நிஸான் நிறுவனத்திற்கு கேம்-சேஞ்சர்... பொது பார்வைக்கு வந்தது மேக்னைட்... கியா சொனெட்டிற்கு சவால்

நிஸான் மேக்னைட் காம்பேக்ட் எஸ்யூவி பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

நிஸான் நிறுவனத்திற்கு கேம்-சேஞ்சர்... பொது பார்வைக்கு வந்தது மேக்னைட்... கியா சொனெட்டிற்கு சவால்

வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மேக்னைட் காரை, நிஸான் நிறுவனம் சர்வதேச அளவில் பொது பார்வைக்கு கொண்டு வந்துள்ளது. இது நிஸான் நிறுவனத்தின் புத்தம் புதிய சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார் ஆகும். இந்திய சந்தையில் நிஸான் மேக்னைட் வெகு விரைவில் விற்பனைக்கும் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

நிஸான் நிறுவனத்திற்கு கேம்-சேஞ்சர்... பொது பார்வைக்கு வந்தது மேக்னைட்... கியா சொனெட்டிற்கு சவால்

மேக்னைட் காம்பேக்ட் எஸ்யூவி, முதலில் இந்திய சந்தையில்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்பதை நிஸான் நிறுவனம் உறுதி செய்துள்ளது. அதன்பின்புதான் சர்வதேச சந்தைகளில் விற்பனைக்கு கொண்டு வரப்படும். நிஸான் நிறுவனம் இந்திய சந்தையில் முற்றிலும் புத்தம் புதிய 8 தயாரிப்புகளை அடுத்த சில ஆண்டுகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

நிஸான் நிறுவனத்திற்கு கேம்-சேஞ்சர்... பொது பார்வைக்கு வந்தது மேக்னைட்... கியா சொனெட்டிற்கு சவால்

இதில், முதலாவது தயாரிப்பாக மேக்னைட் இருக்கும். பண்டிகை காலத்தையொட்டி வருகின்ற நவம்பர் மாதம் இந்திய சந்தையில் நிஸான் மேக்னைட் காம்பேக்ட் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் நிஸான் நிறுவனம் வெளியிடவில்லை.

நிஸான் நிறுவனத்திற்கு கேம்-சேஞ்சர்... பொது பார்வைக்கு வந்தது மேக்னைட்... கியா சொனெட்டிற்கு சவால்

நிஸான் மேக்னைட் காம்பேக்ட் எஸ்யூவி காரின் தயாரிப்பு நிலை வெர்ஷனும், கான்செப்ட் மாடலும் டிசைன் அடிப்படையில் கிட்டத்தட்ட ஒன்று போலவே உள்ளன. புதிய நிஸான் மேக்னைட் கார், துள்ளலான டிசைனில் அட்டகாசமாக காட்சிக்கு வந்துள்ளது. இதன் பிரம்மாண்டமான முன் பக்க க்ரில் அமைப்பின் இருபுறமும் அடர்த்தியான க்ரோம் பட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

நிஸான் நிறுவனத்திற்கு கேம்-சேஞ்சர்... பொது பார்வைக்கு வந்தது மேக்னைட்... கியா சொனெட்டிற்கு சவால்

அத்துடன் க்ரில் அமைப்பின் பக்கவாட்டில் எல்இடி ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்களும், அதன் கீழாக 'எல்' வடிவ எல்இடி டிஆர்எல்களும் வழங்கப்பட்டுள்ளன. இந்த புத்தம் புதிய காம்பேக்ட் எஸ்யூவி காரில், ஸ்டைலான 16 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள் இடம்பெற்றுள்ளன. பின் பகுதியை பொறுத்தவரை, பூட் லிட்டின் மையப்பகுதியில், 'மேக்னைட்' லோகோ வழங்கப்பட்டுள்ளது.

நிஸான் நிறுவனத்திற்கு கேம்-சேஞ்சர்... பொது பார்வைக்கு வந்தது மேக்னைட்... கியா சொனெட்டிற்கு சவால்

நிஸான் மேக்னைட் காம்பேக்ட் எஸ்யூவி காரின் கேபின், கருப்பு வண்ணத்தில் மிக கவர்ச்சிகரமாக டிசைன் செய்யப்பட்டுள்ளது. இருக்கைகளில் சாம்பல் நிறத்தை பார்க்க முடிகிறது. இந்த காரில் தட்டையான அடிப்பாகம் கொண்ட ஸ்டியரிங் வீல் வழங்கப்பட்டுள்ளது. இதில், பல்வேறு கட்டுப்பாடுகளுக்கான கண்ட்ரோல்கள் இடம்பெற்றுள்ளன.

நிஸான் நிறுவனத்திற்கு கேம்-சேஞ்சர்... பொது பார்வைக்கு வந்தது மேக்னைட்... கியா சொனெட்டிற்கு சவால்

7 இன்ச் முழு டிஜிட்டல் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 8 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் க்ளைமேட் கண்ட்ரோல் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகளும் நிஸான் மேக்னைட் காரில் வழங்கப்பட்டுள்ளன. பின் இருக்கை பயணிகளுக்கும் ஏசி வெண்ட்கள் இடம்பெற்றுள்ளன. கூடுதல் சௌகரியத்திற்காக சென்ட்ரல் ஆர்ம்ரெஸ்ட்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

நிஸான் நிறுவனத்திற்கு கேம்-சேஞ்சர்... பொது பார்வைக்கு வந்தது மேக்னைட்... கியா சொனெட்டிற்கு சவால்

இந்த காரின் பூட் ஸ்பேஸ் 334 லிட்டர்கள். பின் வரிசை இருக்கைகளை 60:40 என்ற விகிதத்தில் மடித்து வைத்து கொண்டால், இதனை மேலும் அதிகரிக்க முடியும். நிஸான் மேக்னைட் கார், 1.0 லிட்டர் மூன்று-சிலிண்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் உடன் வருகிறது. இதனுடன் சிவிடி ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வு வழங்கப்படும்.

நிஸான் நிறுவனத்திற்கு கேம்-சேஞ்சர்... பொது பார்வைக்கு வந்தது மேக்னைட்... கியா சொனெட்டிற்கு சவால்

ஆனால் இந்த இன்ஜினின் பவர் மற்றும் டார்க் திறன் குறித்த தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இது தவிர ரெனால்ட் ட்ரைபர் காரில் வழங்கப்பட்டுள்ள 1.0 லிட்டர் இன்ஜின் நிஸான் மேக்னைட் காம்பேக்ட் எஸ்யூவியிலும் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விலை குறைந்த வேரியண்ட்களில், இந்த இன்ஜின் தேர்வு வழங்கப்படலாம்.

நிஸான் நிறுவனத்திற்கு கேம்-சேஞ்சர்... பொது பார்வைக்கு வந்தது மேக்னைட்... கியா சொனெட்டிற்கு சவால்

மேலும் இந்த இன்ஜின் உடன் மேனுவல் டிரான்ஸ்மிஷன் தேர்வு வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் மேக்னைட் காம்பேக்ட் எஸ்யூவி காரின் தொழில்நுட்ப விபரங்கள் எதையும் நிஸான் நிறுவனம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இந்திய சந்தையில் நிஸான் நிறுவனத்திற்கு மிகவும் முக்கியமான மாடல்களில் ஒன்றாக மேக்னைட் பார்க்கப்படுகிறது.

நிஸான் நிறுவனத்திற்கு கேம்-சேஞ்சர்... பொது பார்வைக்கு வந்தது மேக்னைட்... கியா சொனெட்டிற்கு சவால்

அவர்களுக்கு இது கேம்-சேஞ்சர் மாடலாக அமையலாம். இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்தவுடன், கியா சொனெட், மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஆகிய கார்களுக்கு, நிஸான் மேக்னைட் கடும் போட்டியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #நிஸான் #nissan
English summary
Nissan Magnite Compact-SUV Globally Unveiled - All Details. Read in Tamil
Story first published: Wednesday, October 21, 2020, 18:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X