டீலர்ஷிப்களை சென்றடைந்தது ஸ்கோடா சூப்பர்ப் எல்&கே செடான் கார்.. டெலிவிரிகள் விரைவில் துவங்குகிறது..

முன்பதிவுகள் கடந்த ஏப்ரல் மாதத்தில் துவங்கியதை அடுத்து ஸ்கோடா சூப்பர்ப் லாரின் & கிளெமெண்ட் (எல்&கே) செடான் மாடல் டீலர்ஷிப்பில் டெலிவிரி செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளபோது அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுகுறித்து பவர் ஸ்ட்ரோக் பிஎஸ் என்ற செய்தி தளம் தனது யூடியுப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவினை இந்த செய்தியில் பார்ப்போம்.

டீலர்ஷிப்களை சென்றடைந்து ஸ்கோடா சூப்பர்ப் எல்&கே செடான் கார்... டெலிவிரிகள் விரைவில் துவங்குகிறது...!

தற்போது டீலர்ஷிப்களுக்கு சென்றுள்ள சூப்பர்ப் எல்&கே மாடலுக்கு இந்நிறுவனம் லாவா ப்ளூ, மேஜிக் ப்ளாக், மேக்னெட்டிக் ப்ரவுன், பிஸ்னஸ் க்ரே மற்றும் நிலாவின் வெள்ளை என்ற 5 விதமான நிறத்தேர்வுகளை வழங்கியுள்ளது.

டீலர்ஷிப்களை சென்றடைந்து ஸ்கோடா சூப்பர்ப் எல்&கே செடான் கார்... டெலிவிரிகள் விரைவில் துவங்குகிறது...!

இந்த பெயிண்ட் அமைப்புகளில் எல்&கே பேட்ஜ் காரின் வெளிப்புறத்திலும், உட்புறம் ட்யூல்-டோன் நிற அமைப்பிலும் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் உட்புற கேபின் தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் ஹெட்-யூனிட்டை கொண்டுள்ளது.

டீலர்ஷிப்களை சென்றடைந்து ஸ்கோடா சூப்பர்ப் எல்&கே செடான் கார்... டெலிவிரிகள் விரைவில் துவங்குகிறது...!

தற்போதைய மாடலில் இருந்து புதிய ஸ்கோடா சூப்பர்ப் எல்&கே மாடல் திருத்தியமைக்கப்பட்ட க்ரோம் க்ரில் மற்றும் எல்இடி ஹெட்லேம்ப்கள், ரீடிசைனில் டெயில்லைட்கள் மற்றும் கூடுதல் க்ரோம்களுடன் புதிய பம்பர் உள்ளிட்டவற்றை காஸ்மெட்டிக் மாற்றங்களாக பெற்றுள்ளது.

டீலர்ஷிப்களை சென்றடைந்து ஸ்கோடா சூப்பர்ப் எல்&கே செடான் கார்... டெலிவிரிகள் விரைவில் துவங்குகிறது...!

அதேபோல் வட்டவடிவிலான லோகோவிற்கு பதிலாக ஸ்கோடா எழுத்துகள் காரின் பின்புற பூட் லிட்டில் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த பூட் ரூம் 625 லிட்டர் கொள்ளவு கொண்டதாகும். தற்போதைய சூப்பர்ப் எல்&கே மாடலின் நீளம் 4861மிமீ ஆகவும், அகலம் 1864 மிமீ ஆகவும், உயரம் 1483 மிமீ ஆகவும், வீல்பேஸ் 2841மிமீ ஆகவும் உள்ளது.

டீலர்ஷிப்களை சென்றடைந்து ஸ்கோடா சூப்பர்ப் எல்&கே செடான் கார்... டெலிவிரிகள் விரைவில் துவங்குகிறது...!

இதே பரிணாம அளவுகளில் தான் இதன் புதிய வெர்சனும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காரின் க்ரவுண்ட் கிளியரென்ஸ் 164மிமீ ஆக கொடுக்கப்பட்டுள்ளது. இதன் தற்போதைய மாடலில் 4 சிலிண்டர் இன்லைன், 4 வால்வுகள், பிஎஸ்4 பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு வருகிறது.

டீலர்ஷிப்களை சென்றடைந்து ஸ்கோடா சூப்பர்ப் எல்&கே செடான் கார்... டெலிவிரிகள் விரைவில் துவங்குகிறது...!

இந்த என்ஜின் அமைப்பின் மூலமாக அதிகப்பட்சமாக 177 பிஎச்பி மற்றும் 250 என்எம் டார்க் திறனில் இயங்கி வரும் இந்த செடான் கார் 14.67 கிமீ மைலேஜ்ஜை வழங்குகிறது. என்ஜின், ஆற்றலை காரின் முன்புற சக்கரத்திற்கு வழங்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

டீலர்ஷிப்களை சென்றடைந்து ஸ்கோடா சூப்பர்ப் எல்&கே செடான் கார்... டெலிவிரிகள் விரைவில் துவங்குகிறது...!

இதனுடன் சூப்பர்ப் ஃபேஸ்லிஃப்ட் மாடலையும் ஸ்கோடா நிறுவனம் சந்தைக்கு கொண்டுவர ஆயத்தமாகி வருகிறது. இந்த ஃபேஸ்லிஃப்ட் காரில் 187 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடிய 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதனுடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 7-ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Skoda Superb L&K reaches dealerships
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X