பென்ஸ் இ க்ளாஸ் ஃபேஸ்லிஃப்ட் LWB மாடல் அறிமுகம்... இந்திய வருகை விபரம்!

மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் லாங் வீல் பேஸ் மாடல் பீஜிங் ஆட்டோ ஷோ மூலமாக பொது பார்வைக்கு வந்துள்ளது. இந்தியாவிலும் விற்பனைக்கு எதிர்பார்கக்ப்படும் இந்த காரின் முக்கிய அம்சங்கள் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

பென்ஸ் இ க்ளாஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் லாங் வீல் பேஸ் மாடல் அறிமுகம்!

சொகுசு கார் மார்க்கெட்டில் மிகச் சிறந்த செடான் மாடலாக மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் பெயர் பெற்றுள்ளது. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் அதிகம் விற்பனையாகும் சொகுசு கார் மாடல் என்ற பெருமையும் இந்த காருக்கு உண்டு. சொகுசு கார் விரும்புவோரின் அத்துனை எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் வகையில் இருக்கிறது.

பென்ஸ் இ க்ளாஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் லாங் வீல் பேஸ் மாடல் அறிமுகம்!

இந்தநிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் உலக அளவில் வெளியிடப்பட்டது. இந்த கார் அடுத்த ஆண்டு முதல் பாதியில் இந்தியாவில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.

பென்ஸ் இ க்ளாஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் லாங் வீல் பேஸ் மாடல் அறிமுகம்!

இந்த சூழலில், மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் கூடுதல் வீல் பேஸ் நீளம் கொண்ட மாடலானது சீனத் தலைநகர் பீஜிங்கில் நடந்து வரும் ஆட்டோ எக்ஸ்போ மூலமாக அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

பென்ஸ் இ க்ளாஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் லாங் வீல் பேஸ் மாடல் அறிமுகம்!

அடுத்த சில நாட்களில் சீனாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கும் இந்த இ க்ளாஸ் லாங் வீல் பேஸ் மாடலானது அடுத்த ஆண்டு இந்தியாவிலும் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.

பென்ஸ் இ க்ளாஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் லாங் வீல் பேஸ் மாடல் அறிமுகம்!

மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் கார் 5,056 மிமீ நீளம் கொண்டதாக வந்துள்ளது. சாதாரண வீல் பேஸ் கொண்ட ஸ்டான்டர்டு மாடலைவிட இந்த புதிய மாடல் 140 மிமீ கூடுதல் வீல்பேஸ் நீளத்தை பெற்றுள்ளது. அதாவது, லாங் வீல்பேஸ் மாடல் 2,939 மிமீ வீல் பேஸ் நீளத்தை கொண்டுள்ளது. இதன்மூலமாக, தோற்றத்தில் லிமோசின் காருக்கு உரிய தோரணையை பெற்றுவிடுகிறது.

பென்ஸ் இ க்ளாஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் லாங் வீல் பேஸ் மாடல் அறிமுகம்!

ஃபேஸ்லிஃப்ட் எனப்படும் சிறிய அளவிலான மாற்றங்களுடன் வர இருப்பதால், எல்இடி ஹெட்லைட்டுகள், பம்பர் வடிவமைப்பில் மாற்றத்தை சந்தித்துள்ளது. மூன்று பட்டைகளுடன் கூடிய க்ரில் அமைப்பு ஆகியவை முக்கிய மாற்றங்களாக இருக்கின்றன.

பென்ஸ் இ க்ளாஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் லாங் வீல் பேஸ் மாடல் அறிமுகம்!

இந்த காரில் புதிய டெயில் லைட் க்ளஸ்ட்டர்கள், பூட்ரூம் மூடி, புதிய அலாய் வீல்கள், பின்புற பம்பர் அமைப்பு ஆகியவை மாற்றங்களுடன் புதுப்பொலிவு பெற்றுள்ளது.

பென்ஸ் இ க்ளாஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் லாங் வீல் பேஸ் மாடல் அறிமுகம்!

இன்டீரியரில் முக்கிய மாற்றமாக, ஸ்டான்டர்டு மாடலைவிட அதிக சொகுசான இருக்கை அமைப்பு, நடுவில் சென்டர் ஆர்ம் ரெஸ்்ட அமைப்பு, தொடுதிரை கட்டுபாட்டு வசதி, இரண்டு யுஎஸ்பி போர்ட்டுகள், புதிய ஸ்டீயரிங் வீல், எம்பியூஎக்ஸ் செயலியுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை உள்ளன.

பென்ஸ் இ க்ளாஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் லாங் வீல் பேஸ் மாடல் அறிமுகம்!

தற்போது விற்பனையில் உள்ள இ க்ளாஸ் காரில் பயன்படுத்தப்படும் அதே எஞ்சின் தேர்வுகள் புதிய மாடலிலும் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சற்றே கூடுதல் விலையில் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் கார் வேரியண்ட்டுகள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும்.

Most Read Articles

English summary
Mercedes-Benz has unveiled E-Class facelift LWB model at the Beijing International Auto Expo 2020.
Story first published: Wednesday, September 30, 2020, 6:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X