புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியில் பவர்ஃபுல் எஞ்சின் தேர்வுகள்... விபரங்கள் கசிந்தது!

புதிய தலைமுறை தார் எஸ்யூவி நாளை முறைப்படி பொது பார்வைக்கு கொண்டு வரப்பட இருக்கும் நிலையில், அதில் வழங்கப்பட இருக்கும் எஞ்சின் தேர்வுகள் குறித்த விபரங்கள் வெளியாகி இருக்கின்றன.

புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியின் எஞ்சின் விபரங்கள் கசிந்தன!

ஆஃப்ரோடு சாகசங்களுக்கு ஏற்ற அம்சங்கள் தவிர்த்து, தினசரி பயன்பாடு மற்றும் குடும்பத்தினர் பயணிப்பதற்கு ஏற்ற பல நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் வர இருக்கிறது. இதனால், எஸ்யூவி வாங்க திட்டமிட்டிருப்போரின் கவனத்தை இந்த புதிய தலைமுறை மஹிந்திரார் தார் எஸ்யூவி வெகுவாக ஈர்த்துள்ளது.

புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியின் எஞ்சின் விபரங்கள் கசிந்தன!

இந்த நிலையில், மஹிந்திரா தார் எஸ்யூவியில் செயல்திறன்மிக்க எஞ்சின் தேர்வுகள் வழங்கப்பட உள்ளது தெரிய வந்துள்ளது. டீம் பிஎச்பி தளத்தில் புதிய தார் எஸ்யூவியில் இடம்பெற இருக்கும் எஞ்சின் தேர்வுகள் மற்றும் அதன் செயல்திறன் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியின் எஞ்சின் விபரங்கள் கசிந்தன!

இதன்படி, புதிய மஹிந்திரா தார் எஸ்யவியில் 2.2 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும். பிஎஸ்-6 தரத்தில் வர இருக்கும் இந்த டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 140 பிஎச்பி பவரையும், 300 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியின் எஞ்சின் விபரங்கள் கசிந்தன!

அதேபோன்று, பெட்ரோல் மாடலிலும் வருகிறது புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி. பிஎஸ்-6 தரத்திலான இந்த பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 180 பிஎச்பி பவரையும், 380 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். மேலும், பெட்ரோல், டீசல் எஞ்சின்களுடன் மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்களில் கிடைக்கும். மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வான லோ ரேஷியோ கியர்பாக்ஸ் வசதியுடன் வர இருக்கிறது.

புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியின் எஞ்சின் விபரங்கள் கசிந்தன!

ஆஃப்ரோடு பயன்பாட்டுக்கு தக்க மாடலில் சாஃப்ட் டாப் கூரை அமைப்பும், குடும்பத்தினருடன் செல்வதற்கு ஏற்றதாக வாங்க விரும்புவோருக்கு ஹார்டு டாப் கூரையுடன் கூடிய தேர்வுகளில் வழங்கப்படும். இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், பின்புறத்தில் முன்னோக்கிய இருக்கை அமைப்பு ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கும்.

புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியின் எஞ்சின் விபரங்கள் கசிந்தன!

புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியில் பெரிய க்ரில் அமைப்பு, புதிய ஹெட்லைட்டுகள், புதிய பம்பர்கள், 18 அங்குல அலாய் வீல்கள், ஆல் டெர்ரெயின் டயர்கள் ஆகியவை பயன்படுத்தப்பட்டு இருக்கும். இரண்டு அனலாக் டயல்கள் மற்றும் மல்டி இன்ஃபர்மேஷன் திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் இடம்பெற்றிருக்கிறது.

புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியின் எஞ்சின் விபரங்கள் கசிந்தன!

மொத்தத்தில் புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி வேற லெவல் அம்சங்களுடன் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை விஞ்சிய மாடலாக வருகிறது. நாளை சமூக வலைதளங்கள் மூலமாக வெளியிடப்பட இருக்கும் புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவியின் அறிமுக நிகழ்வின் படங்கள் மற்றும் அதிகாரப்பூர்வத் தகவல்களை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் படிக்கலாம்.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
The 2020 Mahindra Thar is among the most highly anticipated vehicle launch this year. The next-gen off-roader has created huge anticipation and hype in the market. Mahindra will finally take the covers of the new Thar on Indian Independence day.
Story first published: Friday, August 14, 2020, 14:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X