மெர்சிடிஸின் புதிய ஏ-க்ளாஸ் பென்ஸ் கார்!! இந்திய அறிமுகம், 2020 முடிவதற்கு உள்ளாக எதிர்பார்ப்பு

இந்த 2020ஆம் ஆண்டு முடிவதற்கு உள்ளாக மெர்சிடிஸ்-பென்ஸ் ஏ-க்ளாஸ் செடான் கார் இந்தியாவில் அறிமுகமாகிவிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

மெர்சிடிஸின் புதிய ஏ-க்ளாஸ் பென்ஸ் கார்!! இந்திய அறிமுகம், 2020 முடிவதற்கு உள்ளாக எதிர்பார்ப்பு

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் அதன் செடான் ரக காரான ஏ-க்ளாஸின் புதிய தலைமுறையை இந்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற்ற 2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தி இருந்தது. அதன்பின் விரைவில் விற்பனைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த பென்ஸ் காரின் வருகை கொரோனா வைரஸினால் தள்ளிபோனது.

மெர்சிடிஸின் புதிய ஏ-க்ளாஸ் பென்ஸ் கார்!! இந்திய அறிமுகம், 2020 முடிவதற்கு உள்ளாக எதிர்பார்ப்பு

இந்த நிலையில்தான் தற்போது சர்வதேச சந்தையில் விற்பனையில் இருக்கும் புதிய ஏ-க்ளாஸ் அடுத்த டிசம்பர் மாதத்தில் இந்திய சந்தையில் அறிமுகமாகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் வழக்கமான வெர்சன் முதலில் அறிமுகமாக போவதில்லை. இந்த செடானின் ஏ35 ஏஎம்ஜி வெர்சன் தான் முதலில் வரவுள்ளது.

மெர்சிடிஸின் புதிய ஏ-க்ளாஸ் பென்ஸ் கார்!! இந்திய அறிமுகம், 2020 முடிவதற்கு உள்ளாக எதிர்பார்ப்பு

ஆடி க்யூ2 மற்றும் பிஎம்டபிள்யூ 3-சீரிஸ் க்ரான் கூபே போன்ற கார்களுக்கு போட்டியாக விளங்கும் மெர்சிடிஸ் ஏ-க்ளாஸின் ஏ35 ஏஎம்ஜி வெர்சன் வெளிப்புறத்தில் புதிய அலாய் சக்கரங்கள், பெரிய எக்ஸாஸ்ட் குழாய்கள், ஸ்போர்டியான தோற்றத்தில் பக்கவாட்டு ஸ்கிர்ட்ஸ், தடிமனான முன் & பின்பக்க பம்பர்கள், பூட் லிட் உள்ளிட்டவற்றை பெற்றுள்ளது.

மெர்சிடிஸின் புதிய ஏ-க்ளாஸ் பென்ஸ் கார்!! இந்திய அறிமுகம், 2020 முடிவதற்கு உள்ளாக எதிர்பார்ப்பு

அதேபோல் ஏஎம்ஜி வெர்சன் என்பதால் உட்புற கேபின் ஆனது ஏஎம்ஜி பக்கெட் இருக்கை, ஏஎம்ஜி ஸ்டேரிங் சக்கரம், பளிச்சிடும் தொடுதல்கள், பர்ம்ஸ்டர் ஆடியோ, சுற்றிலும் எல்இடி விளக்குகள் மற்றும் சன்ரூஃப் உள்ளிட்டவற்றை பெற்றுவரவுள்ளது.

மெர்சிடிஸின் புதிய ஏ-க்ளாஸ் பென்ஸ் கார்!! இந்திய அறிமுகம், 2020 முடிவதற்கு உள்ளாக எதிர்பார்ப்பு

இவற்றுடன் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டருக்கு ஒன்று, தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்திற்கு ஒன்று என இரு 10.25 இன்ச் திரைகள் வழங்கப்பட்டுள்ளன. ஸ்டாண்டர்ட் ஏ-க்ளாஸ் செடான் சர்வதேச சந்தைகளில் பெறும் 2.0 லிட்டர் 4-சிலிண்டர் டீசல் மற்றும் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ற இரு என்ஜின் தேர்வுகளை இந்திய சந்தையிலும் தொடரவுள்ளது.

மெர்சிடிஸின் புதிய ஏ-க்ளாஸ் பென்ஸ் கார்!! இந்திய அறிமுகம், 2020 முடிவதற்கு உள்ளாக எதிர்பார்ப்பு

இதில் டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 194 பிஎச்பி பவரையும், பெட்ரோல் என்ஜின் 185 பிஎச்பி பவரையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக உள்ளன. இவற்றுடன் 7-ஸ்பீடு ட்யூல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது.

மெர்சிடிஸின் புதிய ஏ-க்ளாஸ் பென்ஸ் கார்!! இந்திய அறிமுகம், 2020 முடிவதற்கு உள்ளாக எதிர்பார்ப்பு

ஆனால் இதன் ஏஎம்ஜி வெர்சனில் அதிகப்பட்சமாக 305 பிஎச்பி பவரை காருக்கு வழங்கக்கூடிய என்ஜின் பொருத்தப்படும். இத்தகைய சிறப்பம்சங்களால் மெர்சிடிஸ் ஏ-க்ளாஸ் செடானின் இந்திய எக்ஸ்ஷோரூம் விலை ரூ.40 லட்சத்திலும், அதன் ஏஎம்ஜி வெர்சனின் விலை ரூ.65 லட்சத்திலும் நிர்ணயிக்கப்படலாம்.

Most Read Articles

English summary
New Mercedes-benz A-class sedan india launch soon.
Story first published: Tuesday, November 17, 2020, 7:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X