Just In
- 5 hrs ago
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- 6 hrs ago
சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி!! சொந்தமாக்கி கொள்ள தயாரா?!
- 7 hrs ago
க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு? விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...
- 8 hrs ago
உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 28.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் சில நிதி இழப்புகளை சந்திக்க நேரிடுமாம்….
- News
ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ
- Movies
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
முண்டியடிக்கும் மக்கள் கூட்டம்! 15 நாட்களுக்குள் கிடைத்த அபரீதமான புக்கிங்... எவ்ளோ தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க!
விற்பனைக்கு அறிமுகமாகி 15 நாட்களாவதற்குள் நிஸான் மேக்னைட் கார் எக்கசக்கமான புக்கிங் எண்ணிக்கையைப் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

நிஸான் நிறுவனம் டிசம்பர் 2ம் தேதி அன்று அதன் புதுமுக காரான மேக்னைட் எனும் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இன்றுடன் இக்கார் விற்பனைக்கு வந்து 15 நாட்கள் மட்டுமே ஆகின்றன. இதற்குள்ளாக அதிக எண்ணிக்கையில் மேக்னைட் காருக்கான புக்கிங்கைப் பெற்றிருப்பதாக நிஸான் தற்போது தகவல்கள் வெளியிட்டுள்ளது.

நேற்றைய தினத்தின்படி ஒட்டுமொத்தமாக 10 ஆயிரம் யூனிட் நிஸான் மேக்னைட் கார்களுக்கான புக்கிங்கை அது பெற்றிருப்பதாக கூறியிருக்கின்றது. விற்பனைக்கு வந்த 14 நாட்களுக்குள்ளாகவே பெற்ற புக்கிங் எண்ணிக்கை இதுவாகும். இதனால், ஒட்டுமொத்த இந்திய வாகனத்துறையுமே தற்போது ஆச்சரியத்தில் மூழ்கியிருக்கின்றது.

புக்கிங் அதிகரிப்பால் இக்காருக்கான காத்திருப்பு காலமும் 3 மாதங்களாக அதிகரித்திருக்கின்றது. ஆகையால், இனி காரை புக் செய்வோர் குறைந்தது மூன்று மாதங்கள் வரையாவது காத்திருந்தே மேக்னைட் காரை பெற வேண்டும் என்ற சூழல் உருவாகியுள்ளது.

இக்காருக்கு ஆரம்ப விலையாக ரூ. 4.99 லட்சத்தை நிஸான் நிறுவனம் நிர்ணயித்துள்ளது. காரின் அறிமுகத்தை முன்னிட்டு இந்த குறைந்தபட்ச விலையை அது நிர்ணயித்துள்ளது. ஆகையால், வருகின்ற ஜனவரி 1ம் தேதி முதல் இதன் விலை கணிசமாக உயர இருக்கின்றது.

இருப்பினும், முன்னதாக நிஸான் வெளியிட்ட தகவலின்படி, மேக்னைட் மாடலின் ஆரம்ப நிலை வேரியண்டைக் காட்டிலும் உயர்நிலை வேரியண்டுகளுக்கே நல்ல வரவேற்பு கிடைத்து வருவது தெரியவந்தது. தற்போது எக்ஸ்இ, எக்ஸ்எல், எக்ஸ்வி மற்றும் எக்ஸ்வி பிரீமியம் ஆகிய நான்கு விதமான ட்ரிம்களில் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இவற்றில் 20 விதமான தேர்வுகளை நிஸான் வழங்குவது குறிப்பிடத்தகுந்தது.

பன்முக வசதிகளுடன் உயர்நிலை தேர்வாக கிடைக்கும் நிஸான் மேக்னைட் காரின் விலை ரூ. 9.59 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தற்போது விற்பனையில் இருக்கும் ஹூண்டாய் வெனியூ, கியா சொனெட் மற்றும் டாடா நெக்ஸான் ஆகிய கார்களைக் காட்டிலும் குறைந்த விலை ஆகும்.

எனவேதான் இக்காருக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்க ஆரம்பித்துள்ளது. இதனால், காத்திருப்பு காலமும் அதிகரித்துள்ளது. 15 நாட்களுக்குள்ளாக 10 ஆயிரம் புக்கிங்கைப் பெற்றிருப்பது நிஸான் நிறுவனத்திற்கு ஆச்சரியத்தை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. ஆகையால், ஒரு சிலர் டீலர்கள் இதனை கேக் வெட்டி கொண்டாடி மகிழத் தொடங்கியிருக்கின்றனர்.

இந்த கார் அறிமுகமான வெறும் ஐந்தே நாட்களில் 5 ஆயிரம் அலகுகளுக்கான (யூனிட்டுகள்) புக்கிங்கைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தகுந்தது. இதில், 60 சதவீதம் உயர்நிலை வேரியண்டிற்கு கிடைத்த புக்கிங் என்பது குறிப்பிடத்தகுந்தது. நிஸான் மேக்னைட் இரு விதமான பெட்ரோல் எஞ்ஜின் தேர்வில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இதில், 1.0 லிட்டர் நேட்சுரல்லி அஸ்பயர்ட் தேர்வில் கிடைக்கும் பெட்ரோல் எஞ்ஜின் அதிகபட்சமாக 71 பிஎச்பி மற்றும் 96 என்எம் டார்க்கை வெளியேற்றக் கூடியது. இதேபோன்று, 1.0 லிட்டர் எச்ஆர்ஓ டர்போசார்ஜட் தேர்வில் கிடைக்கும் பெட்ரோல் எஞ்ஜின் 99 பிஎச்பி மற்றும் 160 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டுள்ளது.

இவ்விரு எஞ்ஜின்களும் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி ஆட்டோமேட்டிக் வேகக்கட்டுப்பாடு கருவி தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இத்துடன், எண்ணற்ற தொழில்நுட்ப வசதிகளை கட்டணத்தின் அடிப்படையில் சிறப்பு பேக்கேஜாக நிஸான் இக்காருக்கு வழங்குகின்றது.