கோடீஸ்வர்கள் மத்தியில் ஆவலை ஏற்படுத்தி உள்ள மஸேரட்டி கிரிகாலே எஸ்யூவி!

பெரும் பணக்காரர்கள் மத்தியில் அதிக ஆவலை ஏற்படுத்தி உள்ள மஸரேட்டி நிறுவனத்தின் புதிய கிரிகாலே எஸ்யூவியின் டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த எஸ்யூவி பற்றிய பல முக்கியத் தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

கோடீஸ்வர்கள் மத்தியில் ஆவலை ஏற்படுத்தி உள்ள மஸேரட்டி கிரிகாலே!

எஸ்யூவி கார்களுக்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பட்ஜெட் கார் மார்க்கெட்டிலிருந்து சொகுசு கார் மார்க்கெட் வரை எஸ்யூவி கார்களுக்குத்தான் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. இதனால், அனைத்து நிறுவனங்களும் எஸ்யூவி கார்களை தயாரிப்பதிலும், அறிமுகப்படுத்துவதிலும் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன.

கோடீஸ்வர்கள் மத்தியில் ஆவலை ஏற்படுத்தி உள்ள மஸேரட்டி கிரிகாலே!

அந்த வகையில், பிரிமீயம் வகை கார் தயாரிப்பில் உலக புகழ்பெற்ற இத்தாலியை சேர்ந்த மஸேரட்டி நிறுவனமும் சொகுசு எஸ்யூவி கார்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் அந்த நிறுவனம் லெவன்ட்டே என்ற பிரிமீயம் எஸ்யூவியை உலக அளவில் அறிமுகம் செய்தது. லெவன்ட்டே எஸ்யூவிக்கு குறிப்பிடத்தக்க அளவு வரவேற்பை பெற்றிருக்கிறது.

கோடீஸ்வர்கள் மத்தியில் ஆவலை ஏற்படுத்தி உள்ள மஸேரட்டி கிரிகாலே!

இதைத்தொடர்ந்து, எஸ்யூவி மார்க்கெட்டில் தனது சந்தையை வலுப்படுத்தும் விதத்தில், இரண்டாவது மாடலையும் களமிறக்க உள்ளது. மஸேரட்டி கிரிகாலே என்று குறிப்பிடப்படும் இந்த புதிய எஸ்யூவி மாடல் பெரும் பணக்காரர்கள் மத்தியில் அதிக ஆவலை ஏற்படுத்தி உள்ளது.

கோடீஸ்வர்கள் மத்தியில் ஆவலை ஏற்படுத்தி உள்ள மஸேரட்டி கிரிகாலே!

ஏற்கனவே விற்பனையில் இருக்கும் லெவன்ட்டே எஸ்யூவியைவிட இது விலை குறைவானதாக வர இருப்பதே முக்கிய காரணமாக கருதப்படுகிறது. புதிய கிரிகாலே எஸ்யூவியானது இத்தாலியில் உள்ள கேசினோ ஆலையில் உற்பத்தி செய்யப்படும். மஸேரட்டி கிரிகாலே மற்றும் ஆல்ஃபா ரோமியோ ஸ்டெல்வியோ ஆகிய கார்கள் ஒரே பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருப்பதுடன், ஒரே ஆலையில்தான் உற்பத்தி செய்யப்படும்.

கோடீஸ்வர்கள் மத்தியில் ஆவலை ஏற்படுத்தி உள்ள மஸேரட்டி கிரிகாலே!

மஸேரட்டி கிரிகாலே எஸ்யூவி ஃபோர்ஷே மசான் எஸ்யூவி மார்க்கெட்டை குறிவைத்து சந்தைப்படுத்தப்படும். அடுத்த ஆண்டு உலக அளவில் விற்பனைக்கு கொண்டு செல்லப்பட உள்ளது. வரும் 2022ம் ஆண்டு மஸேரட்டி கிரிகாலே எஸ்யூவியின் மின்சார மாடலும் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.

கோடீஸ்வர்கள் மத்தியில் ஆவலை ஏற்படுத்தி உள்ள மஸேரட்டி கிரிகாலே!

இதனிடையே, தற்போது மஸேரட்டி நிறுவனம் விற்பனை செய்து வரும் கிரான் டூரிஷ்மோ, கிரான் கேப்ரியோ, குவாத்ரோபோர்ட்டே மற்றும் லெவன்ட்டே ஆகிய அனைத்து கார் மாடல்களின் மின்சார வெர்ஷன்களும் அடுத்த ஓரிரு ஆண்டுகளில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

Most Read Articles

மேலும்... #மஸராட்டி #maserati
English summary
Maserati has released the teaser image of its forthcoming SUV Grecale that will be priced below the Levante SUV.
Story first published: Saturday, September 12, 2020, 12:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X