புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி அறிமுகம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்!

புதிய மஹிந்திரா தலைமுறை தார் எஸ்யூவி எப்போது அறிமுகம் செய்யப்பட்ட உள்ளது என்பது அதிகாரப்பூர்வத் தகவல் வெளியாகி இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

 புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி அறிமுகம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்!

ஆஃப்ரோடு பயன்பாட்டுக்கான சிறந்த எஸ்யூவி மாடலாக மஹிந்திரா தார் இருந்து வருகிறது. ஆஃப்ரோடு எஸ்யூவி பிரியர்கள் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களை பெற்றிருப்பதுடன், மிகச் சரியான விலையில் தார் எஸ்யூவி கிடைக்கிறது. இதனால், விற்பனையிலும் முதன்மையானதாக இருக்கிறது.

 புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி அறிமுகம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்!

இந்த நிலையில், வடிவமைப்பு, வசதிகள், தொழில்நுட்பத்தில் முற்றிலுமாக மேம்படுத்தப்பட்டு இருக்கும் புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. தற்போது சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டு வரும் இந்த எஸ்யூவி ஆஃப்ரோடு எஸ்யூவி பிரியர்கள் மத்தியில் அதிக ஆவலை ஏற்படுத்தி உள்ளது.

 புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி அறிமுகம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்!

இந்த நிலையில், கடந்த ஜனவரி - மார்ச் இடையிலான சென்ற நிதி ஆண்டின் கடைசி காலாண்டு வருவாய் முடிவுகளை மஹிந்திரா அறிவித்துள்ளது. அப்போது பேசிய மஹிந்திரா நிர்வாக இயக்குனர் பவன் கோயங்கோ," புதிய தலைமுறை தார் எஸ்யூவியின் அறிமுகம் குறித்த அதிகாரப்பூர்வத் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி அறிமுகம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்!

அதன்படி, வரும் பண்டிகை காலத்தில் புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதாவது, அக்டோபர் முதல் வாரத்தில் மஹிந்திரா தார் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட உள்ளது உறுதியாகி இருக்கிறது.

 புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி அறிமுகம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்!

இந்த மாதம் அல்லது அடுத்த மாதத்திற்குள் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று ஏற்கனவே மஹிந்திரா அதிகாரிகள் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், கொரோனா பிரச்னை காரணமாக, கார் விற்பனையில் மந்த நிலை நீடிக்கிறது. நிலைமை சீரடைவதற்கு இன்னும் சில மாதங்கள் பிடிக்கும் என தெரிகிறது.

 புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி அறிமுகம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்!

இதனை கருத்தில்கொண்டு மேலும் சில மாதங்கள் மஹிந்திரா தார் எஸ்யூவியின் அறிமுகம் தள்ளிப்போடப்பட்டுள்ளது. புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி பரிமாணத்தில் பெரிய காராக மாறி இருக்கிறது. ஆனால், தற்போதைய மாடலின் பாரம்பரிய டிசைன் அம்சங்களும் தக்க வைக்கப்பட்டுள்ளன.

 புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி அறிமுகம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்!

எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம் என ஆஃப்ரோடு மாடலாக மட்டுமின்றி, புதிய தலைமுறை மாடலாக வர இருக்கிறது.

 புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி அறிமுகம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்!

>புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளில் வர இருக்கிறது. இந்த எஞ்சினுடன் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வுடன் கிடைக்கும்.

 புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி அறிமுகம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்!

கடந்த 8 ஆண்டுகளாக மஹிந்திரா தார் எஸ்யூவி பெரிய அளவிலான மாற்றங்கள் செய்யப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், தற்போது முற்றிலும் புதிய தலைமுறை மாடலாக வர இருப்பது ஆஃப்ரோடு எஸ்யூவி பிரியர்கள் மத்தியில் பேராவலை ஏற்படுத்தி உள்ளது. இந்த எஸ்யூவிக்கு டீலர்களில் ரகசியமாக முன்பதிவு செயய்ப்பட்டு வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra is planning to launch the next-generation Thar in the Indian market by October this year.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X