்ட் 5 மென்பொருள் உடன் பெரிய 10.1 இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தை பெற்றுவரவுள்ளது.

பிரபலமான மும்பை சாலையில் கம்பீரமாக உலாவந்த 2021 ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட்!! காரின் நிறம்தான் கண்ணைக்கவருது

டாப் ட்ரிம்களில் மற்ற ட்ரிம்களை காட்டிலும் சிறப்பான உட்புற கேபின் வழங்கப்படவுள்ளன. மற்றப்படி தற்போதைய 1.4 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் தேர்வுகளில் எந்த மாற்றமும் வழங்கப்பட போவதில்லை. ஏனெனில் இவை சமீபத்தில்தான் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமாக மேம்படுத்தப்பட்டன.

பிரபலமான மும்பை சாலையில் கம்பீரமாக உலாவந்த 2021 ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட்!! காரின் நிறம்தான் கண்ணைக்கவருது

ஜீப் காம்பஸ் தற்சமயம் ரூ.17 -25 லட்சத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனுடன் ஒப்பிடும்போது 2021 காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் சற்று ப்ரீமியமாகவே வெளிவரும். இந்த ஃபேஸ்லிஃப்ட் காருக்கான முன்பதிவுகள் ஏற்கனவே ரூ.51,000 என்ற முன் தொகையுடன் அதிகாரப்பூர்வமற்ற முறையில் நடைபெற்று வருகின்றன.

Most Read Articles

மேலும்... #ஜீப் #jeep
English summary
2021 Jeep Compass Facelift Spy Pics
Story first published: Thursday, December 31, 2020, 12:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X