இந்த புது எம்ஜி செடான் கார் அப்படியே ஹோண்டா சிவிக் காரை தூக்கி அடிக்குமா பாருங்க!

சீனாவில் துவங்கி இருக்கும் பீஜிங் மோட்டார் ஷோவில் எம்ஜி மோட்டார் நிறுவனம் புத்தம் புதிய மிட்சைஸ் செடான் கார் மாடலை பார்வைக்கு கொண்டு வந்துள்ளது. இந்த புதிய கார் அசரடிக்கும் டிசைன் மற்றும் சிறப்பம்சங்களுடன் போட்டியாளர்களை தூக்கி அடிக்கும் வகையில் உள்ளது.

புதிய எம்ஜி5 செடான் கார் வெளியீடு... முக்கியத் தகவல்கள்!

எம்ஜி5 என்ற பெயரில் பார்வைக்கு வந்திருக்கும் இந்த புதிய பிரிமீயம் மிட்சைஸ் செடான் கார் விரைவில் பல்வேறு ஆசிய நாடுகளில் விரைவில் விற்பனைக்கு கொண்டு செல்லப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய எம்ஜி5 செடான் கார் வெளியீடு... முக்கியத் தகவல்கள்!

பார்ப்பதற்கு சொகுசு வகை செடான் கார்களுக்கு உரிய தோற்றத்தில் இந்த கார் டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. முகப்பில் மிரட்டும் தொனியில் அழகிய கருப்பு வண்ண க்ரில் அமைப்பு பொருத்தப்பட்டு இருக்கிறது. ஹெட்லைட், க்ரில் அமைப்பு, பம்பர் ஆகியவை மிக சிறப்பாக இருக்கிறது. எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், வலிமையான பானட் அமைப்பு இதன் முகப்பை வசீகரமாக காட்டுகிறது.

புதிய எம்ஜி5 செடான் கார் வெளியீடு... முக்கியத் தகவல்கள்!

பக்கவாட்டில் கண்களை எளிதாக கவரும் அலாய் வீல்கள், தாழ்வான கூரை அமைப்பு அட்டகாசமாக உள்ளது. காரின் பின்புறத்திலும் அழகிய டெயில் லைட் க்ளஸ்ட்டர்கள் வசீகரிக்கின்றன. க்ரோம் பூச்சுடன் புகைப்போக்கி குழல்கள், டிஃபியூசர் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

புதிய எம்ஜி5 செடான் கார் வெளியீடு... முக்கியத் தகவல்கள்!

இந்த கார் எம்ஜி5 செடான் கார் 4,675 மிமீ நீளமும், 1,842 மிமீ அகலமும் மற்றும் 1,480 மிமீ உயரமும் பெற்றிருக்கிறது. இதன் வீல்பேஸ் நீளம் 2,680 மிமீ ஆக உள்ளது.

புதிய எம்ஜி5 செடான் கார் வெளியீடு... முக்கியத் தகவல்கள்!

இந்த காரில் பெரிய தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஐ-ஸ்மார்ட் கனெக்டெட் கார் தொழில்நுட்பம், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், மல்டி ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், எலெக்ட்ரிக் சன்ரூஃப், புஷ் ஸ்டார்ட்- ஸ்டாப் பட்டன் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

புதிய எம்ஜி5 செடான் கார் வெளியீடு... முக்கியத் தகவல்கள்!

புதிய எம்ஜி5 செடான் காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் சாதாரண 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 120 பிஎச்பி பவரையும், டர்போ பெட்ரோல் மாடல் அதிகபட்சமாக 173 பிஎச்பி பவரையும் வெளிப்படுத்தும்.

புதிய எம்ஜி5 செடான் கார் வெளியீடு... முக்கியத் தகவல்கள்!

இந்த புதிய கார் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவிலும் இந்த கார் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்ற ஆவல் எழுந்துள்ளது. இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டால், பரிமாணம் அடிப்படையில் ஹோண்டா சிவிக், ஹூண்டாய் எலான்ட்ரா ஆகிய மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
MG Motor has revealed all-new MG5 mid-size sedan car in Beijing auto show 2020.
Story first published: Monday, December 7, 2020, 18:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X