அறிமுகத்திற்கு முன்னதாக இந்தியாவில் ஸ்கோடா கரோக் எஸ்யூவி சோதனை ஓட்டம்...

அறிமுகத்திற்கு முன்னதாக ஸ்கோடா கரோக் மாடல் சோதனை ஓட்டத்தின்போது கண்டறியப்பட்டுள்ளது. வெளியாகியுள்ள இதன் சோதனை ஓட்ட படங்களின் மூலமாக வெளிவந்துள்ள தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

அறிமுகத்திற்கு முன்னதாக இந்தியாவில் ஸ்கோடா கரோக் எஸ்யூவி சோதனை ஓட்டம்...

டீம் பிஎச்பி செய்தி தளத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த படங்களில் சோதனை கார் பாதுகாப்பு டேப் உடன் காட்சியளிக்கிறது. இதனால் இந்த சோதனை ஓட்டம் டீலர்ஷிப்களால் நடத்தப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. அதேபோல் ஸ்கோடா நிறுவனம் கரோக் மாடலை சிங்கிள் ட்ரிம்-ஆக சிபியூ முறையில் இந்தியாவில் சந்தைப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அறிமுகத்திற்கு முன்னதாக இந்தியாவில் ஸ்கோடா கரோக் எஸ்யூவி சோதனை ஓட்டம்...

கேண்டி வொய்ட், மேக்னெட்டிக் ப்ரவுன், லாவா ப்ளூ, மேஜிக் ப்ளாக், ப்ரில்லியண்ட் சில்வர், குவார்ட்ஸ் க்ரே என்ற ஐந்து விதமான நிறத்தேர்வுகளில் விற்பனைக்கு வரும் இந்த எஸ்யூவி காரில் ஸ்கோடா நிறுவனம் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் என்ஜினை பொருத்தியுள்ளது.

MOST READ: பருவமழை தொடங்க போகுது... மழை நீரில் இருந்து வாகனங்களை பாதுகாக்க எளிமையான வழி என்னென்ன..?

அறிமுகத்திற்கு முன்னதாக இந்தியாவில் ஸ்கோடா கரோக் எஸ்யூவி சோதனை ஓட்டம்...

அதிகப்பட்சமாக 148 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் இந்த பெட்ரோல் என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 7-ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் ஆற்றல் மூலமாக 0-விலிருந்து 100kmph என்ற வேகத்தை வெறும் 9 வினாடிகளில் அடைந்துவிடும் இந்த கார் அதிகப்பட்சமாக 202kmph என்ற வேகம் வரையில் இயங்கும்.

அறிமுகத்திற்கு முன்னதாக இந்தியாவில் ஸ்கோடா கரோக் எஸ்யூவி சோதனை ஓட்டம்...

எல்இடி ஹெட்லைட்கள், 18 இன்ச்சில் அலாய் சக்கரங்கள், பனோராமிக் சன்ரூஃப், விர்டியுவல் காக்பிட், 8.0 இன்ச் தொடுத்திரையுடன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஸ்மார்ட் லிங்க் இணைப்பு, இரு நிலைகளுக்கான க்ளைமேட் கண்ட்ரோல் உடன் ஏசி சிஸ்டம், கேபினை சுற்றிலும் விளக்குகள் உள்ளிட்டவை இந்த காரில் உள்ள அம்சங்களாகும்.

அறிமுகத்திற்கு முன்னதாக இந்தியாவில் ஸ்கோடா கரோக் எஸ்யூவி சோதனை ஓட்டம்...

பாதுகாப்பு வசதிகளாக இந்த எஸ்யூவி மாடலில் பார்க் ட்ரோனிக் சிஸ்டம், டயரின் அழுத்தத்தை அளவிடும் சிஸ்டம், 9 காற்றுப்பைகள், இபிடி உடன் ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் போன்றவை வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறான வசதிகளை கொண்ட புதிய கரோக் எஸ்யூவி மாடலின் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.20 லட்சம் அளவில் நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அறிமுகத்திற்கு முன்னதாக இந்தியாவில் ஸ்கோடா கரோக் எஸ்யூவி சோதனை ஓட்டம்...

ஹூண்டாய் டூஸான், ஜீப் காம்பஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக வரும் இந்த ஸ்கோடா காருக்கு முன்பதிவுகள் இந்த மே மாத துவக்கத்தில் இருந்து ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டது. தற்போது சோதனை ஓட்டத்திலும் இந்த கார் ஈடுப்படுத்தப்பட்டு வருவதால் இந்த காரின் டெலிவிரி பணிகள் தற்சமயம் அமலில் உள்ள ஊரடங்கு முடிவுக்கு வந்தபின் ஆரம்பமாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அறிமுகத்திற்கு முன்னதாக இந்தியாவில் ஸ்கோடா கரோக் எஸ்யூவி சோதனை ஓட்டம்...

இந்திய சந்தையில் எஸ்யூவி மாடலுக்கான வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை சரியாக பயன்படுத்தி கொள்ளும் விதத்தில் தான் கரோக் மிட்-சைஸ் எஸ்யூவி மாடலை ஸ்கோடா நிறுவனம் இந்தியாவிற்கு கொண்டுவர தீவிரமாக பணியாற்றி வருகிறது.

Most Read Articles
மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Skoda Karoq spied ahead of launch
Story first published: Friday, May 22, 2020, 1:50 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X