புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியின் எந்த வேரியண்ட் உங்களுக்கு சரியானது?... பார்க்கலாம் வாங்க!

மிக சரியான விலையில் புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. டிசைன், வசதிகள், தொழில்நுட்பம், எஞ்சின் என அனைத்திலும் வேறு தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த எஸ்யூவியில் வழங்கப்படும் வேரியண்ட்டுகளை எந்தெந்த தேர்வுகளில் பெறும் வாய்ப்பு இருக்கிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மஹிந்திரா தார் எஸ்யூவியின் என்னென்ன வேரியண்ட் தேர்வுகள் உள்ளன?... பார்க்கலாம்!

புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி AX, AX Optional மற்றும் LX ஆகிய மூன்று மாடல்களில் வந்துள்ளது தெரிந்த விஷயம்தான். இதில், AX மற்றும் AX Optional மாடல் ஆஃப்ரோடு பயன்பாட்டிற்கு ஏற்ற மாடலாகவும், LX மாடலானது குடும்பத்தினருடன் ஒன்றாக பயணிப்பதற்கு ஏதுவான வசதிகளை வழங்கும் சொகுசு அம்சங்கள் கொண்டதாகவும் இருக்கிறது.

மஹிந்திரா தார் எஸ்யூவியின் என்னென்ன வேரியண்ட் தேர்வுகள் உள்ளன?... பார்க்கலாம்!

இதில், கூரை அமைப்பு, இருக்கை வசதி, எஞ்சின், கியர்பாக்ஸ் தேர்வை பொறுத்து ஏஎக்ஸ் மாடலானது 3 வேரியண்ட்டுகளிலும், ஏஎக்ஸ் ஆப்ஷனல் 3 வேரியண்ட்டுகளிலும் எல்எக்ஸ் வேரியண்ட்டானது 7 வேரியண்ட்டுகளிலும் கிடைக்கும்.

மஹிந்திரா தார் எஸ்யூவியின் என்னென்ன வேரியண்ட் தேர்வுகள் உள்ளன?... பார்க்கலாம்!

AX மற்றும் AX Optional ஆகிய இரண்டு மாடல்களும் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் தேர்வுகளுடன் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் மட்டுமே கிடைக்கும். ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு இல்லை. இந்த ஏஎக்ஸ் மாடலில் 4 பேர் மற்றும் 6 பேர் பயணிப்பதற்கான இரண்டு தேர்வுகள் உள்ளன. அதேபோன்று, ஏஎக்ஸ் மாடலில் சாஃப்ட் டாப், கன்வெர்ட்டிபிள் மற்றும் ஹார்டு டாப் கூரை என மூன்று விதமான கூரை அமைப்புடைய தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

மஹிந்திரா தார் எஸ்யூவியின் என்னென்ன வேரியண்ட் தேர்வுகள் உள்ளன?... பார்க்கலாம்!

LX என்ற சொகுசு அம்சங்கள் அதிகம் கொண்ட மாடலானது பெட்ரோல், டீசல் எஞ்சின் தேர்வுகளில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது. இந்த மாடலானது கன்வெர்ட்டிபிள் மற்றும் ஹார்டு டாப் என்ற இரண்டு விதமான தேர்வுகளில் கிடைக்கும். அதேநேரத்தில், இந்த எல்எக்ஸ் மாடலானது 4 பேர் பயணிப்பதற்கான இருக்கை வசதியில் மட்டுமே வழங்கப்படுகிறது.

மஹிந்திரா தார் எஸ்யூவியின் என்னென்ன வேரியண்ட் தேர்வுகள் உள்ளன?... பார்க்கலாம்!

ஆஃப்ரோடு பயன்பாட்டிற்கு பின்னர் தரைப்பகுதி உள்ளிட்ட இடங்களில் மண்,சேறு படிந்தால் அதனை தண்ணீர் மூலமாக கழுவி சுத்தம் செய்யும் வகையில் விசேஷ தரைதளத்தை இந்த எஸ்யூவி பெற்றிருக்கிறது. அதற்கு இணையாக, தண்ணீர் புகாத வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. மேலும், ஸ்பீக்கர்கள் உட்புற கூரையில் பொருத்தப்பட்டு இருக்கிறது.

மஹிந்திரா தார் எஸ்யூவியின் என்னென்ன வேரியண்ட் தேர்வுகள் உள்ளன?... பார்க்கலாம்!

இந்த காரில் 7 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பவர் விண்டோஸ், கீ லெஸ் என்ட்ரி, டியூவல் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், பார்க்கிங் சென்சார்கள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ரோல் கேஜ் ஆகிய பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.

மஹிந்திரா தார் எஸ்யூவியின் என்னென்ன வேரியண்ட் தேர்வுகள் உள்ளன?... பார்க்கலாம்!

ஆஃப்ரோடு பயன்பாட்டிற்கு ஏற்ப சக்கரங்கள் நிலையை இன்ஃபோடெயின்மென்ட் திரை மூலமாக பார்க்கும் வசதி, 4 வீல் டிரைவ் சிஸ்டம், லோ ரேஞ்ச் டிரான்ஸ்ஃபர் கேஸ், பின்சக்கரங்களுக்கான மெக்கானிக்கல் டிஃபரன்ஷியல் லாக்கிங் தொழில்நுட்பம் மற்றும் சக்கரங்கள் மேலே தூக்கும்போது சுழல்வதை தடுக்கும் பிரேக் லாக்கிங் டிஃபரன்ஷியல் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப வசதிகளை பெற்றிருக்கிறது.

மஹிந்திரா தார் எஸ்யூவியின் என்னென்ன வேரியண்ட் தேர்வுகள் உள்ளன?... பார்க்கலாம்!

மொத்ததில் ஆஃப்ரோடு பிரியர்களின் அனைத்து எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் விதத்திலும், மிரட்டலான எஸ்யூவியை வாங்கி சாதாரணமாக தினசரி பயன்படுத்த விரும்புவோருக்கும் சிறந்த தேர்வாக அமையும்.

மஹிந்திரா தார் எஸ்யூவியின் என்னென்ன வேரியண்ட் தேர்வுகள் உள்ளன?... பார்க்கலாம்!

இப்போது சாதாரண சாலையில் விரைவாக செல்வதற்கான செயல்திறன் மிக்க எஞ்சின் தேர்வுகளையும், அதற்கு இணையான கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பங்களையும் பெற்று வந்திருப்பதும் கவனிக்கத்தக்க விஷயம். மொத்தத்தில் எஸ்யூவி பிரியர்களின் அனைத்து எதிர்பார்ப்புகளையும் புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி கச்சிதமாக பூர்த்தி செய்யும் என்பதால், அது விற்பனையிலும் எதிரொலிக்கும் என்று நம்பலாம்.

புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியின் வேரியண்ட் விபரம்

புதிய மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு ரூ.9.80 லட்சம் முதல் ரூ.13.75 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் வந்துள்ளது. மஹிந்திரா இணையதளம் அல்லது டீலர்களில் இன்று முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம். வரும் நவம்பர் 1 முதல் டெலிவிரிப் பணிகள் துவங்கப்பட உள்ளது. இன்று முதல் சென்னை உள்ளிட்ட நாட்டின் முக்கிய பெருநகரங்களில் டெஸ்ட் டிரைவ் வாய்ப்பும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
New Mahindra Thar SUV Variant Options Explained. Read in Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X