Just In
- 1 hr ago
ஐரோப்பிய கார்களின் தரத்தில் எக்ஸ்எல்5 காரை கொண்டுவரும் மாருதி!! இந்த ஒரு விஷயம் போதுமே..!
- 3 hrs ago
இந்தியாவில் அறிமுகமாகும் அடுத்த ஆடி கார் இதுதான் போல, 2021 க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்!! புனேவில் சோதனை ஓட்டம்
- 5 hrs ago
மீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கிய புதிய கிளாசிக் 350... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் எக்ஸாஸ்ட்...
- 5 hrs ago
அடேங்கப்பா.. 2021ஜீப் காம்பஸில் இவ்வளவு வசதிகளா?! அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பாக இணையத்தில் கசிந்த விபரம்
Don't Miss!
- News
அமெரிக்க கேபிடல் கலவரத்தன்று புடினுடன் டிரம்ப் பேசியிருப்பார்... அலைபேசி பதிவை பார்க்க ஆவல் -ஹிலாரி
- Finance
பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Movies
நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே!
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Lifestyle
'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மிக குறைவான விலையில் விற்பனைக்கு வந்த நிஸான் மேக்னைட்... இந்தியாவில் டெலிவரி பணிகள் தொடங்கியது...
நிஸான் மேக்னைட் காரை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி கொடுக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மேக்னைட் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி காரை நிஸான் நிறுவனம் கடந்த டிசம்பர் 2ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்தது. மிகவும் சவாலான விலை நிர்ணயம், ஏராளமான வசதிகள் உள்ளிட்ட காரணங்களால் நிஸான் மேக்னைட் காருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இந்திய சந்தையில் நிஸான் நிறுவனத்திற்கு மேக்னைட் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி வைத்துள்ளது என்றும் கூட சொல்லலாம்.

டிசம்பர் 2ம் தேதி விற்பனைக்கு வந்த நிலையில், வெறும் 15 நாட்களில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகளை நிஸான் மேக்னைட் குவித்தது. இதன் காரணமாக ஒரு சில வேரியண்ட்களுக்கான காத்திருப்பு காலம் 6 மாதங்களாக உயர்ந்தது. தற்போது நிஸான் மேக்னைட் காரை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

4.99 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) என்ற ஆரம்ப விலையில் வரும் டிசம்பர் 31ம் தேதி வரை மட்டுமே வாங்க முடியும் என்பதால், அதுவரை நிஸான் மேக்னைட் காருக்கு இன்னும் முன்பதிவுகள் பெரும் அளவில் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அறிமுக சலுகை விலை என்பது குறிப்பிடத்தக்கது. வரும் ஜனவரி 1ம் தேதி முதல் விலை உயரவுள்ளது.

1.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் யூனிட் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் யூனிட் என மொத்தம் இரண்டு பெட்ரோல் இன்ஜின் தேர்வுகளுடன் நிஸான் மேக்னைட் காம்பேக்ட் எஸ்யூவி கிடைக்கிறது. இதில், நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 71 ஹெச்பி பவரையும், 96 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

அதே சமயம் டர்போ பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 99 ஹெச்பி பவரையும், 160 என்எம் டார்க் திறனையும் (சிவிடி-யில் 152 என்எம்) உற்பத்தி செய்ய கூடியது. 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஸ்டாண்டர்டாக வழங்கப்படும் நிலையில், டர்போ பெட்ரோல் இன்ஜின் சிவிடி தேர்வையும் பெற்றுள்ளது. இரண்டு இன்ஜின் தேர்வுகள் தவிர நிஸான் மேக்னைட் காரில் ஏராளமான வசதிகளும் வழங்கப்படுகின்றன.

இந்திய சந்தையில் கியா சொனெட், மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300, டொயோட்டா அர்பன் க்ரூஸர் மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் உள்ளிட்ட கார்களுடன் நிஸான் மேக்னைட் போட்டியிட்டு வருகிறது. இதுதவிர அடுத்த ஆண்டு விற்பனைக்கு எதிர்பார்க்கப்படும் ரெனால்ட் கிகர் காருக்கும் நிஸான் மேக்னைட் விற்பனையில் சவால் அளிக்கும். நிஸான் மேக்னைட் டெலிவரி தொடர்பாக Power On Wheel வெளியிட்டுள்ள வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளதால், அனைத்து நிறுவனங்களும் இந்த செக்மெண்ட்டில் போட்டி போட்டு கொண்டு பல்வேறு புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்து வருகின்றன. கடந்த சில மாதங்கள் அளவில் மட்டும் பார்த்தால், கியா சொனெட், டொயோட்டா அர்பன் க்ரூஸர், நிஸான் மேக்னைட் என மூன்று கார்கள் விற்பனைக்கு வந்துள்ளன.

இந்த வரிசையில் ரெனால்ட் கிகர் கார் மீதும் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. நிஸான் மேக்னைட் காரை போலவே, ரெனால்ட் நிறுவனமும் போட்டியாளர்களுக்கு கடுமையான சவாலை அளிக்கும் வகையில் கிகர் காம்பேக்ட் எஸ்யூவி காரின் விலையை நிர்ணயம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.