2021 ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் டீசர் வெளியீடு... முக்கிய விபரம்!

இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ள 2021 ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இந்த புதிய மாடல் குறித்த சில கூடுதல் விபரங்களும் வெளியாகி இருக்கிறது.

2021 ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் டீசர் வெளியீடு... முக்கிய விபரம்!

வடிவமைப்பிலும், வசதிகளிலும் மேம்பட்ட மாடலாக ஜீப் காம்பஸ் மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 7ந் தேதி புதிய ஜீப் காம்பஸ் இந்தியாவில் வெளியிடப்பட உள்ளது. இந்த நிலையில், இந்த கார் குறித்து வாடிக்கையாளர் மத்தியில் பிரபலப்படுத்தும் முயற்சிகளில் ஜீப் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

அதன்படி, இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ள புதிய காம்பஸ் எஸ்யூவி ஜீப் இந்தியா இணையதளத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் புதிய வண்ணத்தேர்வும் உறுதியாகி இருக்கிறது.

2021 ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் டீசர் வெளியீடு... முக்கிய விபரம்!

அதாவது, ஜீப் காம்பஸ் எஸ்யூவி புதிய பச்சை வண்ணத் தேர்வில் வர இருக்கிறது. அந்த வண்ணத்திலான காம்பஸ் எஸ்யூவியை ஜீப் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

2021 ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் டீசர் வெளியீடு... முக்கிய விபரம்!

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியில் புதிய க்ரில் அமைப்பு, எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், புதிய பம்பர் அமைப்பு, மறுவடிவமைப்பு பெற்ற எல்இடி டெயில் லைட் க்ளஸ்ட்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

2021 ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் டீசர் வெளியீடு... முக்கிய விபரம்!

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியில் 10.1 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. ஆப்பிள் கார் ப்ளே அல்லது ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும். மேலும், ஜீப் நிறுவனத்தின் யு-கனெக்ட்-5 என்ற கனெக்ட்டிவிட்டி தொழில்நுட்ப வசதியையும் பெற்றிருக்கிறது.

2021 ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் டீசர் வெளியீடு... முக்கிய விபரம்!

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் புதிய ஸ்டீயரிங் வீல், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், டியூவல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், பனோரமிக் சன்ரூஃப், வென்டிலேட்டட் இருக்கைகள், 360 டிகிரி கேமரா உள்ளிட்டவை முக்கிய வசதிகளாக இருக்கும்.

2021 ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் டீசர் வெளியீடு... முக்கிய விபரம்!

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியில் எஞ்சின் தேர்வுகளில் மாற்றம் இருக்காது. தற்போது வழங்கப்படும் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் தக்க வைக்கப்படும். பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 163 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

2021 ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் டீசர் வெளியீடு... முக்கிய விபரம்!

டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 172 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

2021 ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் டீசர் வெளியீடு... முக்கிய விபரம்!

வரும் ஜனவரி 7ந் தேதி இந்தியாவில் வெளியீட்டு நிகழ்வின்போதே, புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவிக்கு அதிகாரப்பூர்வ புக்கிங் பணிகள் துவங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி 23ந் தேதி முறைப்படி விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. எம்ஜி ஹெக்டர், ஸ்கோடா கரோக் ஆகிய எஸ்யூவிகளுக்கு போட்டியாக இருக்கும்.

Most Read Articles
--

மேலும்... #ஜீப் #jeep
English summary
Jeep India is all set to introduce its new Compass facelift SUV in the country in the coming weeks. The company recently confirmed that the new Compass facelift will be unveiled in India on the 7th of January 2021.
Story first published: Tuesday, December 29, 2020, 11:43 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X