2021 ஸ்கோடா ஆக்டேவியா காரின் சோதனை பணிகள் துவங்கின... அடுத்த வருடத்தில் அறிமுகம்...

ஸ்கோடா நிறுவனம் புத்தம் புதிய ஆக்டேவியா மாடலின் சோதனை பணிகளை துவங்கியுள்ளது. இதன்படி புனேக்கு அருகே நடைபெற்ற இந்த மாடலின் மாதிரி காரின் சோதனை ஓட்ட ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளன. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

2021 ஸ்கோடா ஆக்டேவியா காரின் சோதனை பணிகள் துவங்கின... அடுத்த வருடத்தில் அறிமுகம்...

புதிய ஆக்டேவியாவின் ஒத்திசைவு பணிகள் துவங்கப்பட்டுவிட்டதால், ஸ்கோடா நிறுவனம் இந்த மாடலை முழு மறைப்புடன் சோதனையில் உட்படுத்தியுள்ளது. சில வெளிநாட்டு சந்தைகளில் ஏற்கனவே அறிமுகமாகிவிட்ட இந்த கார் அதே தோற்றத்தில் தான் இந்திய சந்தையில் களமிறங்கவுள்ளது.

2021 ஸ்கோடா ஆக்டேவியா காரின் சோதனை பணிகள் துவங்கின... அடுத்த வருடத்தில் அறிமுகம்...

இருப்பினும் சில நுட்பமான மாற்றங்களை ஏற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் கூடுதல் க்ரவுண்ட் கிளியரென்ஸிற்காக சர்வதேச மாடலில் இருந்து இந்தியாவில் அறிமுகமாகும் ஆக்டேவியா காரின் உயரத்தை சற்று பெரியதாக எதிர்பார்க்கலாம்.

2021 ஸ்கோடா ஆக்டேவியா காரின் சோதனை பணிகள் துவங்கின... அடுத்த வருடத்தில் அறிமுகம்...

க்ரூப்பின் எம்க்யூபி ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய ஆக்டேவியா மாடல் அதன் முந்தைய தலைமுறை காரை காட்டிலும் 19மிமீ நீளமானதாகவும், 15மிமீ அகலமானதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

2021 ஸ்கோடா ஆக்டேவியா காரின் சோதனை பணிகள் துவங்கின... அடுத்த வருடத்தில் அறிமுகம்...

அதேபோல் தற்சமயம் விற்பனையில் இருக்கும் ஆக்டேவியா கொண்டிருக்கும் பிளவுப்பட்ட ஹெட்லேம்ப், கூடுதல் வழக்கமான தளவமைப்பிற்காக இந்த புதிய காரில் தவிர்க்கப்பட்டுள்ளது. கூர்மையான டிசைன், புதிய ஆக்டேவியாவை ஸ்கோடாவின் புதிய தயாரிப்புகளான ஸ்காலா ஹேட்ச்பேக் மற்றும் சூப்பர்ப் அப்டேட் வெர்சன் உள்ளிட்டவற்றிற்கு இணையானதாக காட்டுகிறது.

2021 ஸ்கோடா ஆக்டேவியா காரின் சோதனை பணிகள் துவங்கின... அடுத்த வருடத்தில் அறிமுகம்...

தற்போது ஆட்டோகார் இந்தியா செய்தி தளம் வெளியிட்டுள்ள ஸ்பை படங்களில் சோதனை கார் பகல்நேரத்திலும் ஒளிரக்கூடிய விளக்குகளுடன் எல்இடி தரத்தில் ஹெட்லேம்ப்கள், எல்இடி ஃபாக் விளக்குகள் மற்றும் டெயில்-லைட்கள் மற்றும் 17 இன்ச்சில் ‘ரோட்டரே ஏரோ' அலாய் சக்கரங்களை கொண்டுள்ளது.

2021 ஸ்கோடா ஆக்டேவியா காரின் சோதனை பணிகள் துவங்கின... அடுத்த வருடத்தில் அறிமுகம்...

மற்றப்படி காரின் உட்புற தோற்றத்தை இந்த ஸ்பை படங்கள் மூலமாக அறிய முடியவில்லை. நமக்கு தெரிந்தவரை இதன் உட்புறத்தை இந்திய சந்தைக்காக பழுப்பு மற்றும் கருப்பு நிறங்களில் ஸ்கோடா நிறுவனம் வடிவமைத்திருக்கும்.

2021 ஸ்கோடா ஆக்டேவியா காரின் சோதனை பணிகள் துவங்கின... அடுத்த வருடத்தில் அறிமுகம்...

அதேபோல் தொழிற்நுட்ப வசதிகளையும் புதிய ஆக்டேவியா மாடலில் தற்போதைய தலைமுறை காரை காட்டிலும் சிறப்பானதாகவே எதிர்பார்க்கலாம். இதில் முக்கியமானதாக 10.25 இன்ச்சில் விர்டியுவல் காக்பிட் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 10 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், இ-சிம் உடன் கனெக்டட் கார் தொழிற்நுட்பம் உள்ளிட்டவை அடங்கும்.

2021 ஸ்கோடா ஆக்டேவியா காரின் சோதனை பணிகள் துவங்கின... அடுத்த வருடத்தில் அறிமுகம்...

பயணிகளின் பாதுகாப்பிற்கு ஒன்பது காற்றுப்பைகள், விபத்தை தவிர்க்க அசிஸ்ட் & டர்ன் அசிஸ்ட், மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் பாதைசாரி & சைக்கிள் பயணிகளை அடையாளம் கண்டு மோதுவதை தவிர்க்கும் வசதி உள்ளிட்டவற்றை கொண்டிருக்கும்.

2021 ஸ்கோடா ஆக்டேவியா காரின் சோதனை பணிகள் துவங்கின... அடுத்த வருடத்தில் அறிமுகம்...

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு புதிய ஆக்டேவியாவில் 190 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடிய 2.0 லிட்டர் டிஎஸ்ஐ டர்போ-பெட்ரோல் என்ஜினை 7-ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் புதியதாக ஸ்கோடா நிறுவனம் வழங்கவுள்ளதாக ஏற்கனவே கூறியிருந்தோம். இதனுடன் விற்பனையில் உள்ள ஆக்டேவியா கார் கொண்டிருக்கும் என்ஜின் தேர்வுகளையும் இந்த கார் பெறவுள்ளது.

2021 ஸ்கோடா ஆக்டேவியா காரின் சோதனை பணிகள் துவங்கின... அடுத்த வருடத்தில் அறிமுகம்...

முன்னதாக இந்த காரை இந்த 2020 வருடத்தில் அறிமுகப்படுத்த ஸ்கோடா நிறுவனம் திட்டமிட்டிருந்தது. ஆனால் கொரோனாவின் தாக்கத்தினால் புதிய ஆக்டேவியா அடுத்த 2021ஆம் ஆண்டின் துவக்கத்தில் அறிமுகமாகவுள்ளது. இதன் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.20-25 லட்சத்தில் நிர்ணயிக்கப்படலாம்.

Most Read Articles

மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
New Skoda Octavia spied fully undisguised in India
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X