நிஸான் கிக்ஸ் எஸ்யூவி காரை வாங்குவதற்கு இதுவே சரியான நேரம்!! ரூ.55,000 வரையில் பணத்தை சேமிக்கலாம்

தீபாவளிக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் நிஸான் இந்தியா நிறுவனம் அதன் பிஎஸ்6 கிக்ஸ் எஸ்யூவி காருக்கு சலுகைகளை அறிவித்துள்ளது. இதுபற்றிய கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

நிஸான் கிக்ஸ் எஸ்யூவி காரை வாங்குவதற்கு இதுவே சரியான நேரம்!! ரூ.55,000 வரையில் பணத்தை சேமிக்கலாம்

கிக்ஸிற்கு ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனமான நிஸான் அறிவித்துள்ள இந்த சலுகையின்படி, இந்த எஸ்யூவி காரை இந்த பண்டிகை காலத்தில் வாங்குவோர் ரூ.55,000 வரையிலான பணத்தை சேமிக்க முடியும்.

நிஸான் கிக்ஸ் எஸ்யூவி காரை வாங்குவதற்கு இதுவே சரியான நேரம்!! ரூ.55,000 வரையில் பணத்தை சேமிக்கலாம்

அதவாது எக்ஸ்சேன்ஞ் போனஸாக அதிகப்பட்சமாக ரூ.40,000 வரையிலும், பண்டிகை காலத்திற்கான போனஸாக ரூ.15,000 வரையிலும் பெறலாம். இந்த சலுகை வரும் நவம்பர் 15ஆம் தேதி வரையில் மட்டுமே வழங்கப்படவுள்ளது.

நிஸான் கிக்ஸ் எஸ்யூவி காரை வாங்குவதற்கு இதுவே சரியான நேரம்!! ரூ.55,000 வரையில் பணத்தை சேமிக்கலாம்

மேலும் இந்த சலுகை வேரியண்டிற்கு வேரியண்ட்டும், வாங்கப்படும் நகரத்திற்கு நகரமும் வேறுபடலாம். ஒரே ஒரு நிஸான் காராக இந்த சலுகையினை பெறும் கிக்ஸ் எஸ்யூவி பிஎஸ்6 கார் எக்ஸ்எல், எக்ஸ்வி, எக்ஸ்வி ப்ரீமியம் மற்றும் எக்ஸ்வி ப்ரீமியம் (O) என்ற நான்கு விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது.

நிஸான் கிக்ஸ் எஸ்யூவி காரை வாங்குவதற்கு இதுவே சரியான நேரம்!! ரூ.55,000 வரையில் பணத்தை சேமிக்கலாம்

ஸ்போர்டியான தோற்றத்தில் வழங்கப்படும் இந்த எஸ்யூவி கார் வெளிப்புறத்தில் நேர்த்தியான எல்இடி ஹெட்லேம்ப்களுடன் க்ரில், லைன்களுடன் பருத்த பொனெட், சில்வர் நிறத்தில் முன்பக்க சறுக்கு தட்டு & மேற்கூரை தண்டவாளங்கள், கருப்பு நிறத்தில் B-பில்லர்கள், சக்கர வளைவுகள், இண்டிகேட்டருடன் பின்புறம் பார்க்க உதவும் பக்கவாட்டு கண்ணாடிகள் மற்றும் அலாய் சக்கரங்கள் உள்ளிட்டவற்றை கொண்டுள்ளது.

நிஸான் கிக்ஸ் எஸ்யூவி காரை வாங்குவதற்கு இதுவே சரியான நேரம்!! ரூ.55,000 வரையில் பணத்தை சேமிக்கலாம்

உள்ளே இந்த எஸ்யூவி காரில் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு வசதியுடன் 8 இன்ச்சில் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், கண்ட்ரோல்களுடன் ஸ்டேரிங் சக்கரம், வாகன நிலைத்தன்மையை பராமரிக்கும் அமைப்பு, எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ட்ராக்‌ஷன் கண்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், க்ரூஸ் கண்ட்ரோல் போன்றவை வழங்கப்படுகின்றன.

நிஸான் கிக்ஸ் எஸ்யூவி காரை வாங்குவதற்கு இதுவே சரியான நேரம்!! ரூ.55,000 வரையில் பணத்தை சேமிக்கலாம்

நிஸான் கிக்ஸிற்கு 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ற இரு என்ஜின் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன. இதில் டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 154 பிஎச்பி பவரையும், 254 என்எம் டார்க் திறனையும், பெட்ரோல் என்ஜின் 105 பிஎச்பி மற்றும் 142 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டவைகளாக உள்ளன.

நிஸான் கிக்ஸ் எஸ்யூவி காரை வாங்குவதற்கு இதுவே சரியான நேரம்!! ரூ.55,000 வரையில் பணத்தை சேமிக்கலாம்

ட்ரான்ஸ்மிஷன் பணியினை கவனிக்க 5-ஸ்பீடு மேனுவல், 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி ஆட்டோமேட்டிக் என்ற மூன்று கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. ரெனால்ட் டஸ்டர், கியா செல்டோஸ் மற்றும் ஹூண்டாய் க்ரெட்டாவிற்கு விற்பனையில் போட்டியாக விளங்கும் நிஸான் கிக்ஸின் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.9.49 லட்சமாகவும், அதிகப்பட்சமாக இந்த கார் ரூ.14.15 லட்சத்திலும் கிடைக்கிறது.

Most Read Articles

மேலும்... #நிஸான் #nissan
English summary
Nissan Kicks Diwali Discount Offers.
Story first published: Sunday, November 8, 2020, 13:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X