அறிமுகமான முதல் நாளிலேயே மாடிஃபை செய்யப்பட்ட 2020 மஹிந்திரா தார்... ‘டெமோ’விற்காக இந்த காரா...?

அறிமுகமான முதல் நாளிலேயே 2020 மஹிந்திரா தார் ஒன்று டீலரால் மாடிஃபை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள வீடியோவினை இந்த செய்தியில் பார்ப்போம்.

அறிமுகமான முதல் நாளிலேயே மாடிஃபை செய்யப்பட்ட 2020 மஹிந்திரா தார்... ‘டெமோ’விற்காக இந்த காரா...?

வாடிக்கையாளர்களின் மிக பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த 2ஆம் தேதி மஹிந்திராவின் 2020 தார் இந்தியாவில் அறிமுகமானது. இதன் ஆரம்ப விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.9.8 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அறிமுகமான முதல் நாளிலேயே மாடிஃபை செய்யப்பட்ட 2020 மஹிந்திரா தார்... ‘டெமோ’விற்காக இந்த காரா...?

அளவில் பெரியதாக, கூடுதல் ஆற்றலுடன், பெட்ரோல் என்ஜின், ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் தேர்வு, 4-சக்கர ட்ரைவ் சிஸ்டம் மற்றும் அட்வான்ஸான பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்டவற்றுடன் இந்த 2020 மாடல் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

அறிமுகமான முதல் நாளிலேயே மாடிஃபை செய்யப்பட்ட 2020 மஹிந்திரா தார்... ‘டெமோ’விற்காக இந்த காரா...?

ரூ.9.8 லட்சத்தில் இருந்து ரூ.13.75 வரையிலான விலைகளை புதிய தலைமுறை தார் பெற்றுள்ளது. இந்த 2020ஆம் ஆண்டிற்கான மாடலை தற்போது அனைத்து டீலர்களும் டெஸ்ட் ட்ரைவ்களுக்கு வழங்க ஆரம்பித்துவிட்டனர்.

அறிமுகமான முதல் நாளிலேயே மாடிஃபை செய்யப்பட்ட 2020 மஹிந்திரா தார்... ‘டெமோ’விற்காக இந்த காரா...?

புதிய தலைமுறை தாரில் க்ரில் அமைப்பு அதிகளவில் மாடர்ன் தொடுதல்களுடன் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் பெரும்பான்மையான வாடிக்கையாளர்கள் பழைய க்ரில் டிசைனையே இப்போதும் விரும்புகிறார்கள். ஏனெனில் அந்த க்ரில் அமைப்புதான் நேரடியாக ஒரிஜினல் க்ளாசிக் ஜீப்பின் உணர்வை நமக்கு வழங்கியது.

அறிமுகமான முதல் நாளிலேயே மாடிஃபை செய்யப்பட்ட 2020 மஹிந்திரா தார்... ‘டெமோ’விற்காக இந்த காரா...?

துரதிர்ஷ்டவசமாக, க்ரில் அமைப்பை முழுவதும் மாற்றும் அளவிற்கு எந்த ஆக்ஸஸரீயையும் 2020 தாருக்கு மஹிந்திரா நிறுவனம் வழங்கவில்லை. ஆனால் 2020 தாரின் க்ரில்லிற்கு ஏற்ற சந்தைக்கு பிறகான ஆக்ஸஸரீகள் ஏற்கனவே கிட்டத்தட்ட அனைத்து சந்தைக்கு பிறகான பாகங்களை விற்கும் கடைகளையும் சென்றைடைந்துவிட்டன.

அறிமுகமான முதல் நாளிலேயே மாடிஃபை செய்யப்பட்ட 2020 மஹிந்திரா தார்... ‘டெமோ’விற்காக இந்த காரா...?

இதனால் புதிய தார் மாடலை விற்பனை செய்யும் டீலர்ஷிப்களே அவற்றை மாடிஃபை செய்ய ஆரம்பித்துவிட்டன. இந்த வகையில் டீலர்ஷிப் ஒன்றில் சந்தைக்கு பிறகான க்ரில் உடன் 2020 தார் மாடிஃபை செய்யப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் டெமோவிற்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த வீடியோ வண்டி சாம்ராஜ்ஜியம் என்ற யுடியூப் சேனலின் மூலமாக நமக்கு கிடைத்துள்ளது. மஹிந்திரா தாரின் டெலிவிரி பணிகள் வருகிற நவம்பர் 1ஆம் தேதி முதல் துவங்கவுள்ளன. 2020 தார் அறிமுகமான பிறகு அதிகளவில் மாடிஃபை மாற்றங்களுக்கு உட்படுத்தப்படும் என்று முன்னரே கணித்திருந்தோம்.

அறிமுகமான முதல் நாளிலேயே மாடிஃபை செய்யப்பட்ட 2020 மஹிந்திரா தார்... ‘டெமோ’விற்காக இந்த காரா...?

ஆனால் இவ்வாறு டீலர்களால் மாடிஃபை செய்யப்படும் என்று சுத்தமாக எதிர்பார்க்கவே இல்லை. அதுவும் அறிமுகமான முதல் நாளிலேயே டீலர்ஷிப் ஒன்றில் டெமோ தார் கார் ஒன்று க்ரில் மாற்றத்தை பெற்றிருப்பது உண்மையில் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra Thar Demo Car Grille Modified At Authorized Dealer On Launch Day
Story first published: Sunday, October 4, 2020, 13:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X