2020 தார் மாடலை தொடர்ந்து புதிய தலைமுறை எக்ஸ்யூவி500-ன் அறிமுகத்தில் தீவிரம் காட்டும் மஹிந்திரா...

மஹிந்திரா எக்ஸ்யூவி500 மாடலின் புதிய தலைமுறை கார் மிக நெருக்கமாக சோதனை ஓட்டத்தின்போது அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள ஸ்பை படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

2020 தார் மாடலை தொடர்ந்து புதிய தலைமுறை எக்ஸ்யூவி500-ன் அறிமுகத்தில் தீவிரம் காட்டும் மஹிந்திரா...

மஹிந்திரா & மஹிந்திரா க்ரூப் அடுத்ததாக புதிய தலைமுறை தார் மாடலை அடுத்த அக்டோபர் மாதம் 2ஆம் தேதி காந்தி6 ஜெயந்தியை முன்னிட்டு அறிமுகப்படுத்தவுள்ளது. இதனை தொடர்ந்து இரண்டாம் தலைமுறை எக்ஸ்யூவி500 மற்றும் ஸ்கார்பியோ மாடல்கள் வெளிவரவுள்ளன.

2020 தார் மாடலை தொடர்ந்து புதிய தலைமுறை எக்ஸ்யூவி500-ன் அறிமுகத்தில் தீவிரம் காட்டும் மஹிந்திரா...

இதனால் இப்போதில் இருந்தே இவை இரண்டும் சோதனைகளில் உட்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த வகையில் தான் தற்போது புதிய தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500 மாடலின் மாதிரி கார் ஒன்று சோதனை ஓட்டத்தின்போது மிக நெருக்கமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து காடிவாடி செய்திதளம் வெளியிட்டுள்ள ஸ்பை படங்களில் சோதனை கார் முழுவதும் மறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் புதிய தலைமுறைக்காக டிசைனில் மஹிந்திரா நிறுவனம் கொண்டுவந்துள்ள சில அப்டேட்கள் நமக்கு தெளிவாக தெரிகின்றன.

2020 தார் மாடலை தொடர்ந்து புதிய தலைமுறை எக்ஸ்யூவி500-ன் அறிமுகத்தில் தீவிரம் காட்டும் மஹிந்திரா...

இதன்படி புதிய வடிவத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள முன்புற பகுதி காருக்கு நிமிர்ந்த தோற்றத்தை வழங்குகிறது. மஹிந்திராவின் லோகோ செங்குத்தாக பல ஸ்லாட்களுடன் உள்ள க்ரில்லின் மேற்புறத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த சோதனை காரில் ஹெட்லேம்ப் தற்காலிகமாகவே பொருத்தப்பட்டுள்ளன.

2020 தார் மாடலை தொடர்ந்து புதிய தலைமுறை எக்ஸ்யூவி500-ன் அறிமுகத்தில் தீவிரம் காட்டும் மஹிந்திரா...

அதாவது இதில் உள்ள ஹெட்லேம்ப் விற்பனைக்கு வராது. ரீ-ஸ்டைலில் உள்ள ஹெட்லேம்ப் க்ளஸ்ட்டரில் எக்ஸ்யூவி300 காருக்கு ஒத்த புதிய எல்இடி விளக்குகளை பெற்றுவரும் புதிய எக்ஸ்யூவி500-ல் முன்புற பம்பர் மற்றும் மைய காற்று ஏற்பானையும் புதியதாக எதிர்பார்க்கலாம்.

2020 தார் மாடலை தொடர்ந்து புதிய தலைமுறை எக்ஸ்யூவி500-ன் அறிமுகத்தில் தீவிரம் காட்டும் மஹிந்திரா...

வெளிப்புறத்தில் புதிய பொனெட் வடிவம், டைமண்ட் கட் அலாய் சக்கரங்கள், பறிப்பு வகை கதவு ஹேண்டில்கள், ரீடிசைனில் டெயில்கேட் சற்று உயரமாக பொருத்தப்பட்ட நிறுத்து விளக்கு, சுறாவின் துடுப்பு வடிவில் ஆண்டெனா, திருத்தியமைக்கப்பட்ட எல்இடி டெயில்லேம்ப்கள் மற்றும் பின்பக்க பம்பர் உள்ளிட்டவை கவனிக்கத்தக்க அப்டேட்களாக உள்ளன.

2020 தார் மாடலை தொடர்ந்து புதிய தலைமுறை எக்ஸ்யூவி500-ன் அறிமுகத்தில் தீவிரம் காட்டும் மஹிந்திரா...

ஹெட்லேம்ப்-ஐ போல் டெயில்லேம்ப்களும் நிரத்தரமானதாக இந்த சோதனை கார் கொண்டிருக்கவில்லை. அவற்றின் வடிவம் இன்னமும் ரகசியமாகவே காக்கப்படுகிறது. உட்புறத்தில் புதிய டிசைனில் டேஸ்போர்டு உடன் பொத்தான்களின் எண்ணிக்கையை தயாரிப்பு நிறுவனம் குறைத்திருக்கும் என தெரிகிறது.

2020 தார் மாடலை தொடர்ந்து புதிய தலைமுறை எக்ஸ்யூவி500-ன் அறிமுகத்தில் தீவிரம் காட்டும் மஹிந்திரா...

இயக்க ஆற்றலுக்கு தற்போதைய 2.2 லிட்டர் 4-சிலிண்டர் டர்போசார்ஜ்டு டீசல் என்ஜினை அப்படியே பிஎஸ்6 தரத்தில் பெறும் 2021 எக்ஸ்யூவி500 மாடல் புதியதாக 2.0 லிட்டர் எம்ஸ்டாலியன் 4-சிலிண்டர் டர்போசார்ஜ்டு & நேரடி-இன்ஜெக்‌ஷன் பெட்ரோல் என்ஜினை ஏற்கவுள்ளது.

2020 தார் மாடலை தொடர்ந்து புதிய தலைமுறை எக்ஸ்யூவி500-ன் அறிமுகத்தில் தீவிரம் காட்டும் மஹிந்திரா...

இந்த டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 190 பிஎச்பி மற்றும் 380 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இவற்றுடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்படலாம்.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Next-Gen Mahindra XUV500 Spied Up Close; Launch In Early 2021
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X