புதிய மஹிந்திரா தார் AX மற்றும் LX மாடல்களில் எதை தேர்வு செய்வது நல்லது?

வடிவமைப்பு, வசதிகள், தொழில்நுட்பம் என அனைத்து விதங்களிலும் புதிய தலைமுறை தார் எஸ்யூவி மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. மிக சரியான பட்ஜெட்டில் அதிக தொழில்நுட்ப சிறப்புகளுடன் எதிர்பார்க்கப்படும் புதிய தார் எஸ்யூவி இரண்டு வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. இந்த இரண்டு வேரியண்ட்டுகளில் இடம்பெற்றிருக்கும் சிறப்பம்சங்கள் விபரங்களை இந்த செய்தியில் ஒப்பீடு செய்து வழங்கி இருக்கிறோம். புதிய தார் எஸ்யூவியை வாங்க காத்திருப்போருக்கு தேர்வு முடிவை இது எளிதாக்கும்.

மஹிந்திரா தார் AX மற்றும் LX வேரியண்ட்டுகளில் எதை தேர்வு செய்வது நல்லது?

புதிய தலைமுறை தார் எஸ்யூவி AX மற்றும் LX என்ற இரண்டு மாடல்களில் 7 வேரியண்ட்டுகளில் வர இருப்பது தெரிய வந்துள்ளது. இதில், ஏஎக்ஸ் என்ற மாடல் ஆஃப்ரோடு பயன்பாட்டுக்கு உகந்த அம்சங்களுடன் விலை குறைவான பட்ஜெட்டாக இருக்கும். எல்எக்ஸ் என்ற மாடல் அதிக சொகுசு அம்சங்கள் மற்றும் வசதிகள் நிறைந்ததாக இருக்கும். இந்த மாடலானது ஆஃப்ரோடு பயன்பாடு மட்டுமின்றி, தினசரி பயன்பாடு மற்றும் நீண்ட தூர பயணம் உள்ளிட்டவற்றிற்கு ஏற்ற குடும்பத்தினருடன் செல்வதற்கான சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.

மஹிந்திரா தார் AX மற்றும் LX வேரியண்ட்டுகளில் எதை தேர்வு செய்வது நல்லது?

மஹிந்திரா தார் ஏஎக்ஸ் சிறப்பம்சங்கள்

புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியின் ஏஎக்ஸ் வேரியண்ட்டில் கருப்பு வண்ண பம்பர், பனி விளக்குகள், எல்இடி டெயில் லைட் கொடுக்கப்பட்டுள்ளன. பக்கவாட்டில் ஸ்டீல் சைடு ஸ்டெப் இடம்பெற்றுள்ளது. எளிதாக ஸ்பேர் வீலை எடுக்கும் வகையில், டெயில் கேட்டில் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் சாஃப்ட் டாப் கூரை அமைப்பு கொடுக்கப்படுகிறது. கன்வெர்ட்டிபிள் அல்லது ஹார்டு டாப் ஆப்ஷனலாக பெற முடியும்.

மஹிந்திரா தார் AX மற்றும் LX வேரியண்ட்டுகளில் எதை தேர்வு செய்வது நல்லது?

கருப்பு வண்ண க்ரில் அமைப்பு, 16 அங்குல ஸ்டீல் வீல்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. டில்ட் அட்ஜெஸ்ட் ஸ்டீயரிங் வீல், சென்ட்ரல் லாக்கிங், ஏசி வசதி, மல்டி இன்ஃபர்மேஷன் திரையுடன் கூடிய செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது.

மஹிந்திரா தார் AX மற்றும் LX வேரியண்ட்டுகளில் எதை தேர்வு செய்வது நல்லது?

மேலும், இதில் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்படாது. எனினும், 2 டின் மியூசிக் சிஸ்டம் கொடுக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இந்த வேரியண்ட்டில் முன்புறத்தில் இரண்டு இருக்கைகளும், பின்புறத்தில் பக்கவாட்டு நோக்கிய இருக்கை அமைப்பும் கொடுக்கப்படுகிறது. மொத்தமாக 6 பேர் பயணிக்கலாம்.

மஹிந்திரா தார் AX மற்றும் LX வேரியண்ட்டுகளில் எதை தேர்வு செய்வது நல்லது?

அதேநேரத்தில், ஆஃப்ரோடு பயன்பாட்டிற்கு ஏற்ப, கழற்றி மாட்டும் வசதி கொண்ட கதவுகள், முன்புற ஆக்சிலில் எலெக்ட்ரானிக் லாக் டிஃபரன்ஷியல் வசதியும், பின்புற ஆக்சிலில் மெக்கானிக்கல் லாக் டிஃபரன்ஷியல் சிஸ்டம் கொண்ட 4 வீல் டிரைவ் சிஸ்டம் இடம்பெற்றுள்ளன.

மஹிந்திரா தார் AX மற்றும் LX வேரியண்ட்டுகளில் எதை தேர்வு செய்வது நல்லது?

மஹிந்திரா தார் ஏஎக்ஸ் வேரியண்ட்டில் பெட்ரோல், டீசல் எஞ்சின் தேர்வுகளில் கிடைத்தாலும், மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக மட்டுமே பெற முடியும். ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு இதில் கொடுக்கப்படாது என்று தெரிய வந்துள்ளது. இந்த வேரியண்ட்டில் டியூவல் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஸ்பீடு அலர்ட், பனி படர்ந்த சாலைகளில் ஓட்டுவதற்கான ஸ்னோ செயின்களும் கொடுக்கப்படும்.

மஹிந்திரா தார் AX மற்றும் LX வேரியண்ட்டுகளில் எதை தேர்வு செய்வது நல்லது?

மஹிந்திரா தார் எல்எக்ஸ் சிறப்பம்சங்கள்

ஆஃப்ரோடு பிரியர்கள் மட்டுமின்றி, அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களையும் கவர்ந்து இழுக்கும் வகையில் இந்த புதிய வேரியண்ட் வர இருக்கிறது. இந்த மாடலில் சில்வர் வண்ண அலங்காரத்துடன் க்ரில் அமைப்பு, 18 அங்குல அலாய் வீல்கள், கன்வெர்ட்டிபிள் அல்லது ஹார்டு டாப் கூரை அமைப்பு, டியூவல் டோன் பம்பர்கள், ஆன்டென்னா ஆகியவை இடம்பெற்றுள்ளன.

மஹிந்திரா தார் AX மற்றும் LX வேரியண்ட்டுகளில் எதை தேர்வு செய்வது நல்லது?

இந்த மாடலில் பின் வரிசையில் முன்னோக்கி அமைக்கப்பட்ட இரண்டு இருக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்மார்ட்போன் அல்லது ஸ்மார்ட்வாட்ச் மூலமாக இணைத்துக் கொள்ளக்கூடிய கனெக்ட்டிவிட்டி வசதி, சாகசத்தின்போது சக்கரங்கள் இருக்கும் கோணத்தை பற்றிய தகவல்களை அறிந்து கொள்வதற்கான வசதி, டிஎஃப்டி மல்டி இன்ஃபர்மேஷன் திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை இடம்பெற்றுள்ளன. க்ரூஸ் கன்ட்ரோல் வசதி, யுஎஸ்பி போர்ட் இணைப்பு, ஸ்டீயரிங் வீலில் கட்டுப்பாட்டு சுவிட்சுகள், ஃபேப்ரிக் அப்ஹோல்ஸ்ட்ரி ஆகியவையும் இடம்பெறுகிறது.

மஹிந்திரா தார் AX மற்றும் LX வேரியண்ட்டுகளில் எதை தேர்வு செய்வது நல்லது?

இந்த எஸ்யூவியில் கூடுதலாக பிரேக் லாக்கிங் டிஃபரன்ஷியல் ஆஃப்ரோடு தொழில்நுட்பம் கொடுக்கப்படுகிறது. அதாவது, சக்கரங்கள் தரையுடனான பிடிப்பை இழந்து வெறுமனே சுழலும்போது, தானியங்கி முறையில் அந்த சக்கரத்திற்கு பிரேக் அப்ளை செய்யப்படும். இது 4 வீல் டிரைவ் லாக் டிஃபர்ன்ஷியல் தொழில்நுட்பத்துடன் இணைந்து செயல்படும்.

மஹிந்திரா தார் AX மற்றும் LX வேரியண்ட்டுகளில் எதை தேர்வு செய்வது நல்லது?

இந்த வேரியண்ட்டில் டியூவல் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், ரோல் ஓவர் மிட்டிகேஷன் வசதி, ஹில் ஹோல்டு கன்ட்ரோல், ஹில் டிசென்ட் கன்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

மஹிந்திரா தார் AX மற்றும் LX வேரியண்ட்டுகளில் எதை தேர்வு செய்வது நல்லது?

புதிய மஹிந்திரா தார் எல்எக்ஸ் வேரியண்ட் பெட்ரோல், டீசல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கும். இந்த வேரியண்ட்டில் பெட்ரோல் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வில் மட்டுமே கிடைக்கும். டீசல் மாடலில் மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் என இரண்டு தேர்வுகளுமே வழங்கப்படும்.

மஹிந்திரா தார் AX மற்றும் LX வேரியண்ட்டுகளில் எதை தேர்வு செய்வது நல்லது?

எஞ்சின் விபரம்

புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியில் வழங்கப்பட இருக்கும் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 150 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வழங்கும். டீசல் மாடலில் வழங்கப்படும் 2.2 லிட்டர் எம்ஹாக் எஞ்சின் அதிகபட்சமாக 130 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

மஹிந்திரா தார் AX மற்றும் LX வேரியண்ட்டுகளில் எதை தேர்வு செய்வது நல்லது?

எதிர்பார்க்கும் விலை

புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் ஆன்ரோடு விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. இது நிச்சயம் வாடிக்கையாளர்கள் மத்தியில் மதிப்புவாய்ந்த தேர்வாக நிலைநிறுத்தப்படும் என்று தெரிகிறது. வரும் அக்டோபர் 2ந் தேதி விலை அறிவிப்புடன் முறைப்படி விற்பனைக்கு வர இருக்கிறது. அன்றைய தினமே முன்பதிவும் துவங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மஹிந்திரா தார் AX மற்றும் LX வேரியண்ட்டுகளில் எதை தேர்வு செய்வது நல்லது?

எது சிறந்தது?

தினசரி அலுவலக பயன்பாடு, நெடுஞ்சாலை பயணம், ஆஃப்ரோடு சாகசம் என அனைத்திற்கும் ஏற்ற எல்எக்ஸ் வேரியண்ட்டை தேர்வு செய்வதுதான் மிக மதிப்பு வாய்ந்ததாக அமையும்.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Here is the spec sheet comparison between the new Mahindra Thar's AX and LX variants and the features they offer.
Story first published: Tuesday, August 18, 2020, 17:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X