புதிய தலைமுறை எக்ஸ்யூவி500 & ஸ்கார்பியோ கார்களின் வருகை அடுத்த ஆண்டில் தான்... உறுதிசெய்த மஹிந்திரா

மஹிந்திரா நிறுவனம் டபிள்யூ601 மற்றும் இசட்101 என்ற குறியீட்டு பெயர்களை கொண்ட புதிய எஸ்யூவி மாடல்களை அடுத்த 2021-22 பொருளாதார ஆண்டில் அறிமுகப்படுத்தவுள்ளதாக இன்று அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

புதிய தலைமுறை எக்ஸ்யூவி500 & ஸ்கார்பியோ கார்களின் வருகை அடுத்த ஆண்டில் தான்... உறுதிசெய்த மஹிந்திரா

இதில் டபிள்யூ601 என்பது வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பில் இருக்கும் புதிய தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500 மாடலை குறிக்கும். இசட்101 என்பது புதிய தலைமுறை ஸ்கார்பியோ எஸ்யூவி மாடலை குறிக்கிறது. இந்த இரு எஸ்யூவி மாடல்களையும் கடந்த சில மாதங்களில் இந்திய சாலையில் சோதனை ஓட்டங்களில் பார்த்துள்ளோம்.

புதிய தலைமுறை எக்ஸ்யூவி500 & ஸ்கார்பியோ கார்களின் வருகை அடுத்த ஆண்டில் தான்... உறுதிசெய்த மஹிந்திரா

முன்னதாக எஸ்யூவி500 மற்றும் ஸ்கார்பியோ மாடல்களின் புதிய தலைமுறை கார்கள் இந்த வருடத்தின் இரண்டாம் பாதியில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் இவற்றின் அறிமுகத்தை அடுத்த ஆண்டிற்கு தாமதமாக்கியுள்ளது.

புதிய தலைமுறை எக்ஸ்யூவி500 & ஸ்கார்பியோ கார்களின் வருகை அடுத்த ஆண்டில் தான்... உறுதிசெய்த மஹிந்திரா

இருப்பினும் இந்த ஆண்டு இறுதியில் மஹிந்திரா நிறுவனத்தில் இருந்து 2020 தார் மாடல் அறிமுகமாகவுள்ளது. இதன் அறிமுகமும் இந்த ஆண்டு துவக்கத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வரும் அக்டோபர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

புதிய தலைமுறை எக்ஸ்யூவி500 & ஸ்கார்பியோ கார்களின் வருகை அடுத்த ஆண்டில் தான்... உறுதிசெய்த மஹிந்திரா

இவை மட்டுமின்றி மஹிந்திரா நிறுவனம் தனது எலக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதமாக கடந்த பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட இஎக்ஸ்யூவி300 மாடலை அறிமுகப்படுத்தும் பணியிலும் ஈடுப்பட்டு வருகிறது.

புதிய தலைமுறை எக்ஸ்யூவி500 & ஸ்கார்பியோ கார்களின் வருகை அடுத்த ஆண்டில் தான்... உறுதிசெய்த மஹிந்திரா

புதிய ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படும் புதிய எக்ஸ்யூவி500 மாடலானது வழக்கமான மோனோகோக் சேசிஸை தான் தொடர்ந்துள்ளது. இந்த எஸ்யூவி காரில் புதியதாக வழங்கப்படவுள்ள 2.0 லிட்டர் டீசல் என்ஜின் நிச்சயம் தற்போதைய 2.2 லிட்டர் என்ஜினை காட்டிலும் ஆற்றல்மிக்கதாகவே இருக்கும்.

புதிய தலைமுறை எக்ஸ்யூவி500 & ஸ்கார்பியோ கார்களின் வருகை அடுத்த ஆண்டில் தான்... உறுதிசெய்த மஹிந்திரா

இந்த புதிய டீசல் என்ஜின் உடன் 2.0 லிட்டர் எம்ஸ்டாலியன் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜினையும் 2021 எக்ஸ்யூவி500 மாடலுக்கு புதியதாக இந்நிறுவனம் வழங்கவுள்ளது. இந்த இரு என்ஜின் தேர்வுகளும் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய தலைமுறை எக்ஸ்யூவி500 & ஸ்கார்பியோ கார்களின் வருகை அடுத்த ஆண்டில் தான்... உறுதிசெய்த மஹிந்திரா

மஹிந்திரா ஸ்கார்பியோ மாடலை பொறுத்தவரையில் இந்த எஸ்யூவி கார் தற்போதைய ஏணி வடிவிலான ப்ரேம் சேசிஸின் அப்டேட் வெர்சனை பெறும் என கூறப்படுகிறது. இருப்பினும் என்ஜின் அமைப்பாக தற்போதைய 2.2 லிட்டர் எம்ஹாவ்க் பிஎஸ்6 டீசல் என்ஜினை அப்படியே பெற்றாலும், கூடுதலாக டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜினையும் எதிர்பார்க்கலாம்.

புதிய தலைமுறை எக்ஸ்யூவி500 & ஸ்கார்பியோ கார்களின் வருகை அடுத்த ஆண்டில் தான்... உறுதிசெய்த மஹிந்திரா

மஹிந்திரா நிறுவனத்தின் புதிய எம்ஸ்டாலியன் குடும்பத்தில் இருந்து வெளிவரவுள்ள இந்த டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் 1.5 லிட்டரில் அதிகப்பட்சமாக 160 பிஎச்பி பவரையும், 280 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் வகையில் இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
New-Gen Mahindra XUV500 And Scorpio Launch Deferred To FY 2021-22
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X