நிஸானின் புதிய முழு-எலக்ட்ரிக் எஸ்யூவி கார்... உலகளாவிய அறிமுக தேதி அறிவிப்பு...

நிஸான் நிறுவனத்தின் புதிய முழு-எலக்ட்ரிக் எஸ்யூவி மாடலின் உலகளாவிய அரங்கேற்றம் வருகிற ஜூலை 15ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆரியா என்ற பெயரில் வெளிவரவுள்ள இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி காரை பற்றிய முழு விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

நிஸானின் புதிய முழு-எலக்ட்ரிக் எஸ்யூவி கார்... உலகளாவிய அறிமுக தேதி அறிவிப்பு...

2019 டோக்கியோ மோட்டார் கண்காட்சியில் இதே பெயரில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த கான்செட் மாடலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு வரும் இந்த எலக்ட்ரிக் காரை பற்றிய விபரங்கள் பெரிய அளவில் தற்போதைக்கு இல்லை.

நிஸானின் புதிய முழு-எலக்ட்ரிக் எஸ்யூவி கார்... உலகளாவிய அறிமுக தேதி அறிவிப்பு...

இருப்பினும் முன்னதாக வெளியாகி இருந்த டீசர் படங்கள் கான்செப்ட் மாடலில் இருந்து தான் இந்த கார் எதிர்கால டிசைன் பாகங்களையும் ஸ்டைலிங் அமைப்புகளையும் பெற்றிருக்கும் என்பதை வெளிப்படுத்தி இருந்தன. ஆரியா எலக்ட்ரிக் எஸ்யூவி கார் முற்றிலும் புதிய எலக்ட்ரிக் வாகனங்களுக்கான ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

நிஸானின் புதிய முழு-எலக்ட்ரிக் எஸ்யூவி கார்... உலகளாவிய அறிமுக தேதி அறிவிப்பு...

இதே ப்ளாட்ஃபாரத்தை அடிப்படையாக கொண்டு தான் ரெனால்ட்-நிஸான்-மிட்சுபிஷி கூட்டணியின் எதிர்கால தயாரிப்புகளும் தோற்றத்தையும் தொழிற்நுட்பங்களையும் பெறவுள்ளன. இது நிஸானின் ப்ரோபைலட் 2.0 அமைப்பின் கீழ் சில தன்னியக்க தொழில்நுட்பங்களையும் ஒருங்கிணைக்கவுள்ளது.

நிஸானின் புதிய முழு-எலக்ட்ரிக் எஸ்யூவி கார்... உலகளாவிய அறிமுக தேதி அறிவிப்பு...

இயக்கத்திற்கு ஆரியா இவி காரில் நீண்ட ரேஞ்சை வழங்கக்கூடிய ட்யூல்-மோட்டார் ஆல்-வீல்-ட்ரைவ் செட்அப் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இதனுடன் லிக்யூடு-கூல்டு பேட்டரி இணைக்கப்பட்டிருக்கலாம்.

நிஸானின் புதிய முழு-எலக்ட்ரிக் எஸ்யூவி கார்... உலகளாவிய அறிமுக தேதி அறிவிப்பு...

இந்த பேட்டரி குறைந்தது 100- 150 கிலோ வாட்ஸ் சார்ஜிங் திறனை கொண்டிருக்கும் எனவும் வதந்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இது நம்பும்படியாகவே உள்ளது. இவை தவிர்த்து ஆரியா எலக்ட்ரிக் காரை பற்றிய மற்ற தகவல்கள் இதன் உலகளாவிய அறிமுகத்திற்கு முன்னதாக வெளியிடப்படலாம்.

நிஸானின் புதிய முழு-எலக்ட்ரிக் எஸ்யூவி கார்... உலகளாவிய அறிமுக தேதி அறிவிப்பு...

இதற்கிடையில் நிஸான் நிறுவனம் புதிய மேக்னைட் காம்பெக்ட்-எஸ்யூவி மாடலை வருகிற ஜூலை 16ஆம் தேதி உலகளவில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இந்தியாவில் இந்த காம்பெக்ட் எஸ்யூவி கார் இந்த வருட அக்டோபர் மாதத்தில் இருந்து அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள்ளாக அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிஸானின் புதிய முழு-எலக்ட்ரிக் எஸ்யூவி கார்... உலகளாவிய அறிமுக தேதி அறிவிப்பு...

இந்தியாவில் புதிய ஆரியா எலக்ட்ரிக் மாடலை வரும் ஆண்டுகளில் அறிமுகப்படுத்தும் திட்டத்தில் நிஸான் நிறுவனம் இருப்பது போலவே தெரிகிறது. ஏனெனில் நமது நாட்டில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான மார்க்கெட் விரிவடைந்து வருகிறது. ஆனால் எப்படியிருந்தாலும் இந்நிறுவனத்தின் லீஃப் இவி கார் நமது நாட்டு டீலர்ஷிப்களுக்கு வந்த பின்பே இந்த புதிய எலக்ட்ரிக் எஸ்யூவி மாடலின் அறிமுகம் இருக்கும்.

Most Read Articles

மேலும்... #நிஸான் #nissan
English summary
Production-ready Nissan Ariya EV to break cover on 15 July
Story first published: Friday, July 3, 2020, 7:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X