நிஸான் மேக்னைட்டின் முன்பதிவுகள் துவக்கம்? அதுவும் வெறும் ரூ.11,000 முன்பதிவு தொகையுடனா!

நிஸான் மேக்னைட்டின் முன்பதிவுகள் அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

நிஸான் மேக்னைட்டின் முன்பதிவுகள் துவக்கம்? அதுவும் வெறும் ரூ.11,000 முன்பதிவு தொகையுடனா!

அடுத்த சில வாரங்களில் புதிய காம்பெக்ட் எஸ்யூவி காரான மேக்னைட்டின் எக்ஸ்ஷோரூம் விலையினை நிஸான் நிறுவனம் வெளியிடவுள்ளது. இதனை நிஸான் நிறுவனமே அதன் சமூக வலைத்தள பக்கங்களில் உறுதிப்படுத்தி இருந்தது.

நிஸான் மேக்னைட்டின் முன்பதிவுகள் துவக்கம்? அதுவும் வெறும் ரூ.11,000 முன்பதிவு தொகையுடனா!

இந்த நிலையில் தற்போது இந்த காம்பெக்ட் எஸ்யூவி காருக்கான முன்பதிவுகள் ரூ.11,000-ல் இருந்து ரூ.25,000 வரையிலான முன் தொகைகளுடன் அதிகாரப்பூர்வமற்ற முறையில் துவங்கப்பட்டுள்ளதாக நிஸான் டீலர்களின் மூலம் தெரியவந்துள்ளது.

நிஸான் மேக்னைட்டின் முன்பதிவுகள் துவக்கம்? அதுவும் வெறும் ரூ.11,000 முன்பதிவு தொகையுடனா!

ஆனால் எப்படியிருந்தாலும் மேக்னைட்டிற்கான முன்பதிவுகளை நிஸான் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக இந்த நவம்பர் மாதத்திற்குள் துவங்கிவிடும். முன்னதாக மேக்னைட்டின் ஆரம்ப விலை ரூ.5.50 லட்சத்தில் நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது என்று கூறியிருந்தோம். இந்த வகையில் இதன் டாப் எக்ஸ்வி ப்ரீமியம் சிவிடி வேரியண்ட் ரூ.9.55 லட்சத்தில் விலையினை பெறலாம் எனவும் கூறினோம்.

நிஸான் மேக்னைட்டின் முன்பதிவுகள் துவக்கம்? அதுவும் வெறும் ரூ.11,000 முன்பதிவு தொகையுடனா!

எக்ஸ்இ, எக்ஸ்எல், எக்ஸ்வி ஹை மற்றும் எக்ஸ்வி ப்ரீமியம் என்ற நான்கு விதமான வேரியண்ட்களில் சந்தைப்படுத்தப்படவுள்ள இந்த காம்பெக்ட் எஸ்யூவி காரின் எக்ஸ்வி மற்றும் எக்ஸ்வி ப்ரீமியம் வேரியண்ட்களில் கூடுதலாக தொழிற்நுட்ப தொகுப்பும் கிடைக்கும். ஆனால் அதற்கு நீங்கள் ரூ.25,000-ல் இருந்து ரூ.30,000 வரையில் செலவு செய்ய வேண்டியிருக்கும்.

நிஸான் மேக்னைட்டின் முன்பதிவுகள் துவக்கம்? அதுவும் வெறும் ரூ.11,000 முன்பதிவு தொகையுடனா!

விரைவில் விற்பனைக்கு வரவுள்ள நிஸான் மேக்னைட்டில் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் 72 எச்பி பவரை வெளிப்படுத்தக்கூடிய 1.0 லிட்டர் என்ஜின், 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி ஆட்டோமேட்டிக் தேர்வுடன் 100 எச்பி மற்றும் 160 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய 1.0 லிட்டர் டர்போ என்ஜின் என்ற இரு பெட்ரோல் என்ஜின்கள் தேர்வுகளாக வழங்கப்படவுள்ளன.

நிஸான் மேக்னைட்டின் முன்பதிவுகள் துவக்கம்? அதுவும் வெறும் ரூ.11,000 முன்பதிவு தொகையுடனா!

மற்றப்படி டீசல் என்ஜின் தேர்வு மேக்னைட்டில் கொடுக்கப்பட உள்ளது போல் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் ரூ.5.50 லட்சம் என்ற ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை நிச்சயம் ஹூண்டாய் வென்யூ, மஹிந்திரா எக்ஸ்யூவி300, டாடா நெக்ஸான், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் சமீபத்திய அறிமுகங்களான கியா சொனெட் மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் கார்களின் விற்பனைக்கு பெரிய தொல்லையாக இருக்கும்.

தற்போது அதிகாரப்பூர்வமற்ற முறையில் முன்பதிவுகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் அதிகாரப்பூர்வமாக நிஸான் நிறுவனம் துவங்கும் வரை காத்திருப்பதே நல்லது.

Most Read Articles

மேலும்... #நிஸான் #nissan
English summary
New Nissan Magnite bookings starts India launch soon.
Story first published: Thursday, November 12, 2020, 17:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X