Just In
- 5 hrs ago
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- 5 hrs ago
இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! அட... அறிமுகம் எப்போ தாங்க?
- 6 hrs ago
சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன!! ஆனா பெரிய அளவில் இல்லைங்க...
- 7 hrs ago
விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!
Don't Miss!
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Movies
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வெறும் 8 வருடங்களில் இவ்வளவு மாற்றமா!! நிஸானின் புதிய நோட், ஜப்பானில் விரைவில் அறிமுகம்
நிஸான் நிறுவனம் அதன் டிசைன் மாற்றப்பட்ட நோட் காம்பெக்ட் காரின் அனைத்து-சக்கர-ட்ரைவ் மாடலை அதன் தாயகமான ஜப்பானில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய ஆல்-வீல்-ட்ரைவ் நிஸான் காரை பற்றிய கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

நிஸான் நோட் காரின் இரு-சக்கர ட்ரைவ் வெர்சன் கடந்த 2020 நவம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது இந்த நிஸான் காரின் 4-சக்கர ட்ரைவ் வெர்சன் உள்நாட்டு சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த புதிய வெர்சன் முன்பக்கத்தில் ஒன்று, பின்பக்கத்தில் ஒன்று என இரு எலக்ட்ரிக் மோட்டார்கள் உடன் ஹைப்ரீட் இ-பவர் தொழிற்நுட்பத்தை பெற்றுள்ளது. இவை ஓட்டுனருக்கு மேம்படுத்தப்பட்ட கண்ட்ரோலையும், ஆக்ஸலரேஷனையும் வழங்கும்.

பின்பக்கத்தில் வழக்கப்பட்டுள்ள எலக்ட்ரிக் மோட்டார் ஆற்றல்மிக்க ஸ்டார்டிற்காகவும், பனி மற்றும் உலர்ந்த சாலைகளில் மிட்-ஸ்பீடு ஆக்ஸலரேஷனிற்காகவும் அதிக ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் வருகிற 2021ஆம் ஆண்டின் துவக்கத்தில் இருந்து விற்பனையை துவங்கவுள்ள நோட் அனைத்து-சக்கர ட்ரைவ் வெர்சன் வளைவுகளில் துல்லியமான திருப்பம் மற்றும் மென்மையான ஆக்ஸலரேஷன் குறைப்பை வழங்கும்.

இதற்காக அனைத்து நான்கு சக்கரங்களிலும் ரீஜெனரேட்டிவ் ப்ரேக்கிங் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இரு-சக்கர ட்ரைவ் மாடலை போன்று, புதிய அனைத்து-சக்கர ட்ரைவ் வெர்சனிலும் இ-பவர் ஹைப்ரீட் தொழிற்நுட்பம் ஆனது பெட்ரோல் என்ஜினை பயன்படுத்தி சார்ஜ் ஏற்றி கொள்ளும்.

மேலும் இந்த புதிய நிஸான் நோட் காரில் வழங்கப்பட்டுள்ள புதிய தானியங்கி ட்ரைவ் செயல்பாடுகள் காரின் நாவிகேஷன் சிஸ்டத்தை பயன்படுத்தி வளைவுகளில் மெதுவாக காரை திருப்புவதற்கு ஓட்டுனருக்கு உதவியாக இருக்கும்.

பிரெஞ்சு நாட்டை சேர்ந்த கூட்டணி நிறுவனமான ரெனால்ட் ஆர்எஸ்-இன் ப்ளாட்ஃபாரத்தை பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ள புதிய நிஸான் நோட், டொயோட்டா யாரிஸ் மற்றும் ஹோண்டாவின் ஃபிட் கார்களுக்கு போட்டியாக விளங்கவுள்ளது.