கொரோனாவால் தள்ளிப் போகும் புதிய மாருதி செலிரியோ கார் அறிமுகம்!

புதிய தலைமுறை மாருதி செலிரியோ காரின் அறிமுகம் தள்ளி வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த கூடுதல் தகவல்களையும், எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்த தகவல்களையும் தொடர்ந்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய தலைமுறை மாருதி செலிரியோ கார் அறிமுகம் தள்ளிப் போகிறது!

இந்தியாவின் பட்ஜெட் கார் மார்க்கெட்டில் வாடிக்கையாளர்களுக்கு அனைத்து விதத்திலும் நிறைவை தரும் சிறந்த மாடலாக மாருதி செலிரியோ கார் உள்ளது. டிசைன், இடவசதி, விலை என்பதுடன், இதன் ஏஎம்டி கியர்பாக்ஸ் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

புதிய தலைமுறை மாருதி செலிரியோ கார் அறிமுகம் தள்ளிப் போகிறது!

இந்த நிலையில், சந்தைப் போட்டியை மனதில் வைத்து மாருதி செலிரியோ கார் புதிய தலைமுறை மாடலாக மேம்படுத்தப்பட்ட வர இருக்கிறது.

புதிய தலைமுறை மாருதி செலிரியோ கார் அறிமுகம் தள்ளிப் போகிறது!

தீபாவளியை ஒட்டிய பண்டிகை காலத்தில் இந்த புதிய தலைமுறை மாருதி செலிரியோ கார் விற்பனைக்கு எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கொரோனா காரணமாக புதிய செலிரியோ காரின் அறிமுகம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

புதிய தலைமுறை மாருதி செலிரியோ கார் அறிமுகம் தள்ளிப் போகிறது!

அடுத்த ஆண்டு துவக்கத்தில் புதிய தலைமுறை மாருதி செலிரியோ கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக ஆட்டோகார் இந்தியா தளத்தினஅ செய்தி தெரிவிக்கிறது. கொரோனா காரணமாக, சப்ளையர்களிடம் இருந்து உதிரிபாகங்கள் பெறுவதில் உள்ள நடைமுறை சிக்கலை மனதில் வைத்து செலிரியோ கார் அறிமுகம் தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய தலைமுறை மாருதி செலிரியோ கார் அறிமுகம் தள்ளிப் போகிறது!

புதிய மாருதி செலிரியோ கார் டிசைனில் பல்வேறு மாறுதல்களுடன் வர இருக்கிறது. புதிய க்ரில் அமைப்பு, ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள், பம்பர் அமைப்புடன் அதிக வசீகரமாக மாற்றப்பட்டு இருக்கும் என்று தெரிகிறது. புதிய டிசைனில் சக்கரங்கள், பின்புறத்தில் புதிய டெயில் லைட் க்ளஸ்ட்டர்கள் ஆகியவையும் முக்கிய டிசைன் மாற்றங்களாக இருக்கும்.

புதிய தலைமுறை மாருதி செலிரியோ கார் அறிமுகம் தள்ளிப் போகிறது!

புதிய டேஷ்போர்டு அமைப்பு, இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்மார்ட்ஃபோன் இணைப்பு வசதி ஆகியவையும் இடம்பெற்றிருக்கும்.

புதிய தலைமுறை மாருதி செலிரியோ கார் அறிமுகம் தள்ளிப் போகிறது!

புதிய மாருதி ஸ்விஃப்ட் உள்ளிட்ட கார்கள் உருவாக்கப்பட்ட மாருதி சுஸுகியின் ஹார்ட்டெக்ட் பிளாட்ஃபார்மில்தான் இந்த காரும் உருவாக்கப்பட்டு வருகிறது. இதனால், இலகு பாகங்களுடன் எடை குறைவாக இருக்கும். மேலும், உட்புறத்தில் இடவசதியும் மேம்படுத்தப்பட்டு இருக்கும் என்று தெரிகிறது.

புதிய தலைமுறை மாருதி செலிரியோ கார் அறிமுகம் தள்ளிப் போகிறது!

மாருதி சுஸுகி வேகன் ஆர் காரில் வழங்கப்படுவது போன்றே, இரண்டு விதமான பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளில் புதிய மாருதி செலிரியோ கார் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பயன்படுத்தப்படும் 63 பிஎச்பி பவரை வழங்கும் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் புதிதாக 83 பிஎச்பி பவரை வழங்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் கொடுக்கப்படும். மேனுவல் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும் என்று நம்பலாம்.

புதிய தலைமுறை மாருதி செலிரியோ கார் அறிமுகம் தள்ளிப் போகிறது!

புதிய மாருதி செலிரியோ கார் பட்ஜெட் விலையில் அதிசிறந்த தேர்வாக அமையும். அதிக மைலேஜ், குறைவான பராமரிப்பு செலவு, மாருதியின் பரந்து விரிந்த சர்வீஸ் நெட்வொர்க் ஆகியவற்றுடன் தொடர்ந்து மதிப்புமிக்க தேர்வாக புதிய செலிரியோ கார் இருக்கும் என்று கூறலாம்.

Most Read Articles

English summary
Maruti Suzuki is said to have postponed the launch of the next-generation Celerio hatchback in the Indian market. The new-generation Maruti Suzuki Celerio hatchback was initially expected to go on sale during the festivities of Diwali this year.
Story first published: Saturday, October 17, 2020, 19:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X