கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய கியா செல்டோஸ் க்ராவிட்டி கார்... இந்தியாவில் அறிமுகமாகுமா..?

கியா மோட்டார்ஸ் நிறுவனம் 2021ஆம் ஆண்டிற்காக செல்டோஸ் மாடலை கூடுதல் பாதுகாப்பிற்கான கிட் உடனும் புதிய டாப்-எண்ட் க்ராவிட்டி ட்ரிம் உடனும் அப்டேட் செய்துள்ளது. இதன்படி இந்த மிட்சைஸ் எஸ்யூவி காரில் கொண்டுவரப்பட்டுள்ள அப்டேட்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய கியா செல்டோஸ் க்ராவிட்டி கார்... இந்தியாவில் அறிமுகமாகுமா..?

புதிய செல்டோஸ் க்ராவிட்டி ட்ரிம் ஆனது இந்த எஸ்யூவி மாடலின் ஆரம்ப நிலை ட்ரெண்ட், ப்ரெஸ்டிஜ் மற்றும் சிக்னேஜர் ட்ரிம்களில் இருந்து வேறுப்படுவதற்காக உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் ஏகப்பட்ட காஸ்மெட்டிக் மாற்றங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய கியா செல்டோஸ் க்ராவிட்டி கார்... இந்தியாவில் அறிமுகமாகுமா..?

இந்த வகையில் இதன் முன்புறத்தில் பைஸ்போக், கியா லோகோ மற்றும் மூன்று-பரிமாண டிசைன் பாகங்களுடன் க்ரோம் பதிக்கப்பட்ட க்ரில் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. 18 இன்ச்சில் ட்யூல்-டோனில் அலாய் சக்கரங்களை பெற்றுள்ள இந்த டாப்-எண்ட் ட்ரிம்மில் பக்கவாட்டு கண்ணாடிகள், கதவு கார்னிஷ் மற்றும் பின்புற ஸ்கிட் ப்ளேட்களில் சில்வர் நிற தொடுதல்கள் காணப்படுகின்றன.

கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய கியா செல்டோஸ் க்ராவிட்டி கார்... இந்தியாவில் அறிமுகமாகுமா..?

க்ரே நிற பெயிண்ட் அமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ள செல்டோஸ் க்ராவிட்டி மாடலின் உட்புறத்தில் கொரியா, அமெரிக்கா மற்றும் ரஷ்யா நாட்டு சந்தைகளுக்காக இடது கை ட்ரைவ் மோட் வழங்கப்பட்டுள்ளது. இதனால் இதன் டேஸ்போர்டும் இடது கை ட்ரைவிங்கிற்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய கியா செல்டோஸ் க்ராவிட்டி கார்... இந்தியாவில் அறிமுகமாகுமா..?

புதிய க்ராவிட்டி ட்ரிம்மில் முக்கியமான சிறப்பம்சங்களாக பயணிகளின் பாதுகாப்பிற்கான தொழிற்நுட்பங்கள் தான் குறிப்பிடப்பட்டுள்ளன. இதன்படி முன்புறமாக கார் மோதும் சூழ்நிலை உருவானால் தானாக தடுக்கும் வசதி மற்றும் பின் இருக்கை பயணிகள் (குறிப்பாக குழந்தைகள்) வெளியேற்றத்தின்போது வெளியேறாமல் இருக்கையில் அமர்ந்திருந்தால் ஓட்டுனருக்கு எச்சரிக்கும் வசதி உள்ளிட்டவை உள்ளன.

கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய கியா செல்டோஸ் க்ராவிட்டி கார்... இந்தியாவில் அறிமுகமாகுமா..?

இவற்றுடன் லேன் கீப் அசிஸ்ட் மற்றும் ஹை பீம் அசிஸ்ட் போன்ற பாதுகாப்பு தொழிற்நுட்பங்களையும் இந்த புதிய ட்ரிம்-ல் கியா நிறுவனம் வழங்கியுள்ளது. மற்றப்படி காருக்கு வழங்கப்படும் என்ஜின் அமைப்புகளில் மாற்றம் இல்லை.

கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய கியா செல்டோஸ் க்ராவிட்டி கார்... இந்தியாவில் அறிமுகமாகுமா..?

சர்வதேச சந்தையில் கியா செல்டோஸ் காரில் 177 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடிய 1.6 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜினும், 136 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடிய 1.6 லிட்டர் டீசல் என்ஜினும் வழங்கப்பட்டு வருகின்றன. இதனுடன் 7-ஸ்பீடு டிசிடி ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் நிலையாகவும், ஆல்-வீல் ட்ரைவ் செயல்பாடு கூடுதல் தேர்வாகவும் கொடுக்கப்படுகின்றன.

கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய கியா செல்டோஸ் க்ராவிட்டி கார்... இந்தியாவில் அறிமுகமாகுமா..?

அதுவே இந்திய செல்டோஸ் மாடலுக்கு 115 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடிய 1.5 லிட்டர் பெட்ரோல், 140 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடிய 1.4 லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 115 பிஎச்பி பவரை வழங்கக்கூடிய 1.5 லிட்டர் டீசல் என மூன்று என்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய கியா செல்டோஸ் க்ராவிட்டி கார்... இந்தியாவில் அறிமுகமாகுமா..?

இதில் அனைத்து என்ஜினுடனும் 6-ஸ்பீடு மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் நிலையாகவும், ஒவ்வொரு என்ஜினிற்கும் வெவ்வேறு விதமான ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் தேர்வும் கொடுக்கப்படுகின்றன. இந்திய சந்தையில் செல்டோஸ் க்ராவிட்டி மாடல் அறிமுகமாகுவதற்கான உறுதியான தகவல்கள் எதுவும் தற்போதைக்கு இல்லை.

Most Read Articles
English summary
New Kia Seltos Gravity revealed
Story first published: Saturday, July 4, 2020, 1:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X