ஒரு கிமீ ஓட்டுவதற்கு வெறும் 30 பைசா மட்டுமே செலவு... விலையும் கம்மி... 40 ஆயிரம் ரூபாய் மானியம் வேற தர்றாங்க!

ஒரு கிலோ மீட்டர் ஓட்டுவதற்கு வெறும் 30 பைசா மட்டுமே செலவு ஆகும் புதிய எலெக்ட்ரிக் ரிக்ஸா ஒன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஒரு கிமீ ஓட்டுவதற்கு வெறும் 30 பைசா மட்டுமே செலவு... விலையும் கம்மி... 40 ஆயிரம் ரூபாய் மானியம் வேற தர்றாங்க!

பெட்ரோல், டீசல் வாகனங்களால் காற்றின் தரம் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. இந்த சுற்றுச்சூழல் சீர்கேடு, இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவையை அதிகரித்துள்ளது. பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகமாக்குவதன் மூலம் சுற்றுச்சூழலை பாதுகாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஒரு கிமீ ஓட்டுவதற்கு வெறும் 30 பைசா மட்டுமே செலவு... விலையும் கம்மி... 40 ஆயிரம் ரூபாய் மானியம் வேற தர்றாங்க!

மக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மீது ஆர்வம் அதிகரித்து வருவதால், பல்வேறு நிறுவனங்கள் புதிய தயாரிப்புகளை தொடர்ச்சியாக அறிமுகம் செய்து வருகின்றன. இந்த வரிசையில் முன்னணி எலெக்ட்ரிக் ரிக்ஸா உற்பத்தி நிறுவனமான யு.பி.டெலிலிங்க்ஸ் லிமிடெட், சிங்கம் Li-ion என்ற புதிய மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஒரு கிமீ ஓட்டுவதற்கு வெறும் 30 பைசா மட்டுமே செலவு... விலையும் கம்மி... 40 ஆயிரம் ரூபாய் மானியம் வேற தர்றாங்க!

உத்தர பிரதேச மாநிலம் காஸியாபாத் மற்றும் உத்தரகாண்ட் மாநிலம் ருத்ராபூர் ஆகிய இடங்களில் இந்த நிறுவனத்திற்கு உற்பத்தி ஆலைகள் உள்ளன. சிங்கம் என்ற பிராண்டின் கீழ் இந்த நிறுவனம் எலெக்ட்ரிக் ரிக்ஸாக்களை தயாரித்து வருகிறது. இந்த வரிசையில் சிங்கம் Li-ion தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு கிமீ ஓட்டுவதற்கு வெறும் 30 பைசா மட்டுமே செலவு... விலையும் கம்மி... 40 ஆயிரம் ரூபாய் மானியம் வேற தர்றாங்க!

ஆட்டோ ஸ்டைலில் உருவாக்கப்பட்டுள்ள இந்த எலெக்ட்ரிக் ரிக்ஸாவிற்கு 1.85 லட்ச ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த எலெக்ட்ரிக் ரிக்ஸாவை வாங்குபவர்களுக்கு, மத்திய அரசின் ஃபேம் இந்தியா II திட்டத்தின் கீழ், 37 ஆயிரம் ரூபாய் மானியமாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. வாடிக்கையாளர்களை கவரும் விஷயமாக இது இருக்கும்.

ஒரு கிமீ ஓட்டுவதற்கு வெறும் 30 பைசா மட்டுமே செலவு... விலையும் கம்மி... 40 ஆயிரம் ரூபாய் மானியம் வேற தர்றாங்க!

கவர்ச்சிகரமான டிசைன் மற்றும் அட்டகாசமான வசதிகளை பெற்றுள்ள இந்த எலெக்ட்ரிக் ரிக்ஸா மூன்று ஆண்டுகள் வாரண்டியுடன் வருகிறது. இந்த எலெக்ட்ரிக் ரிக்ஸாவில் எல்இடி லைட்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் சக்தி வாய்ந்த 1,500 வாட் மோட்டாரையும் இந்த எலெக்ட்ரிக் ரிக்ஸா பெற்றுள்ளது. இதன் லித்தியம் அயான் பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 100 கிலோ மீட்டர்கள் பயணம் செய்ய முடியும்.

ஒரு கிமீ ஓட்டுவதற்கு வெறும் 30 பைசா மட்டுமே செலவு... விலையும் கம்மி... 40 ஆயிரம் ரூபாய் மானியம் வேற தர்றாங்க!

சிங்கம் டீலர்ஷிப்கள் வாயிலாக இந்த புதிய எலெக்ட்ரிக் ரிக்ஸா விற்பனை செய்யப்படும். வாடிக்கையாளர்களுக்கு கடன் வசதிகள் எளிதாக கிடைக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு நிதி நிறுவனங்களுடன், யு.பி.டெலிலிங்க்ஸ் லிமிடெட் கூட்டணி அமைத்துள்ளது. இந்த புதிய எலெக்ட்ரிக் ரிக்ஸாவிற்கு 300க்கும் மேற்பட்ட ஆர்டர்கள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு கிமீ ஓட்டுவதற்கு வெறும் 30 பைசா மட்டுமே செலவு... விலையும் கம்மி... 40 ஆயிரம் ரூபாய் மானியம் வேற தர்றாங்க!

அதே சமயம் வரும் டிசம்பர் 15ம் தேதியில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு இந்த எலெக்ட்ரிக் ரிக்ஸாக்களை டெலிவரி செய்யும் பணிகள் தொடங்கப்படவுள்ளன. ஏற்கனவே கூறியபடி பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் இந்த எலெக்ட்ரிக் ரிக்ஸா 100 கிலோ மீட்டர்கள் பயணிக்கும். எனவே இதனை ஒரு கிலோ மீட்டர் இயக்குவதற்கு வெறும் 30 பைசா மட்டுமே செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு கிமீ ஓட்டுவதற்கு வெறும் 30 பைசா மட்டுமே செலவு... விலையும் கம்மி... 40 ஆயிரம் ரூபாய் மானியம் வேற தர்றாங்க!

இயக்குவதற்கான செலவு மிகவும் குறைவாக இருப்பதும் வாடிக்கையாளர்களை கவரும் விஷயமாக இருக்கும். வாடிக்கையாளர்களுக்கு சௌகரியமான பயணத்தை உறுதி செய்யும் வகையில் இந்த புதிய எலெக்ட்ரிக் ரிக்ஸா வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த எலெக்ட்ரிக் ரிக்ஸாவிற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
New Singham Li-ion e-rickshaw Launched In India. Read in Tamil
Story first published: Monday, December 14, 2020, 7:52 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X