லேண்ட்ரோவர் டிஃபென்டர் எஸ்யூவியின் ஹைப்ரிட் மாடல்கள் வெளியீடு!

லேண்ட்ரோவர் டிஃபென்டர் எஸ்யூவியின் ஹைப்ரிட் மாடல்களின் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த காரில் வழங்கப்பட இருக்கும் ஹைப்ரிட் தொழில்நுட்பத்தின் சிறப்புகள், செயல்திறன் உள்ளிட்ட முக்கியத் தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

லேண்ட்ரோவர் டிஃபென்டர் எஸ்யூவியின் ஹைப்ரிட் மாடல்கள் வெளியீடு!

பல்வேறு கூடுதல் சிறப்பம்சங்களுடன் 2021 மாடலாக அறிமுகம் செய்யப்பட உள்ள லேண்ட்ரோவர் டிஃபென்டர் எஸ்யூவியில் பல புதிய தொழில்நுட்ப அம்சங்கள் இடம்பெற இருக்கின்றன. அதில், மிக முக்கிய மாற்றமாக, பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் ஹைப்ரிட் தொழில்நுட்பம் வழங்கப்பட உள்ளது. முதலாவதாக லேண்ட்ரோவர் டிஃபென்டர் 110 மாடலில் இந்த ஹைப்ரிட் தொழில்நுட்பங்கள் வழங்கப்படுகின்றன.

லேண்ட்ரோவர் டிஃபென்டர் எஸ்யூவியின் ஹைப்ரிட் மாடல்கள் வெளியீடு!

அதேநேரத்தில், பெட்ரோல் மாடலானது 'ப்ளக் இன்' வகை ஹைப்ரிட் தொழில்நுட்பத்தில் வர இருக்கிறது. அதாவது, பெட்ரோல் எஞ்சின் மற்றும் பேட்டரியில் இயங்கும் மின் மோட்டார் பொருத்தப்பட்டு இருக்கும். இந்த மின் மோட்டாருடன் இணைக்கப்பட்டு இருக்கும் பேட்டரியை எலெக்ட்ரிக் கார்களின் பேட்டரியை போலவே, சார்ஜ் செய்து கொள்ளலாம்.

லேண்ட்ரோவர் டிஃபென்டர் எஸ்யூவியின் ஹைப்ரிட் மாடல்கள் வெளியீடு!

இந்த மாடலின் ஆகச் சிறந்த விஷயம் யாதெனில், பெட்ரோல் எஞ்சினை முழுமையாக அணைத்து வைத்துவிட்டு மின் மோட்டாரில் மட்டுமே காரை செலுத்த முடியும். இதன் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்துவிட்டால் 43 கிமீ தூரம் வரை பயணிக்கலாம். இதன்மூலமாக, அலுவலகம் செல்வது உள்ளிட்ட தினசரி விஷயங்களை பேட்டரியை சார்ஜ் செய்து கொண்டு மின் மோட்டாரில் மட்டுமே இயக்கி முடித்துவிட முடியும்.

லேண்ட்ரோவர் டிஃபென்டர் எஸ்யூவியின் ஹைப்ரிட் மாடல்கள் வெளியீடு!

இந்த மாடலில் 19.2kWh பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. இதன் பேட்டரியை ஃபாஸ்ட் சார்ஜ் மூலமாக 30 நிமிடங்களில் 80 சதவீதம் அளவுக்கு சார்ஜ் ஏற்றிவிட முடியும். ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் தொழில்நுட்பம் மூலமாகவும் பேட்டரியை சார்ஜ் செய்துவிடலாம்.

லேண்ட்ரோவர் டிஃபென்டர் எஸ்யூவியின் ஹைப்ரிட் மாடல்கள் வெளியீடு!

இதுதவிர்த்து, டீசல் மாடலில் புதிய 6 சிலிண்டர் 3.0 லிட்டர் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. மேலும், இந்த டீசல் எஞ்சினுடன் மைல்டு ஹைப்ரிட் எனப்படும் திறன் குறைவான ஹைப்ரிட் தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது. இந்த ஹைப்ரிட் தொகுப்பானது மூன்று மாடல்களில் வர இருக்கிறது.

லேண்ட்ரோவர் டிஃபென்டர் எஸ்யூவியின் ஹைப்ரிட் மாடல்கள் வெளியீடு!

இதன் டீசல் மைல்டு ஹைப்ரிட் மாடலில் 200 எச்பி பவரையும், 500 என்எம் டார்க் திறனையும் வழங்கும் D200 என்ற வேரியண்ட்டும், 249 எச்பி பவரையும், 570 என்எம் டார்க் திறனையும் வழங்கும் D250 என்ற வேரியண்ட்டிலும், 300 எச்பி பவரை வெளிப்படுத்தும் D300 என்ற வேரியண்ட்டிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

லேண்ட்ரோவர் டிஃபென்டர் எஸ்யூவியின் ஹைப்ரிட் மாடல்கள் வெளியீடு!

இதே எஞ்சின் தேர்வுகள்தான் டிஃபென்டர் 90 மாடலிலும் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. மேலும், ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டதாகவும் இந்த மாடல்கள் கிடைக்கும். இந்த இரண்டு மாடல்களுக்கும் இந்தியாவில் விலை அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், கொரோனா பிரச்னையால் டெலிவிரிப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அடுத்த மாதம் டிஃபென்டர் 110 மாடலுக்கான டெலிவிரி துவங்கும் என தெரிகிறது.

Most Read Articles
English summary
Land Rover has revealed 2020 Defender SUV with petrol plug in hybrid and diesel mild hybird variants for international market.
Story first published: Saturday, September 12, 2020, 17:46 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X