நிஸான் மைக்ரா ஃபேஸ்லிஃப்ட் மாடல் ஐரோப்பாவில் வெளியீடு... இந்தியா வருமா?

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் நிஸான் மைக்ரா காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் ஐரோப்பிய சந்தையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த காரின் முக்கிய அம்சங்கள் குறித்த தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

நிஸான் மைக்ரா ஃபேஸ்லிஃப்ட் மாடல் ஐரோப்பாவில் வெளியீடு... இந்தியா வருமா?

உலக அளவில் மிகவும் பிரபலமான ஹேட்ச்பேக் கார் மாடல்களில் ஒன்றாக நிஸான் மைக்ரா கார் மிக நீண்ட காலமாக இருந்து வருகிறது. 1982ம் ஆண்டு முதல் உலகின் பல்வேறு நாடுகளில் இந்த கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் பல ஆண்டுகளாக நிஸான் மைக்ரா கார் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

நிஸான் மைக்ரா ஃபேஸ்லிஃப்ட் மாடல் ஐரோப்பாவில் வெளியீடு... இந்தியா வருமா?

இந்த நிலையில், பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிகளுக்கு பின்னர் இந்த கார் விற்பனையில் இருந்து நீக்கப்பட்டது. இந்த நிலையில், ஐரோப்பிய சந்தைகளுக்கான புதிய நிஸான் மைக்ரா கார் வெளியிடப்பட்டுள்ளது.

நிஸான் மைக்ரா ஃபேஸ்லிஃப்ட் மாடல் ஐரோப்பாவில் வெளியீடு... இந்தியா வருமா?

கடந்த 2016ம் ஆண்டு புதிய தலைமுறை மாடலாக வெளியிடப்பட்ட பின்னர் தற்போது சில மாற்றங்களுடன் புதுப்பொலிவு கொடுக்கப்பட்டு இருக்கிறது. புதிய நிஸான் மைக்ரா கார் விசியா, அசென்ட்டா, டெக்னா ஆகிய வேரியண்ட்டுகளில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், புதிய மாடலில் என் ஸ்போர்ட் என்ற புதிய வேரியண்ட்டும் சேர்க்கப்பட்டு இருக்கிறது.

நிஸான் மைக்ரா ஃபேஸ்லிஃப்ட் மாடல் ஐரோப்பாவில் வெளியீடு... இந்தியா வருமா?

இந்த புதிய வேரியண்ட்டில் புதிய நிஸான் மைக்ரா காரின் அழகை கூட்டும் விதமாக அதிக ஆக்சஸெரீகள் மற்றும் அலங்கார விஷயங்கள் உள்ளன. வி வடிவிலான க்ரில் அமைப்பு, மெல்லிய எல்இடி ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள், எல்இடி பனி விளக்குகள், வலிமையான பாடி லைன்கள், 17 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்களுடன் மிகவும் கம்பீரமாக இருக்கிறது.

நிஸான் மைக்ரா ஃபேஸ்லிஃப்ட் மாடல் ஐரோப்பாவில் வெளியீடு... இந்தியா வருமா?

புதிய மாடலில் போஸ் ஆடியோ சிஸ்டம், தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், நிஸான் என் கனெக்ட் தொழில்நுட்பம், கூகுள் அசிஸ்ட் வசதியுடன் ஆன்ட்ராய்டு ஆட்டோ, சிரி வாய்ஸ் கமாண்ட் வசதியுடன் ஆப்பிள்கார் ப்ளே, டாம் டாம் நேவிகேஷன் வசதி ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

நிஸான் மைக்ரா ஃபேஸ்லிஃப்ட் மாடல் ஐரோப்பாவில் வெளியீடு... இந்தியா வருமா?

புதிய நிஸான் மைக்ரா காரில் முக்கிய மாற்றமாக 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வு வழங்கப்படுகிறது. இந்த எஞ்சின் யூரோ 6டி மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய எஞ்சின் சிறப்பான செயல்திறனையும், குறைவான மாசு உமிழ்வு தரத்தையும் பெற்றிருப்பதாகவும், உற்சாகமான ஓட்டுதல் அனுபவத்தை வழங்கும் என நிஸான் தெரிவித்துள்ளது.

நிஸான் மைக்ரா ஃபேஸ்லிஃப்ட் மாடல் ஐரோப்பாவில் வெளியீடு... இந்தியா வருமா?

புதிய நிஸான் மைக்ரா காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் கூடுதலாக ஹை பீம் அசிஸ்ட், எமர்ஜென்சி பிரேக்கிங் சிஸ்டம், அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் சிஸ்டம் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. இந்த புதிய மாடல் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படுமா என்பது குறித்த இதுவரை தகவல் இல்லை. எனினும், பிரிமீயம் ஹேட்ச்பேக் கார்களுக்கு குறிப்பிடத்தக்க வரவேற்பு இருந்து வருவதால், பிஎஸ்-6 எஞ்சினுடன் நிஸான் மைக்ரா காரை இந்தியா கொண்டு வருவது குறித்து நிஸான் பரிசீலிக்கும் வாய்ப்புள்ளது.

Most Read Articles

மேலும்... #நிஸான் #nissan
English summary
Nissan has revealed the Micra facelift model with subtle changes for the European market.
Story first published: Wednesday, November 18, 2020, 11:12 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X