சொனெட்டிற்கு போட்டியாக மலிவான விலையில் வெளிவரவுள்ள நிஸான் மேக்னைட்... காப்புரிமை படங்கள் வெளியீடு...

மிகவும் மலிவான விலையில் அடுத்த ஆண்டில் விற்பனைக்கு வரவுள்ள நிஸான் மேக்னைட் எஸ்யூவி மாடலின் காப்புரிமை படங்கள் இணையத்தில் கசிந்துள்ளன. அவற்றின் மூலம் தெரிய வந்துள்ள தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

சொனெட்டிற்கு போட்டியாக மலிவான விலையில் வெளிவரவுள்ள நிஸான் மேக்னைட்... காப்புரிமை படங்கள் வெளியீடு...

நிஸானின் லைன்-அப்பில் கிக்ஸ் மாடலுக்கு கீழே நிலை நிறுத்தப்படுவதற்காக மேக்னைட் சப்-4 மீட்டர் எஸ்யூவி கார் தயாராகி வருகிறது. அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த எஸ்யூவி கார் மேலே கூறியதுபோல் மிகவும் மலிவான விலை கொண்ட நிஸான் காராக விற்பனை செய்யப்படவுள்ளது.

சொனெட்டிற்கு போட்டியாக மலிவான விலையில் வெளிவரவுள்ள நிஸான் மேக்னைட்... காப்புரிமை படங்கள் வெளியீடு...

இதற்கிடையில் தற்போது கார் இண்டெலிஜன்ஸ் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலமாக இணையத்தில் கசிந்துள்ள காப்புரிமை படங்கள், அதிகளவில் வளைந்த பாகங்கள் உடன் புதிய மேக்னைட் மாடல் உருவாக்கப்பட்டு வருவதை வெளிக்காட்டுகின்றன. இது உண்மையில் இளம் தலைமுறையினரை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சொனெட்டிற்கு போட்டியாக மலிவான விலையில் வெளிவரவுள்ள நிஸான் மேக்னைட்... காப்புரிமை படங்கள் வெளியீடு...

இதன் வெளிப்புற டிசைன் 2015 டோக்கியோ கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட டட்சன் கோ-க்ராஸ் கான்செப்ட்டில் இருந்து எடுக்கப்பட்டதுபோல் உள்ளது. டட்சன் கோ-க்ராஸ் மிகவும் குறைவான விலையில் தயாரிக்க திட்டமிடப்பட்ட எஸ்யூவி காராகும்.

சொனெட்டிற்கு போட்டியாக மலிவான விலையில் வெளிவரவுள்ள நிஸான் மேக்னைட்... காப்புரிமை படங்கள் வெளியீடு...

ஆனால் மோட்டார் கண்காட்சியில் பார்வையாளர்களின் கவனத்தை பெறததால் தயாரிப்பு பணிகள் வரை கொண்டு செல்லப்படவில்லை. ஆனால் நிஸான் நிறுவனம் மேக்னைட்டை அதிக நாட்டு சந்தைகளுக்கு கொண்டுசென்று இவ்வாறான நிலை வராமல் பார்த்து கொள்ள முயற்சிக்கும்.

சொனெட்டிற்கு போட்டியாக மலிவான விலையில் வெளிவரவுள்ள நிஸான் மேக்னைட்... காப்புரிமை படங்கள் வெளியீடு...

நிஸான் மேக்னைட் எஸ்யூவி ரெனால்ட்-நிஸான் கூட்டணியின் சிஎம்எஃப்-ஏ+ ப்ளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதே ப்ளாட்ஃபாரத்தில் தான் ரெனால்ட் கிகரும் கட்டமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கூட்டணியின் எதிர்கால தயாரிப்புகளும் இந்த ப்ளாட்ஃபாரத்தில் இருந்துதான் வெளிவரவுள்ளன.

சொனெட்டிற்கு போட்டியாக மலிவான விலையில் வெளிவரவுள்ள நிஸான் மேக்னைட்... காப்புரிமை படங்கள் வெளியீடு...

மற்றப்படி நிஸான் மேக்னைட்டில் பொருத்தப்படவுள்ள என்ஜின் குறித்து எந்த தகவலும் தற்போதைக்கு கிடைக்க பெறவில்லை. நமக்கு தெரிந்தவரையில் இந்த சப்-4 மீட்டர் எஸ்யூவி காரில் 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம்.

சொனெட்டிற்கு போட்டியாக மலிவான விலையில் வெளிவரவுள்ள நிஸான் மேக்னைட்... காப்புரிமை படங்கள் வெளியீடு...

அதிகப்பட்சமாக 100 பிஎச்பி மற்றும் 160 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு வழங்கப்பட வாய்ப்புள்ள இந்த டர்போ பெட்ரோல் என்ஜின் உடன் சப்-4 மீட்டர் எஸ்யூவி பிரிவில் நிலவிவரும் போட்டியை சமாளிக்க மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என்ற இரு விதமான கியர்பாக்ஸ் தேர்வுகளும் வழங்கப்படலாம் என தகவல்கள் கூறுகின்றன.

சொனெட்டிற்கு போட்டியாக மலிவான விலையில் வெளிவரவுள்ள நிஸான் மேக்னைட்... காப்புரிமை படங்கள் வெளியீடு...

டீசல் என்ஜின் தேர்வு இல்லாமல் பெட்ரோல் காராக வெளிவரவுள்ள இந்த நிஸான் தயாரிப்பிற்கு ஹூண்டாய் வென்யூ, கியா சொனெட், டாடா நெக்ஸான், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் உள்பட கூட்டணி ரெனால்ட் நிறுவனத்தின் புதிய கிகர் மாடலும் விற்பனையில் போட்டியாக விளங்கவுள்ளது.

Most Read Articles
மேலும்... #நிஸான் #nissan
English summary
Nissan Magnite Patent Images Leak Ahead of Launch – Brezza, Nexon Rival\
Story first published: Tuesday, September 15, 2020, 2:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X