அசத்தும் டிசைனில் புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவி வெளியீடு!

அசத்தலான டிசைன் அம்சங்களுடன் புதிய நிஸான் கிக்ஸ் எஸயூவி உலக அளவில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய மாடலின் படங்கள் மற்றும் கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

அசத்தும் டிசைனில் புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவி வெளியீடு!

காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் முக்கிய தேர்வுகளில் ஒன்றாக நிஸான் கிக்ஸ் எஸ்யூவி இருந்து வருகிறது. உலகின் பல்வேறு நாடுகளிலும் நிஸான் கிக்ஸ் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நிஸான் நிறுவனத்தின் சிறப்பான டிசைன் அம்சங்களுடன் இந்த எஸ்யூவி வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது.

அசத்தும் டிசைனில் புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவி வெளியீடு!

இந்த நிலையில், டிசைன் உள்ளிட்ட அனைத்து அம்சங்களிலும் மேம்படுத்தப்பட்ட நிலையில் இந்த எஸ்யூவி பொது பார்வைக்கு வந்துள்ளது. இந்த ஆண்டு துவக்கத்தில் ஜப்பான் நாட்டுக்கான புதிய கிக்ஸ் எஸ்யூவியை வெளியிட்டது. இதைதொடர்ந்து, தற்போது உலக அளவில் செல்லும் மாடலை அமெரிக்க சந்தையில் வைத்து வெளியிட்டுள்ளது.

அசத்தும் டிசைனில் புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவி வெளியீடு!

புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவியின் முகப்பு முற்றிலும் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. மிகப்பெரிய க்ரில் அமைப்பு கொடுக்கப்பட்டு அதிக வசீகரத்தை பெற்றுள்ளது. நிஸான் நிறுவனத்தின் வி வடிவிலான க்ரில் பட்டை சுற்றிலும் கருப்பு வண்ணத்தில் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

அசத்தும் டிசைனில் புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவி வெளியீடு!

எல்இடி பல்புகளுடன் மெல்லிய அமைப்பில் ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள், வலிமையான பம்பர்கள், எல்இடி டெயில் லைட்டுகள், அலாய் வீல்கள் உள்ளிட்ட பல விஷயங்கள் காரின் வசீகரத்தை வெகுவாக மேம்படுத்தி காட்டுகிறது. பின்புறத்தில் எல்இடி டெயில் லைட்டுகளை தவிர்த்து பெரிய மாற்றங்கள் இல்லை.

அசத்தும் டிசைனில் புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவி வெளியீடு!

வெளிப்புறத்தை போலவே உட்புறத்திலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சாஃப்ட் டச் பாகங்களுடன் புதிய டேஷ்போர்டு அமைப்பு, புதிய ஏசி வென்ட்டுகள், 8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், நிஸான் கனெக்டெட் கார் தொழில்நுட்பம், ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதிகள் உள்ளன.

அசத்தும் டிசைனில் புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவி வெளியீடு!

புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவியில் தட்டையான அடிப்பாகம் கொண்ட ஸ்டீயரிங் வீல் அமைப்பு இடம்பெற்றுள்ளது. ஸ்டீயரிங் வீலிலேயே கட்டுப்பாட்டு சுவிட்சுகள் உள்ளன. செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், பிரிமீயம் அப்ஹோல்ஸ்ட்ரி ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன.

அசத்தும் டிசைனில் புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவி வெளியீடு!

புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவியில் 1.6 லிட்டர் எஞ்சின்தான் தொடர்ந்து தக்க வைக்கப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 122 எச்பி பவரை வெளிப்படுத்தும். இதனுடன் எக்ஸ்ட்ரோனிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் சிறப்பான எரிபொருள் சிக்கனதையும் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசத்தும் டிசைனில் புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவி வெளியீடு!

அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்த எஸ்யூவி முதலில் அமெரிக்க சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும். இதைத்தொடர்ந்து பிற நாடுகளிலும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் வரும்போது 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தக்கவைக்கப்படும்.

அசத்தும் டிசைனில் புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவி வெளியீடு!

அடுத்த ஆண்டு பிற்பாதியில் இந்தியாவில் புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவி விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இந்தியாவில் விற்பனையில் உள்ள மாடல் அதிக தனித்துவ அம்சங்களுடன் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது. எனவே, புதிய கிக்ஸ் அறிமுகம் குறித்து நிஸான் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டால் மட்டுமே உறுதியாகும்.

Most Read Articles

மேலும்... #நிஸான் #nissan
English summary
Nissan has unveiled the 2021 Kicks facelift SUV in the US market. The new (2021) Nissan Kicks facelift SUV comes with a number of changes to its exterior design, along with an updated interior, host of added features and technology. The 2021 Nissan Kicks SUV also features an updated powertrain as well.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X