புதிய ஸ்கோடா கரோக் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்!

புதிய ஸ்கோடா கரோக் எஸ்யூவி இன்று இந்தியாவில் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. கொரோனாவால் சமூக வலைத்தளம் வழியாக அறிமுக நிகழ்ச்சி நடந்தது.

புதிய ஸ்கோடா கரோக் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்!

ஏற்கனவே இந்தியாவில் விற்பனையில் இருந்த ஸ்கோடா யெட்டி எஸ்யூவிக்கு மாற்றாக இந்த புதிய மாடல் நிலைநிறுத்தப்படுகிறது. புதிய ஸ்கோடா கரோக் எஸ்யூவி முழுமையாக கட்டமைக்கப்பட்ட நிலையில் இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட உள்ளது.

புதிய ஸ்கோடா கரோக் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்!

புதிய ஸ்கோடா கரோக் எஸ்யூவிக்கு ரூ.24.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. அனைத்து வசதிகளும் உள்ளடக்கிய ஒரே வேரியண்ட்டாக விற்பனைக்கு கிடைக்கும். இதன் ரகத்திலேயே மிகவும் பிரிமீயம் மாடலாக நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது.

MOST READ : பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!

புதிய ஸ்கோடா கரோக் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்!

புதிய ஸ்கோடா கரோக் எஸ்யூவியில் முழுமையான எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், 18 அங்குல அலாய் வீல்கள், பின்புறத்தில் எல்இடி டெயில் லைட்டுகள், டியூவல் டோன் பம்பர் இடம்பெற்றுள்ளன. பனோரமிக் சன்ரூஃப் கொடுக்கப்பட்டு இருப்பதும் முக்கிய அம்சமாக இருக்கிறது.

புதிய ஸ்கோடா கரோக் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்!

உட்புறத்தில் எல்இடி ஆம்பியன் லைட் சிஸ்டம், 2 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், 8.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடயின்மென்ட் சிஸ்டம், ஸ்கோடா ஸ்மார்ட்லிங்க் கனெக்ட்டிவிட்டி வசதி, க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், பீஜ் வண்ண லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி, எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதி கொண்ட ஓட்டுனர் இருக்கை ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன.

MOST READ: 80s, 90s கார்களை தேடி பார்த்து திருடிய கொள்ளையன்... சொன்னாரு பாருங்க ஒரு காரணம்... போலீஸே மிரண்டாங்க

புதிய ஸ்கோடா கரோக் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்!

புதிய ஸ்கோடா கரோக் எஸ்யூவியில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வு வழங்கப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 150 பிஎஸ் பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. 0 - 100 கிமீ வேகத்தை 9 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 202 கிமீ வேகம் வரை எட்டிப்பிடிக்கும் திறன் கொண்டது.

புதிய ஸ்கோடா கரோக் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்!

இந்த காரின் எஞ்சின் விசேஷ தொழில்நுட்ப அம்சத்தை பெற்றிருக்கிறது. பாரம் குறைவாக இருக்கும்போது இந்த நான்கு சிலிண்டர்கள் கொண்ட எஞ்சினில் இரண்டு சிலிண்டர்கள் தானியங்கி முறையில் செயல்பாட்ட நிறுத்திக் கொண்டு, மீண்டும் இயங்கும் நுட்பத்தை பெற்றிருக்கிறது. இதன்மூலமாக, அதிக எரிபொருள் சிக்கனத்தை உறுதி செய்யும்.

MOST READ: ஸ்டைலான ப்ளாக் எடிசனை பெற்ற ஃபோக்ஸ்வேகன் டி-ராக்... காரை பற்றிய முழுவிபரம் உள்ளே...

புதிய ஸ்கோடா கரோக் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்!

இந்த காரில் 9 ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், ரியர் பார்க்கிங் சென்சார்கள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் போன்ற ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள் இந்த காரில் இடம்பெறும்.

புதிய ஸ்கோடா கரோக் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்!

புதிய ஸ்கோடா கரோக் எஸ்யூவி லாவா புளூ, பிரில்லியண்ட் சில்வர், கேண்டி ஒயிட், மேக்னெட்டிக் பிரவுன், மேஜிக் பிளாக் மற்றும் குவார்ட்ஸ் க்ரே ஆகிய வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும்.

MOST READ: புதிய 900சிசி பைக்குகளை இந்தியாவில் விளம்பரப்படுத்த ஆரம்பித்துள்ள பிஎம்டபிள்யூ...

புதிய ஸ்கோடா கரோக் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்!

ஸ்கோடா கரோக் எஸ்யூவியானது ஜீப் காம்பஸ் மற்றும் அண்மையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட ஃபோக்ஸ்வேகன் டி ராக், விரைவில் வரும் ஹூண்டாய் டூஸான் ஆகிய எஸ்யூவி மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். ரூ.50,000 முன்பணத்துடன் இந்த எஸ்யூவிக்கு ஏற்கனவே முன்பதிவு நடந்து வருகிறது. விரைவில் டெலிவிரிப் பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இறக்குமதி செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்படுவதுடன், டாப் வேரியண்ட்டில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், அதிக விலை நிர்ணயிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஸ்கோடா தள்ளப்பட்டு விட்டது. இதனால், இந்தியர்கள் மத்தியில் சற்றே ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

Most Read Articles

மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Skoda has launched all new Karoq SUV in India and it is priced from Rs. 24.99 lakh (ex-showroom).
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X