Just In
- 51 min ago
பார்ட்-டைம் ஆட்டோ டிரைவராக மாறிய 21 வயது இளம்பெண்... காரணம் தெரிந்தால் கண்டிப்பா பாராட்டுவீங்க...
- 1 hr ago
இந்தியா வரும் அசத்தலான டெஸ்லா மாடல் ஒய் எலெக்ட்ரிக் எஸ்யூவி... முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை!
- 3 hrs ago
தமிழ்நாட்டை பாத்து கத்துக்கணும்... பாராட்டி தள்ளிய மத்திய அமைச்சர்... எதற்காக என தெரிந்தால் அசந்திருவீங்க!
- 3 hrs ago
2021 டொயோட்டா ஃபார்ச்சூனரை முன்பதிவு செய்தவர்களுக்கு ஓர் இன்ப செய்தி!! கார் ஷோரூம்களை வந்தடைய துவங்கிவிட்டது
Don't Miss!
- Movies
கப்பை தட்டிய ஆரி.. தில்லாய் டிவிட்டிய அனிதா சம்பத்.. பார்த்து ஆறுதல் கூறும் ஃபேன்ஸ்!
- News
ஜனவரி 27-ம் தேதி ஜெயலலிதா நினைவிடம் திறப்பு... முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் விழா..!
- Lifestyle
செட்டிநாடு வரமிளகாய் சட்னி
- Sports
ஆஸ்திரேலியாவை 3வது இடத்திற்கு தள்ளி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முதலிடம்.. இந்தியா அதிரடி
- Finance
உச்சத்தில் பெட்ரோல் டீசல் விலை.. உற்பத்தி குறைவு தான் காரணம்.. தர்மேந்திர பிரதான்..!
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பெங்களூருவில் காட்சிதந்த 2021 டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜண்டர் கார்!! ஜனவரியில் அறிமுகம்
விரைவில் அறிமுகமாகவுள்ள 2021 டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜண்டர் இந்தியாவில் எந்தவொரு மறைப்பும் இல்லாமல் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள ஸ்பை படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

சில மாதங்களுக்கு முன் உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்ட டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அதற்கு முன்னதாக அடுத்த ஜனவரி மாதத்தில் பொங்கல் பண்டிகை நாட்களை முன்னிட்டு ஃபார்ச்சூனரின் ஸ்பெஷல் ‘லெஜண்டர்' வேரியண்ட் விற்பனைக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது பெங்களூருவில் தொலைக்காட்சி கமெர்ஷியல் (டிவிசி) வீடியோவிற்கான படப்பிடிப்பில் இருந்து எந்தவொரு மறைப்பாலும் மறைக்கப்படாத ஃபார்ச்சூனர் லெஜண்டர் எடிசன் காரின் ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளன.

லெஜண்டர், ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் காரின் ஸ்போர்டியர் வெர்சனாக வெளிவரவுள்ளதாக இதன் காரணமாக ப்ரீமியம் தரத்திலான அம்சங்கள் இந்த ஸ்பெஷல் எடிசன் சற்று அதிகமாகவே வழங்கப்பட்டுள்ளன.

காடிவாடி செய்திதளம் மூலம் கிடைத்துள்ள இந்த படங்களில் L-வடிவிலான டிஆர்எல்களுடன் முன்பக்கத்தில் கூர்மையான தோற்றத்திலான ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், அகலமான வடிவில் தாழ்வான ரேடியேட்டர் க்ரில் உடன் நேர்த்தியான க்ரில் அமைப்பு உள்ளிட்டவற்றுடன் லெஜண்டரின் முன்பக்கம் மிகவும் முரட்டுத்தனமான தோற்றத்தில் காட்சியளிக்கிறது.

அதேபோல் முன்பக்க மூடுபனி விளக்குகளும் வித்தியாசமான வடிவத்தில் உள்ளன. பின்பக்கத்தில் ஸ்போர்டியான தோற்றத்திற்காக L-வடிவ செங்குத்தான ப்ளேட்களுடன் சிறிது திருத்தியமைக்கப்பட்ட பம்பரை இந்த ஸ்பெஷல் எடிசன் கார் பெற்றுள்ளது.

அலாய் சக்கரங்கள் இரட்டை நிறத்தில் நன்கு பெரியதாக 20 இன்ச்சில் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் அதேநேரம் முன் மற்றும் பின்பக்கத்தில் க்ரோம் தொடுதல்கள் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளன. உட்புறமும் அதற்கு பதிலாக கருப்பு நிறத்தில் பாகங்களை ஏற்றுள்ளது.

உட்புற கேபின் ஆப்பிள் கார்ப்ளே உடன் 9-இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் , டி-கனெக்டட் கார் தொழிற்நுட்பம், 360-கோண பார்க்கிங் கேமிரா, வயர் இல்லா சார்ஜிங் பேட், சுற்றிலும் விளக்குகள், 9-ஸ்பீக்கர் ஜேபிஎல் சவுண்ட் சிஸ்டம் மற்றும் சற்று அப்டேட் செய்யப்பட்ட பல தகவல்களை வழங்கக்கூடிய திரை போன்ற ப்ரீமியம் தரத்திலான பாகங்களை கொண்டுள்ளது.

இவற்றுடன் அடியில் கால்களை நீண்டினால் தானாக திறக்கும் பின்பக்க கதவையும் இந்த ஸ்பெஷல் எடிசன் கார் பெற்று வருகிறது. லெஜண்டரின் டாப் வேரியண்ட்கள் பயணத்தை துவங்கும்முன் காரில் உள்ள குறைகளை எச்சரிக்கும் அமைப்பு மற்றும் ஆஃப்-ரோடு திறனிற்காக ரேடார் மூலம் செயல்படும் க்ரூஸ் கண்ட்ரோலை கொண்டிருக்கலாம்.

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு அதே 2.8 லிட்டர் டீசல் என்ஜின் அப்டேட் வெர்சனாக வழங்கப்படவுள்ளது. தற்சமயம் இந்தியாவில் ஃபார்ச்சூனரில் வழங்கப்படும் இந்த டீசல் என்ஜின் லெஜண்டரில் அதிகப்பட்சமாக 204 பிஎஸ் மற்றும் 500 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக வழங்கப்படவுள்ளது.

அதிர்வையும், இரைச்சலையும் குறைவாக வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இதே அப்டேட் செய்யப்பட்ட என்ஜின்தான் ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட்டிலும் பொருத்தப்படவுள்ளது. ஃபார்ச்சூனரின் எக்ஸ்ஷோரூம் விலை தற்சமயம் ரூ.28.66 லட்சத்தில் இருந்து ரூ.34.43 லட்சம் வரையில் உள்ளது.

அதுவே டீலர்ஷிப்களில் ஏற்கனவே முன்பதிவு துவங்கப்பட்டுவிட்ட இதன் ஃபேஸ்லிஃப்ட் வெர்சனின் விலை ரூ.38 லட்சத்திற்கும் அதிகமாக நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது. டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு போட்டியாக ஃபோர்டு எண்டேவியர், எம்ஜி க்ளோஸ்டர், ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ், மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 உள்ளிட்டவை உள்ளன.