முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் நிஸான் மேக்னைட் எஸ்யூவி கார் சோதனை ஓட்டம்... அறிமுகம் எப்போது..?

சில மாதங்களுக்கு முன்பு கிக்ஸ் பிஎஸ்6 காம்பெக்ட் க்ராஸ்ஓவரை அறிமுகப்படுத்தியதை தொடர்ந்து நிஸான் நிறுவனம் புதிய மேக்னைட் சப்-4 மீட்டர் காம்பெக்ட் எஸ்யூவி காரை இந்திய சந்தைக்கு கொண்டுவரவுள்ளது. இதற்கிடையில் இந்த சப்-4 மீட்டர் எஸ்யூவி கார் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது.

முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் நிஸான் மேக்னைட் எஸ்யூவி கார் சோதனை ஓட்டம்... அறிமுகம் எப்போது..?

உலகளவில் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமாக உள்ள ஜப்பானை சேர்ந்த நிஸான், தற்போதைய நிலவரப்படி இந்திய சந்தையில் பெரிய அளவில் ஆதிக்கத்தை செலுத்துவதில்லை. இந்நிறுவனத்தில் இருந்து ஒரே ஒரு மலிவான காராக கிக்ஸ் பிஎஸ்6 மாடல் சமீபத்தில் இருந்து தான் விற்பனையில் உள்ளது.

முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் நிஸான் மேக்னைட் எஸ்யூவி கார் சோதனை ஓட்டம்... அறிமுகம் எப்போது..?

இதனால் தான் முற்றிலும் புதிய மேக்னைட் சப்-4-மீட்டர் சப்காம்பெக்ட் க்ராஸ்ஓவர் (அல்லது காம்பெக்ட் எஸ்யூவி) மாடலை தயாரிக்கும் பணியில் இந்நிறுவனம் ஈடுப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படவுள்ள இந்த காம்பெக்ட் எஸ்யூவி கார் சில வெளிநாட்டு சந்தைகளுக்கும் கொண்டு செல்லப்படவுள்ளது.

முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் நிஸான் மேக்னைட் எஸ்யூவி கார் சோதனை ஓட்டம்... அறிமுகம் எப்போது..?

கூட்டணியால் ரெனால்ட் இந்தியா நிறுவனத்தின் கிகர் மாடலுடன் உட்புற பாகங்களை பகிர்ந்து கொண்டுள்ள புதிய மேக்னைட் காம்பெக்ட் எஸ்யூவி மாடல் நிஸான்-ரெனால்ட்டின் சிஎம்எஃப்-ஏ+ மாடுலர் கட்டமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இதே ப்ளாட்ஃபாரத்தில் தான் ரெனால்ட் ட்ரைபர் மினி-எம்பிவி காரும் கட்டமைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் தற்போது முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் சோதனை ஓட்டத்தின்போது கண்டறியப்பட்டுள்ள இந்த காரின் ரஷ்லேன் செய்தி தளம் வெளியிட்டுள்ள ஸ்பை வீடியோவை வைத்து பார்க்கும்போது இந்த நிஸான் கார் ரெனால்ட் கிகர் மாடலில் இருந்து சற்று வித்தியாசமான தோற்றத்தை பெற்றுள்ளது.

முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் நிஸான் மேக்னைட் எஸ்யூவி கார் சோதனை ஓட்டம்... அறிமுகம் எப்போது..?

கியர்-ஷிஃப்ட்டின் சத்தத்தின்படி இந்த சோதனை மேக்னைட் மாடல் ஆட்டோமேட்டிக் காராக இருக்க வேண்டும். நிஸான்-ரெனால்ட் கூட்டணியில் 5-ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் சிஸ்டமானது எண்ட்ரீ-லெவல் தயாரிப்புகளான க்விட், ரெடி-கோ மற்றும் ட்ரைபர் கார்களில் கொடுக்கப்பட்டுள்ளன.

முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் நிஸான் மேக்னைட் எஸ்யூவி கார் சோதனை ஓட்டம்... அறிமுகம் எப்போது..?

இதனால் இந்த ஆட்டோமேட்டட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் நிஸான் மேக்னைட் காரிலும் வழங்கப்படலாம். இந்த காம்பெக்ட் எஸ்யூவி காரில் புதிய 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் 3-சிலிண்டர் என்ஜின் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 90 பிஎச்பி பவரையும், 150 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது.

முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் நிஸான் மேக்னைட் எஸ்யூவி கார் சோதனை ஓட்டம்... அறிமுகம் எப்போது..?

ஆனால் இதன் விலை குறைவான வேரியண்ட்களுக்கு 1.0 லிட்டர் 3-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் தேர்வு கொடுக்கப்படும் என தெரிகிறது. இந்த பெட்ரோல் என்ஜின் 71 பிஎச்பி பவரையும், 96 என்எம் டார்க் திறனையும் அதிகப்பட்சமாக காருக்கு வழங்கும் ஆற்றல் கொண்டது.

முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் நிஸான் மேக்னைட் எஸ்யூவி கார் சோதனை ஓட்டம்... அறிமுகம் எப்போது..?

2021ஆம் ஆண்டின் இறுதியில் அறிமுகமாகவுள்ள மேக்னைட் காம்பெக்ட் எஸ்யூவி காரின் மூலமாக பட்ஜெட் கார்கள் பிரிவில் நிலையாக ஆதிக்கம் செலுத்த முடியும் என நிஸான் நிறுவனம் நம்பிக்கை கொண்டுள்ளது. இருப்பினும் ரெனால்ட் நிறுவனத்தை போல் புதிய மாசு உமிழ்வு விதி விஷயத்தில் பெட்ரோல் என்ஜின் மூலமாகவே போட்டி மாடல்களை சமாளிக்கலாம் என்ற இந்நிறுவனத்தின் எண்ணம் இந்த புதிய காரின் விற்பனைக்கு சற்று பின்னடைவாக விளங்கலாம்.

Most Read Articles

மேலும்... #நிஸான் #nissan
English summary
Nissan Magnite SUV production variant spied on video – Wearing steel wheels
Story first published: Saturday, July 18, 2020, 7:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X